டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* மணிப்பூரில் குடியரசு தலைவர் ஆட்சி அமலுக்கு வந்தது. மணிப்பூரில் நிலைமையை சீராக்க முடியாததால் முதலமைச்சர் பதவியை பைரன் சிங் கடந்த பிப்.9இல் பதவி விலகினார். மணிப்பூரில் அடுத்த முதலமைச்சர் வேட்பாளரை பாஜக தேர்வு செய்ய முடியாத நிலை உருவானது. மணிப்பூரில் முழுநேர முதலமைச்சர் இல்லாததால் 6 மாதங்களுக்குள் -பேரவையை கூட்ட வேண்டும் என்ற காலக்கெடு நேற்றுடன் (13.2.2025) முடிந்தது. இந்நிலையில் மணிப்பூரில் குடியரசு தலைவர் ஆட்சி அமலுக்கு வந்துள்ளது.
* வக்பு திருத்த மசோதா தாக்கல் எதிர்க்கட்சிகள் அமளியால் நாடாளுமன்றம் முடங்கியது
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* கும்பமேளா செல்லும் ரயில் ஏசி பெட்டிகளின் கண்ணாடிகள் உடைப்பு; வன்முறை நடந்து முடிந்தவுடன், தற்போது ரயில்வே பாதுகாப்புப் படை வழக்குப் பதிவு செய்துள்ளது.
தி இந்து:
*அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி பதவி நீக்கம்: ‘நாடாளுமன்றம், குடியரசுத் தலைவருக்குத் தான் அதிகாரம்’ – ஜக்தீப் தன்கர் கருத்து.
* எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடு முறையாக இல்லை; பட்ஜெட்டில் மாநிலங்களின் கோரிக்கைகளை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் புறக்கணித்ததாக எம்.பி.க்கள் குற்றம் சாட்டி, வெளிநடப்பு.
டைம்ஸ் ஆப் இந்தியா:
* ராஜஸ்தான் கல்வித் துறை, ஜெய்ப்பூரில் உள்ள ஒரு அரசுப் பள்ளிக்கு, உருதுவை மூன்றாவது மொழியாக வழங்கும் பாடத்தில் வகுப்புகளை நிறுத்தி, சமஸ்கிருதத்தை ஒரு விருப்பமாக அறிமுகப்படுத்த வேண்டும் என உத்தரவு. சமஸ்கிருத ஆசிரியர் பணியிடங்களை உருவாக்கவும், உருது (வகுப்புகளை) மூடவும் கல்வி அமைச்சர் உத்தரவு.
* தெலங்கானா அமைச்சரவையில் இரண்டாவது துணை அமைச்சர் பிற்படுத்தப்பட்டோரில் இருந்து நியமனம் செய்ய முதலமைச்சர் யோசனை; ஜாதிவாரி சர்வேயில் பிற்படுத்தப்பட்டோர் 43 சதவீதம் என்ற நிலையில் பிரதிநிதித்துவம் அளிக்க முடிவு.
.- குடந்தை கருணா