அறிவியல் வளர்ந்தது என்றாலும், அறிவியல் மனப்பாங்கு வளரவில்லை!
‘‘இறைச்சி உண்ணாதவர்கள் இருபத்தோரு பிறவிகளில்
மிருகமாக பிறப்பார்கள்’’ – மனுஸ்மிருதி
சென்னை, பிப்.14 அறிவியல் வளர்ந்தது என்றாலும், அறிவியல் மனப்பாங்கு வளரவில்லை! ‘‘இறைச்சி உண்ணாதவர்கள் இருபத்தோரு பிறவிகளில் மிருகமாக பிறப்பார்கள்’’ – மனுஸ்மிருதியில் உள்ளதை சவார்க்கார் மேற்கோள் காட்டியதை அருண்ஷோரி எழுதிய புத்தகத்திலிருந்து தமிழர் தலைவர் ஆசிரியர் எடுத்துக்காட்டி விளக்கவுரையாற்றினார்.
‘‘அறிவியல் மனப்பாங்கும் – நாட்டின் முன்னேற்றமும்’’
சிறப்புக் கூட்டம்!
கடந்த 6.2.2025 அன்று மாலை சென்னை பெரியார் திடலில் உள்ள நடிகவேள் எம்.ஆர்.இராதா மன்றத்தில் பெரியார் நூலக வாசகர் வட்டம் சார்பில், ‘‘அறிவியல் மனப்பாங்கும் – நாட்டின் முன்னேற்றமும்’’ என்ற தலைப்பில் நடைபெற்ற சிறப்புக் கூட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் சிறப்புரையாற்றினார்.
அவரது சிறப்புரையின் நேற்றையத் தொடர்ச்சி வருமாறு:
பெரியார் இரண்டே வரியில் சொல்வார்,
‘‘பக்தி வந்தால் புத்தி போய்விடும்;
புத்தி வந்தால் பக்தி போய்விடும்.’’
வெளிச்சம் வந்தால் இருட்டு போய்விடும்;
இருட்டு வந்தால், வெளிச்சம் போய்விடும்.
அறிவியல் மனப்பான்மை என்பது எவ்வளவு தேவை என்பதை எடுத்துச் சொல்லவேண்டும்.
‘‘சயின்டிஸ்டே சொல்கிறார்; வீரமணி என்ன சயின்டிஸ்டா? அவர் சொல்வதை ஏன் நாம் கேட்க வேண்டும்? திராவிடர் கழகத்துக்காரர்கள் எப்பொழுதும் அப்படித்தான் பேசுவார்கள்’’ என்று சொன்னால், அவர்களுக்கு மட்டும் ஒரு செய்தியை சொல்கிறேன்.
‘இந்து’ பத்திரிகையில் வெளிவரும்
புத்தகங்களின் ரிவியூ!
கடந்த ஞாயிற்றுக்கிழமை ‘இந்து’ பத்திரிகையில் புத்தகங்களின் ரிவியூ வந்தது. அதில் ஒரு புத்தகம் ‘‘The New Icon : Savarkar and the Facts’ by Arun Shourie’’ – ரொம்ப நாளாக அருண்ஷோரி புத்தகம் எழுதவில்லை. அருண்ஷோரி யார் என்று உங்களுக்கெல்லாம் தெரியும். வாஜ்பேயி அரசாங்கத்தில் அரசாங்க சொத்துக்களை விற்பதற்கென்றே ஒரு அமைச்சர் இருந்தார், அவர்தான் அருண்ஷோரி. அவர்தான் இந்தப் புத்தகத்தை எழுதி யிருக்கிறார்.
அந்தப் புத்தகத்தினை வாங்கிப் படித்தேன். அவருடைய கருத்தை நாம் ஏற்றுக்கொள்கிறோமா, இல்லையா என்பது வேறு விஷயம். ஆனால், பல ஆய்வுகளைப்பற்றிச் சொல்லியிருப்பார்.
எந்தப் புத்தகமாக இருந்தாலும், வாங்கவேண்டும், படிக்கவேண்டும்; விமர்சனங்களுக்கு உரியதாக இருக்கவேண்டும் என்பதற்காக அந்தப் புத்தகத்தைப் படிக்கவேண்டும் என்று நினைத்தேன்; நேற்றுதான் அந்தப் புத்தகம் கிடைத்தது.
