பூவிருந்தவல்லி நகர கழக தலைவர் பெரியார் மாணாக்கன் விபத்து ஏற்பட்டு சிகிச்சைக்குப் பிறகு உடல் நலம் தேறி வரும் அவரை ஆவடி மாவட்ட கழகத் தலைவர் வெ.கார்வேந்தன் தலைமையில், கழக தோழர்கள் 5.02.2025 அன்று இரவு 7 மணிக்குச் சந்தித்து நலம் விசாரித்தனர்.
பின்னர் 8.30 மணிக்கு உடல் நலக் குறைவால் சிகிச்சை பெற்று வரும் கடலூர் மாவட்ட கழக மகளிரணி மேனாள் தலைவர் சீனியம்மாளின் மகள் பகுத்தறிவையும் சந்தித்து நலம் விசாரித்தனர். உடன் ஆவடி மாவட்ட கழக செயலாளர் க.இளவரசன், துணைத் தலைவர் மு.ரகுபதி, துணைச் செயலாளர் பூவை தமிழ்ச்செல்வன், ஆவடி மாவட்ட கழக மகளிரணி தலைவர் பூவை செல்வி, மாநில மாணவர் கழகத் துணை செயலாளர் செ.பெ.தொண்டறம், மாவட்ட கழக இளைஞரணி தலைவர் சு.வெங்கடேசன், தாம்பரம் நகர கழக செயலாளர் சு.மோகன்ராஜ், அரும்பாக்கம் சா.தாமோதரன், சந்திரபாபு, பூவை சந்தோஷ் ஆகியோர் நலன் விசாரித்தனர்.