மதுரை, நவ. 15- ராஜீவ்காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்டு திருச்சி முகாமில் அடைக்கப்பட்டுள்ள ராபர்ட் பயஸ் உள்ளிட்ட இருவர் தங்களை விடுவிக்கக் கோரி உயர் நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்தனர்.
இதுதொடர்பாக ராபர்ட் பயஸ் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
மேனாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 32 ஆண்டுகள் சிறைவாசத்துக்குப் பின் 11.11.2022இ-ல் உச்ச நீதி மன்றத்தால் விடுதலை செய்யப் பட்டேன். சிறையிலிருந்து விடு விக்கப்பட்ட நாளில் இருந்து கொட்டப்பட்டு இலங்கை அகதிகள் முகாமில் தங்கியுள் ளேன்.
இந்த முகாம் சிறையைவிட மோசமானது. அறையை விட்டு வெளியே வரவும், மற்றவர்க ளுடன் பழகவும் அனுமதிப்ப தில்லை. சிறையிலிருந்து விடு தலையான பிறகும் அதே நிலை தொடர்வதால் மன உளைச்ச லுக்கு ஆளாகி உள்ளேன்.
முகாமில் இருந்து விடுதலை செய்யக் கோரி முகாம் அதிகாரி களிடம் கேட்டபோது இலங் கைக்கு நாடு கடத்த நடவடிக்கை எடுக்கப்படுவதாகத் தெரிவித் தனர்.
என்னை இலங்கைக்கு அனுப் புவது மரண தண்டனைக்கு ஈடானது. இலங்கைக்கு நாங்கள் சென்றால்கண்டிப்பாக கொலை செய்யப்படுவோம்.
எனவே, நான் இலங்கை செல்ல விரும்பவில்லை. என் மனைவி, மகன், சகோதரி ஆகி யோர் நெதர்லாந்தில் வசித்து வருகின்றனர். என்னை முகாமி லிருந்து விடுவித்தால் எஞ்சியிருக்கும் வாழ்நாளை நெதர் லாந்தில் உள்ள என் குடும்பத் தினருடன் கழிப்பேன்.
இதனால் என்னை கொட் டப்பட்டு முகாமிலிருந்து விடு வித்து, நெதர்லாந்து அல்லது வேறு நாட்டுக்குச் செல்ல அனு மதிக்க உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டி ருந்தது.
அதேபோல, ஜெயக்குமார் தாக்கல் செய்த மனுவில், தன்னை முகாமிலிருந்து விடுதலை செய்து சென்னையில் உள்ள தனது குடும்பத்தினருடன் வாழ அனுமதிக்க வேண்டும் எனக் கூறியுள்ளார். இந்த மனுக்கள் இன்று விசாரணைக்கு வரு கின்றன.