காந்தியார் கொலை வழக்கிலிருந்து விடுதலையானவர்!
அந்தப் புத்தகத்தில், அய்.அய்.டி. வருகிறது. ஹிந்துத்துவாவை அதிகமாகச் சொல்லி, அந்தக் கருத்துதான் நாடு முழுவதும் வரவேண்டும் என்று சொல்பவர். இன்றைக்கு பல இடங்களிலும் மிகப்பெரிய தேசபக்தர் வி.டி.சவார்க்கார் என்று சொல்லி, அவருக்கு நாடாளுமன்றத்திலும் படம் திறந்து வைத்தார்கள்.
‘The New Icon : Savarkar and the Facts’
by Arun Shourie
அவரைப்பற்றி எல்லோருக்கும் தெரியும்; காந்தி யார் கொலை வழக்கிலிருந்து விடுதலையானவர். அப்படிப்பட்ட சவார்க்காரைப்பற்றி ஒரு பெரிய ஆய்வு செய்திருக்கிறார். ஏறத்தாழ 535 பக்கங்கள். இன்னும் முழுமையாக இந்தப் புத்தகத்தைப் படிக்கவில்லை. நான் படித்ததிலிருந்து ஒரு பகுதியை உங்களுக்குச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
பசுமாட்டை வணங்குவதைப்பற்றி…
அவர்கள் விரும்புகிற சவார்க்காரே பதில் சொல்லி யிருக்கிறார், அதைச் சொல்கிறேன் கேளுங்கள்.
பசுமாட்டை வணங்குவதைப்பற்றி சொல்கிறார்,
Eating Beef? Eating Pork?
Should one eat beef? Should one eat pork? This is a matter not of religion but of your stomach, Savarkar maintained. What the doctors advise, what you can digest, what will be best for your body as you recover from an illness, these should be the determinants, according to Savarkar, not what a book says or what has been the traditional practice. The life of all – cows, dogs, horses, parrots, donkeys – is equally precious. If the cows of Bharat are so sacred, what is the harm in eating the cows of America, a country where they eat their cows in any case? Savarkar reiterated such arguments on several occasions. The cow is a useful animal so we should look after it well. But – and here we see his ‘utilitarianism’, something to which we will have occasion to return as we proceed – when kindness to it entails cost to humans, we should not: when the enemy armies used to encircle themselves with cows, these should have been killed, got out of the way so that the enemy could be dealt with. The cows of the countries of enemies are not worthy of kindness just because they are cows, he wrote. By their milk, our enemies are strengthened and not us. The cow and bullock of our country, being useful to us, should ordinarily not be eaten, but there is no harm in eating their meat like the meat of any other animal in England of America… The Example of the Lokmanya
As the controversy continued, a critic invoked the example of Lokmanya Tilak. Tilak had not eaten meat even when he was in England, the critic pointed out. Savarkar pounced back. True, Tilak had not – but that was his personal choice, what does it have to do with shastras? Savarkar asked. After all, if it was a matter of obeying the Shastras, how did Tilak cross the seas, how did he dine with malechhas (the sinful and filthy ones)? These too are forbidden. And What Does the Manusmriti Prescribe?
Savarkar was not one to leave an argument midway. He pointed out that, in fact, Manusmriti does not merely permit the eating of meat, it makes it obligatory to do so in yagyas and during shraadha. Savarkar reproduced passages from Manusmriti to show that Brahmins and Kshatriyas partook of animals and birds at many yagyas; that during shraadha, eating and serving meat is extremely shaastriya. It is an imperative duty of the Brahmin/Brahmin kaa aavashyak kartavya. Not just this, Manusmriti declares that he who does not eat meat during shraadha, will be born of an animal yoni for twney-one births…..
In a word, Savarkar said, whether one should eat meat or not is not a question to be answered by looking up a book like Manusmriti. It is to be settled by what medical science says today and what suits the physical constitution of the person……
Source: ‘The New Icon : Savarkar and the Facts’ by Arun Shourie (Page 11 – 14)
இதன் தமிழாக்கம் வருமாறு:
மாட்டிறைச்சியும், பன்றி இறைச்சியும்!
