பழனி, பிப். 10- நேற்று (9.2.2025) மாலை 6 மணிக்கு பழனி அமரபூண்டி இந்திரா நகர் ப.பாலசுப்ரமணியன் இல்லத் தில் புதிய மாணவர்கள் – இளைஞர் களுடன் சந்திப்புக்கூட்டம் உற்சாகம் பொங்க நடைபெற்றது. கழக மாநில ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடு.இரா.குணசேகரன் பங்கேற்று அறிவாசான் தந்தை பெரியார், தமிழர் தலைவர் ஆசிரியர் ஆகியோரது அளப்பரிய தொண்டால் பெற்றிருக்கும் உரிமை களையும்,பார்ப்பன சூழ்ச்சிகளால் அடைந்திருக்கும் இழிவினைப் போக்கவேண்டிய அவசியத்தை விளக்கியும் கலந்துரையாடினார்.
கோரிக்கடவு பெரியாரியல் பயிற்சிப் பட்டறையில் பங்குபெற்ற .பாலசுப்ரமணியன், ம.மாயவன் ஆகியோருக்கு திண்டுக்கல் மாவட்டத்தலைவர் இரா.வீரபாண்டி சான்றிதழ் வழங்கி பாராட்டு தெரி வித்தார்.
பழனி மாவட்டச் செயலாளர் பொன்.அருண்குமார்,மாவட்டத் துணைத்தலைவர் ஆ.இராமகிருட்டி ணன், மாவட்ட துணைச்செயலாளர் வழக்குரைஞர் பி.ஆனந்தன் , மூவரும் மாணவர்கள் இளைஞர்களுக்கு கழக வெளியீடுகளை வழங்கி கருத்துரை வழங்கினார்கள்.
உரத்தநாடு ரெ.ரஞ்சித்குமார், ஊற்றங்கரை சரவணன் ஆகியோர் கொள்கை விளக்க குறிப்புகளை வழங்கினார்கள்.
27.2.2025 அன்று பழனி பொதுக்கூட்டத்திற்கு வருகைதரும் தமிழர் தலைவர் ஆசிரியருக்கு அமரபூண்டி கழகம் சார்பில் வரவேற்பளித்து புதிய தோழர்களை கழகத்தில் இணைத்துக்கொள்வது என முடிவு செய்யப்பட்டது.