சென்னை, பிப். 9- 9.2.2025 ஞாயிறு காலை 10 மணிக்கு வடசென்னை மாவட்டம் கொளத்தூர் ஏ.எம்.பி.எஸ் அரங்கில் ஒரு நாள் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை தொடங்கியது.
அனைவரையும் வரவேற்று வடசென்னை மாவட்ட செயலா ளர் தளபதி பாண்டியன் உரையாற் றினார். தலைமைச் செயற்குழு உறுப்பினர் தே.செ.கோபால் தலைமையேற்று உரையாற்றினார்.
செயலவைத் தலைவர் வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி, மாநில ஒருங்கிணைப்பாளர் வி.பன்னீர்செல்வம், மாநில மகளிர் பாசறை செயலாளர் பா.மணியம்மை, மாநில இளைஞரணி துணைச்செயலாளர் சோ.சுரேஷ், வடசென்னை மாவட்ட காப்பாளர் கி.இராமலிங்கம், வடசென்னை மாவட்ட துணை தலைவர் நா.பார்த்திபன், வடசென்னை மாவட்ட துணை செயலாளர் வ.தமிழ்செல்வன், பொதுக்குழு உறுப்பினர் தி.செ.கணேசன், ஆகியோர் முன்னிலை ஏற்று உரையாற்றினர்.
திராவிடர் கழகப்பொருளாளர் வீ.குமரேசன் பெரியாரியல் பயிற்ச்சிப் பட்டறையை தொடங்கி வைத்து உரையாற்றினார்.
பார்ப்பனப் பண்பாட்டு படையெடுப்பு என்ற தலைப்பில் திராவிடர் கழக துணை தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் அவர்கள் முதல் வகுப்பை தொடங்கினார்.
‘சமுக நீதி வரலாறு’ என்ற தலைப் பில் கோ.கருணாநிதி அவர்களும் ‘ஹிந்து, ஹித்துவா, ஆர்.எஸ்.எஸ்’ என்ற தலைப்பில் திராவிடர் கழக தலைவர், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களும், ‘மதவெறியை மாய்ப்போம், மனிதநேயம் காப்போம் ’ என்ற தலைப்பில் கழக பிரச்சார செயலாளர் வழக்குரைஞர் அ.அருள்மோழியும், ‘தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் சாதனைகள் ’என்ற தலைப்பில் எழுத்தாளர் மஞ்சை வசந்தனும், ‘இந்திய அரசியல் சட்டமும் திராவிடர் கழகமும்’ என்ற தலைப்பில் வழக்குரைஞர் சு.குமாரதேவனும், ‘தந்தை பெரியா ரின் பெண்ணுரிமை சிந்தனைகள்’ என்ற தலைப்பில் வழக்குரைஞர் சே.மெ.மதிவதனியும், ‘தந்தை பெரியார் மீதான அவதூறுகளுக்கு பதிலடி’ என்ற தலைப்பில் ச.பிரின்சு என்னாரெசு பெரியாரும் வகுப்பு எடுத்தனர்.
மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார் பெரியாரியல் பயிற்சிப் பட்டறையை ஒருங்கிணைத்து நடத்தினார்.
மாலையில் பயிற்சியில் பங்கேற்ற மாணவர்களுக்கு சான்றி தழ்கள் வழங்கி திராவிட கழக பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் பாராட்டுரை வழங்குகிறார்.
வடசென்னை மாவட்ட செயலாளர் புரசை க.அன்புச் செல்வன் பொறுப்பாளர்களுடன் இணைந்து ஏற்பாடுகளை ஒருங் கிணைத்து வருகிறார்.
பகுத்தறிவாளர் கழகப் பொதுச் செயலாளர் வெங்கடேசன், பெரியார் சுயமரியாதை திருமண நிலைய இயக்குநர் பசும்பொன் செந்தில் குமாரி, சோழிங்கநல்லூர் மாவட்ட தலைவர் பாண்டு, தங்கமணி. தங்க. தனலட்சுமி, வடசென்னை மாவட்ட மகளிர் பாசறை அமைப்பாளர் மரகதமணி, செம்பியம் கோபால், தொழில்நுட்பக் குழு ஒருங்கிணைப்பாளர் வி.சி. வில்வம், ஓட்டேரி பாஸ்கர், ஆவடி மாவட்ட துணை தலைவர் வை.கலையரசன், ஆவடி மாவட்ட இளைஞரணி தலைவர் சோபன்பாபு, தென் சென்னை மாவட்ட மகளிர் அணி தலைவர் பவானி, ப.க ஊடகப்பிரிவு செயலாளர் முருகேசன், தஞ்சை மாநகர துணை செயலாளர் இரா.இளவரசன் ஆகியோர் பயிற்சிப் பட்டறைக்கான பணிகளை செய்து வருகின்றனர்.