மாட்டிறைச்சியானாலும், பன்றி இறைச்சியா னாலும் அவற்றை உண்பது மதம் சார்ந்த விஷயமல்ல – நம் வயிற்றுப்பசியைச் சார்ந்த விஷயம். மருத்துவர்கள் எப்படிப்பட்ட உணவை உட்கொள்ளும்படி நமக்கு ஆலோசனை வழங்கு கிறார்களோ அதன்படி உண்பதில் தவறில்லை. நம்மால் எதை ஜீரணிக்க முடியுமோ அதை உண்பதை எவரும் தடுக்க முடியாது. உடல்நலம் குன்றிய நிலையில் இருந்தபின், குணமாகி வந்ததும் நம் உடலுக்கு ஏற்ற உணவு எது என்பதை, நாம் தான் தீர்மானிக்க வேண்டும் என்று சவார்க்கார் கூறுகிறார். தொன்று தொட்டு கடைப்பிடிக்கப்பட்டு வரும் உணவுப்பழக்கங்களோ, புத்தகங்களில் இடம் பெறும் அறிவுரைகளோ முக்கியமல்ல. நமக்கு உகந்த உணவு எது என்பதை முடிவு செய்யவேண்டியது நாம் மட்டுமே; வேறு எவரும் அல்ல.
மாடுகள் மட்டுமல்ல – நாய்கள், குதிரைகள், கழுதைகள் போன்ற உயிரினங்களின் பாதுகாப்பும் முக்கியம்தான். பாரத நாட்டு மாடுகள் மட்டும் ‘புனித’மானவை என்றால், அமெரிக்க மாட்டின் இறைச்சியை உண்பதில் என்ன தவறு? மாட்டிறைச்சி அமெரிக்கர்களால் உண்ணப்படுவது தெரிந்த விஷயம் தானே? இந்தக் கூற்றை சவார்க்கார் பல நேரங்களில் எடுத்தாளுகிறார். (சவார்க்கார் சமக்ரா தொகுதி VIII – பக்கம் 554–55).
மாடுகள் பயனுள்ள உயிரினம் தான். அவற்றை நன்கு பராமரித்தால் போதும். வணங்கி வழிபட வேண்டிய அவசியமில்லை.
பசுக்களும், காளை மாடுகளும் நமக்குப் பயன்படும் உயிரினங்களாக இருந்தாலும், இங்கிலாந்திலும், அமெரிக்காவிலும் வளர்க்கப்பட்ட பிராணிகளின் மாமிசத்தை உண்பது போலவே, இங்குள்ள மாடுகளின் இறைச்சியையும் உண்பதில் தவறில்லை என சவார்க்கார் கூறியிருக்கிறார். (சவார்க்கார் சமக்ரா தொகுதி VIII பக்கங்கள் 424–47). லோகமான்ய திலகர் – எடுத்துக்காட்டு:
திலகர் இங்கிலாந்தில் இருந்த காலக் கட்டத்தில் இறைச்சி உண்டதில்லை என்கிறார்கள். அது அவருடைய சொந்த விருப்பு – வெறுப்பு சார்ந்த விஷயம். அதற்கும் சாஸ்திரங்களுக்கும் என்ன சம்பந்தம்? சாஸ்திரங்களுக்கு கீழ்படிந்து அவர் இறைச்சி உண்ணவில்லை என்றால் கடல் கடந்து ஏன் சென்றார்? ‘பாவப்பட்ட ஜீவன்க ளாக’வும், இழிப்பிறவிகளாகவும் கருதப்பட்ட மிலேச்சர்களுடன் சரிசமமாக அமர்ந்து எப்படி உணவருந்தினார்? (சவார்க்கார் சமக்ரா தொகுதி VIII பக்கங்கள் 472–73).
‘‘இறைச்சி உண்ணாதவர்கள் இருபத்தோரு பிறவிகளில் மிருகமாக பிறப்பார்கள்’’ – மனுஸ்மிருதி!
