தஞ்சாவூர்,பிப்.1 உயர்கல்வியில் தமிழ்நாடு முந்துவதற்கு ஒன்றிய அரசு முட்டுக்கட்டை போடு கிறது என்று குற்றம்சாட்டிய உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன், துணை வேந்தர் நியமனத்தில் மாநில அரசு தேர்வு செய்த நபரை ஏற்றுக்கொள்வது தான் ஆளுநருக்கும், அவரது பத விக்கும் அழகு என்று தெரி வித்தார்.
ஒன்றிய அரசின் பல்கலைக்கழக மானியக் குழு திருத்தச் சட்ட வரைவைத் திரும்பப் பெற வலி யுறுத்தி தஞ்சாவூர் கீழ ராஜ வீதியில் உள்ள தனியார் கணினி மய்யத்தில் மாணவர்கள் மின்னஞ்சல் அனுப்பும் போராட்டம் 30.1.2024 அன்று நடபெற்றது. இதில் பங்கேற்ற அமைச்சர் பின்னர் செய்தியாளர்க ளிடம் கூறியதாவது:
எந்த வகையில் நியாயம்?
ஒன்றிய அரசின் பல்கலைக்கழக மானியக் குழு திருத்தச் சட்ட வரைவில் மாணவர்களின் நல னில் உயர்கல்வியில் மிகுந்த சீரழி வைத் தரும் என்பது வேதனை. தமிழ்நாடுதான் உயர் கல்வியில் முதலிடத்தில் இருக்கிறது. இதே போல, தமிழ்நாட்டில்தான் முனைவர் பட்டம் பெற்றவர் கள் அதிக அளவில் உள்ளனர். பல்க லைக்கழகத் துணைவேந்தராகக் கல்வியாளர்கள்தான் இருக்க வேண்டும் என்ற நிலை தமிழகத்தில் உள்ளது. இந்தப் புதிய வரைவுக் கொள்கையில் கல்வியாளர் அல்லாதவரும் வரலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
பல்க லைக்கழக உரிமையைப் பறித்து, மாணவர் நலனைக் கெடுத்து, துணைவேந்தர் தேர்வுக் குழுவில் மாநில அரசின் பிரதிநிதியை இடம்பெறாமல் செய்வது எந்த வகையில் நியாயம்?
தமிழ்நாடு அரசு உயர்கல்வியில் முந்து வதை ஒன்றிய அரசும், பல்கலைக்கழக மானியக் குழு வும் முட்டுக்கட்டை போடுகின்றன. அதைத் தடுக்கும் முயற்சியில் தமிழ்நாடு முதலமைச்சர் ஈடு பட்டுள்ளார். மாணவர்களும் ஆங்காங்கே தன்னெழுச்சியாக தாங்களாகவே முன் வந்து, புதிய வரைவு கொள்கையைத் திரும்பப் பெறு, மாநில உரிமையைப் பறிக்காதே என்கிற வாசகங்கள் அடங்கிய செய்திகளை ஒன்றிய அரசுக்கு அனுப்பி வருகின்றனர். மாணவர்கள் ஏற்படுத்தி வரும் பெரும் எழுச்சி மூலம் புதிய வரைவு கொள்கை தடுத்து நிறுத்தப்படும். அதைக் காக்கும் பொறுப்பைத் தமிழ்நாடு முதல்வர் மேற்கொள்வார்.
அண்ணாமலைப் பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல்கலைக்கழகங்களில் புதிய துணைவேந்தர் நியமனத்துக்கு 3 பேர் கொண்ட தேடுதல் குழுவை அமைத்து ஆளுநருக்கு தமிழ்நாடு அரசு அனுப்பியது. ஆனால், மதுரை காமராசர் பல்கலைக்கழ கத்துக்கு அனுப்பியதை ஆளுநர் ரத்து செய்துள்ளார். மாநில அரசு தேர்வு செய்த நபரை ஏற்றுக் கொள்வதுதான் ஆளுநருக்கும், அவரது பதவிக்கும் அழகு. மாறாக ஏற்றுக் கொள்ளமாட்டோம் என அடம்பிடிப்பது, ஒன்றிய பாஜக அரசின் கைப்பாவையாக இருப்பது போன்றவை ஆளுநராக இருப்பதற்கான தகுதியை இழந்திருப்பதே மாணவர்களின் ஒட்டுமொத்த கண்டனக் குரலாக இருக்கிறது. நீதிமன்றத்தில் நிலு வையில் உள்ள வழக்கு பிப்ரவரி 4 ஆம் தேதி விசாரணைக்கு வரு கிறது. அதன் பிறகாவது ஆளுநர் திருந்து வாரா என எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.