மாவட்ட கழகத் தோழர்கள் கூட்டத்தில் முடிவு
செங்கல்பட்டு, பிப். 11- செங்கல்பட்டு கழக மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் 08-02-2025 அன்று மாலை 6.00 மணி அளவில் செங்கல்பட்டு புத்தர் அரங்கில் மாவட்டத் தலைவர் அ.செம்பியன் தலைமையில் மாவட்ட செயலாளர் ம.நரசிம்மன் வரவேற்பு உரையுடன், மாநில ஒருங்கிணைப்பாளர் வி.பன்னீர் செல்வம் கருத்துரையுடன் மிக எழுச்சியாக நடைபெற்றது.
தீர்மானங்கள்
செங்கல்பட்டு மாவட்டத்தில் கிளைகள் இல்லாத பகுதிகளில் புதிய கிளைகளை அமைப்பது,
விடுதலை, உண்மை ஏடு களுக்கு சந்தா சேர்ப்பது,
மாவட்டம் முழுவதும் தெரு முனை கூட்டங்கள் நடத்துவது,
தந்தோறும் இரண்டாவது சனிக்கிழமை மாலை 5 மணிக்கு மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் நடத்துவது,
மறைமலைநகர் நகர செயலா ளராக பேரமனூர் விஜயராகவனை நியமித்து தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.
கலந்துரையாடல் கூட்டத்தில் பகுத்தறிவு கலைத் துறை மாநில தலைவர் மு.கலைவாணன், மாநில இளைஞர் அணி துணைச் செயலாளர் மு.அருண்குமார், மாவட்ட இளைஞரணி செயலாளர் செ.வினோத்குமார், மறைமலைநகர் தலைவர் ம.வெங்கடேசன், செங்கல்பட்டு நகர தலைவர் தமிழ்மணி, பொன்.ராஜேந்திரன், கல்பாக்கம் செ.சாலமன், மாவட்டத் துணைச் செயலாளர் ப.முருகன், பகுத்தறிவாளர் கழக மாவட்ட தலைவர் அ.சிவக்குமார், மாவட்ட செயலாளர் சி. தீனதயாளன், மாவட்ட அமைப்பாளர் மு.பிச்சைமுத்து, பகுத்தறிவாளர் கழக மாவட்ட துணைத் தலைவர் சகாயராஜ், மாவட்ட துணை செயலாளர் வி.வசந்தன், புத்தர் அரங்கம் ஓவியர் வீரமணி உள்ளிட்ட தோழர்கள் கலந்து கொண்டு தங்கள் கருத்துகளை எடுத்துரைத்தனர், மாவட்டத் துணைச் செயலாளர் ப.முருகன் நன்றி உரையுடன் கூட்டம் இனிதே நிறைவு பெற்றது.