இறைச்சி உண்பதை மனுஸ்மிருதியே ஆத ரித்துள்ளது. யாகங்களின் போதும் இறந்தவர்களுக்கு சடங்குகள் செய்யும்போதும் இறைச்சி உண்பதை அது கட்டாயப்படுத்துகிறது. அத்தகைய சடங்கு களின் (ஸ்ரதா) போது இறைச்சி உணவையும், மீன் உணவையும் பார்ப்பனர்கள் உட்கொள்ள வேண்டியது கட்டாயமாக இருந்துள்ளது. ‘‘இறைச்சி உண்ணாதவர்கள் இருபத்தோரு பிறவிகளில் மிருகமாக பிறப்பார்கள்’’ என்கிறது மனுஸ்மிருதி.
இறைச்சி உண்ணலாமா? கூடாதா? என்பதை முடிவு செய்துகொள்ள, நாம் மனுஸ்மிருதியைப் புரட்டிப் பார்க்க வேண்டிய அவசியமில்லை. மருத்துவ உலகமும், அறிவியலும் என்ன சொல்கி றதோ அதையே நாம் பின்பற்ற வேண்டும். ஒரு தனிமனிதன், தன் உடலுக்கு உகந்தது எதுவோ அதை உண்ணலாம். அதைத் தடுக்கும் உரிமை எவருக்கும் இல்லை. (சவார்க்கார் சமக்ரா தொகுதி VIII பக்கங்கள் 437–44).
‘‘அருண்ஷோரி யார் என்றால், வடநாட்டு சோ; சோ யார் என்றால், வடநாட்டு அருண்ஷோரி!’’
இந்தப் புத்தகத்தை எழுதியவர் பி.ஜே.பி.க்காரர். வாஜ்பேயி அரசாங்கத்தில் அமைச்சராக இருந்தவர். இன்னமும் இருக்கக்கூடியவர்.
அவரைப்பற்றி நான் சுருக்கமாக சொல்லும்பொழுது, ‘‘அருண்ஷோரி யார் என்றால், வடநாட்டு சோ. சோ யார் என்றால், வடநாட்டு அருண்ஷோரி.’’
‘‘மனிதனுடைய மூத்திரத்தில்கூட மருத்துவ சக்திகள் இருக்கிறது என்கிறார்கள். அதனால், எல்லோரும் அதைக் குடித்துக் கொண்டிருக்க முடியுமா?’’ என்று கேட்கிறார். இப்படி கேட்பது நாங்கள் அல்ல. சவார்க்கார்.
அதேபோல, விஷத்தில்கூட சக்தி இருக்கிறது. ஆகவே, விஷத்தை நீங்கள் குடிங்கள் என்று சொல்ல முடியுமா?
எதற்காக இதைச் சொல்கிறோம் என்றால், இந்த காலகாலத்தில், எப்படியெல்லாம் மக்களை ஏமாற்று கிறார்கள் என்பதைப் பாருங்கள்.
அறிவியல் வளர்ந்தது என்றாலும், அறிவியல் மனப்பாங்கு வளரவில்லை!
ஒரு பக்கம் அறிவியல்; இராக்கெட்டின்மூலமாக சென்று, விண்வெளியில் இறங்குகிறார்கள். மேலும் மேலும் வளர்ச்சி பெற்று வருகிறோம். இவ்வளவு வளர்ச்சி பெற்றாலும், அறிவியல் வளர்ந்தது என்று சொல்லலாமே தவிர, அறிவியல் மனப்பாங்கு வளரவில்லை.
அறிவியல் மனப்பாங்கு வந்தால்தான், நாட்டினுடைய வளர்ச்சியும், முன்னேற்றமும் இருக்க முடியும்.
அவரே சொல்கிறார்; படித்தவரே சொல்கிறார் என்று சொல்வார்கள். ஏனென்றால், மக்களை ஏமாற்றுவதற்காக இப்படிச் சொல்வார்கள்.
இதைத்தான் மிகத் தெளிவாக இங்கே சுட்டிக் காட்டக்கூடிய அளவிற்கு, அறிவியல் பூர்வமாக, ஓர் அறிவியல் துறையில், கடல்சார் பல்கலைக் கழகத்தில் துணைவேந்தராக இருந்து, ஆளுமைகளில் பல வகையில் ஈடுபட்டிருக்கக் கூடிய ஒரு சிறப்புமிகுந்த ஆய்வறிஞர்.
