சுயமரியாதை சுடரொளி முரட்டு சுயமரியாதைக்காரர் என்று தோழர்களால் அன்பாக அழைக்கப்பட்ட சோலையார்பேட்டை கே. கே. சின்னராசு அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு இன்று (30.01.2025) காலை 7.00 மணிக்கு திருப்பத்தூர் மாவட்ட தலைவர் கே.சி. எழிலரசன் இல்லத்தில் நடைபெற்றது. காமராஜர் அறக் கட்டளை தலைவர் கணேஷ்மல், ரோட்டரி சங்க தலைவர் வெங்கடேசன் மற்றும் திராவிடர் கழகத் தோழர்கள் பங்கேற்று படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.