சில நாள்களுக்கு முன்பு ஜோதிடத்தைப்பற்றி மிக அருமையாகப் பேசியிருந்தார். அதில் பல செய்திகளைச் சொல்லியிருந்தார்.
அசோக்வர்தன் ஷெட்டி அவர்களை நாம் பாராட்ட வேண்டும்.
பெரியார் திடலுக்கு வந்து பேசுவதற்கே ஒரு தைரியம் வேண்டும்!
அய்.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிலிருந்து ஓய்வு பெற்றவுடன், ஓய்வூதியம் வாங்கிக்கொண்டு வீட்டில் உட்கார்ந்திருப்பார்கள். தப்பித்தவறி அவர்கள் பொது வாழ்க்கைக்கு வந்தாலும், எந்தப் பக்கம் காற்றுப் பலமாக இருக்கிறதோ, அந்தப் பக்கமே நாம் போகவேண்டும் என்று நினைப்பார்களே தவிர, எதிர்நீச்சல் அடித்து வரவேண்டும் என்கிற தைரியம், நம்முடைய அசோக்வர்தன் ஷெட்டி போன்றவர்களுக்குத்தான் உண்டு. முதலில், பெரியார் திடலுக்கு வந்து பேசுவதற்கே ஒரு தைரியம் வேண்டும்.
பல பேர் என்ன நினைக்கிறார்கள் என்றால், ஓய்வு பெற்றுவிட்டேமே என்று. ஓய்வு என்பது பதவிக்குத்தான். மக்களுக்குத் தொண்டு செய்வதற்கு ஓய்வு கிடையாது.
இப்போது அசோக்வர்தன் ஷெட்டி செய்கின்ற தொண்டு இருக்கிறதே, அதைப் பாராட்டுவதற்கு வார்த்தைகளே இல்லாத அளவிற்குச் சிறப்பான தொண்டாகும்.
இது அறிவார்ந்த அரங்கம். சொல்லக்கூடிய கருத்து மக்களைச் சென்றடையவேண்டும். நாங்கள் சொன்னால் என்ன சொல்வார்கள், திராவிடர் கழகத்துக்காரர்கள் இப்படித்தான் சொல்வார்கள் என்று ஒரு முத்திரையைக் குத்திவிடுவார்கள். ஆனால், இவருக்கு அந்த முத்திரை யைக் குத்த முடியாது.
எனவேதான், அறிவியல் மனப்பாங்கு என்பது ஓங்கி வளர்ந்தால்தான், நம்முடைய நாடு வளரும்.
நாம் என்ன சாப்பிடவேண்டும் என்பதை இன்னொருவர் முடிவு செய்வதா?
ஒரு பக்கத்தில் ஜாதிக் கலவரம்; இன்னொரு பக்கம் மதக்கலவரத்தை உண்டாக்குகிறான். நம்முடைய உடல், நமக்குச் சொந்தமில்லை என்று நினைக்கிறான்.
நாம் என்ன சாப்பிடவேண்டும் என்பதை இன்னொருவர் முடிவு செய்வதா? நாம் என்ன உடை அணியவேண்டும் என்பதை இன்னொருவர் முடிவு செய்வதா?
இதுதான் அறிவியல் மனப்பாங்கு.
ஆகவேதான், சுதந்திரம், சுதந்திரம் என்று சொல்லும்பொழுது, நம்முடைய சுதந்திரத்தையே நாம் இழந்து வரக்கூடிய நிலையில், அதைத் தடுப்பதற்கான ஒரு பாதுகாப்பு அரண்தான், சிந்தனை வட்டம்தான் இந்த அறிவியல் மனப்பாங்கு.
அதைப்பற்றி அசோக் வர்தன் ஷெட்டி அவர்கள் விளக்கமாக உரையாற்றுவார்கள்.
வாழ்க பெரியார்!
வளர்க பகுத்தறிவு!
நன்றி, வணக்கம்
– இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரை யாற்றினார்.