கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

2 Min Read

29.1.2025
டெக்கான் கிரானிக்கல், சென்னை:
* திராவிடம் இருப்பதால்தான் ஆதிக்க சக்தி, பிற்போக்கு கும்பல்களால் தலை தூக்க முடியவில்லை. இன்று நவீன தமிழ்நாட்டை உருவாக்கியது திராவிட மாடல்தான். – விழுப்புரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு.
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* மணிப்பூர் வன்முறைக்கு பாஜக முதலமைச்சர் பைரன் சிங் பேச்சுதான் காரணம்; ஆடியோ பதிவை சுட்டிக்காட்டி உச்ச நீதிமன்றம் தங்கள் மனுவை விரைவில் விசாரிக்க குக்கி இன மக்கள் கோரிக்கை.
தி ஹிந்து:
* உத்தரபிரதேசம் பிரயாக்ராஜில் (அலகாபாத்) நடந்த கும்ப மேளாவில் கூட்ட நெரிசலில் குறைந்தது ஏராளமானோர் இறந்துள்ளதாக ஏஎப்பி செய்தி வெளியிட்டுள்ளது.
* செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பத்தில் புதிய புரட்சி; மலிவான விலையில் அபாரமான திறன் படைத்தது ஏஅய் சிப்களுக்கு தடை விதித்தும் சாதித்தது எப்படி? அமெரிக்காவை அலறவிட்ட சீனாவின் டீப் சீக்.
* ‘ஹிந்து தேசியவாதம் மற்றும் காலிஸ்தான் தீவிரவாதம் இங்கிலாந்தில் புதிய அச்சுறுத்தல்களாக உள்ளன’ என இங்கிலாந்து நாட்டின் உள்துறை அலுவலக அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளதாக தகவல்.
* பீகாரின் அய்க்கிய ஜனதா தளம் கட்சியின் மேனாள் மாநிலங்களவை உறுப்பினர் அலி அன்வர் அன்சாரி மற்றும் ‘மலை மனிதன்’ தஷ்ரத் மஞ்சியின் மகன் பகீரத் மஞ்சி ஆகியோர் காங்கிரசில் சேர்ந்தனர்.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* ‘ஷார்ட்ஸ் அல்லது உடல் அங்கிகளை வெளிப் படுத்தும் ஆடைகள் கூடாது’: சித்திவிநாயகர் கோவி லில் ஆடைக் கட்டுப்பாடு. கோவில் அறக்கட்டளை வெளியிட்ட அறிக்கையில், “பக்தர்கள் அடக்கமான இந்திய பாரம்பரிய உடைகளை அணிய வேண்டும். தனிநபர்கள் உடலை முழுமையாக மறைக்கும் ஆடைகளை அணிய வேண்டும் என்று விதிகள் கட்டளையிடுகின்றன” என தெரிவித்துள்ளது.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் தொடக்க வகுப்புகளுக்கு ஸ்மார்ட் வகுப்பறைகளை நிறுவும் மாநிலத்தின் திட்டத்தின் நிறைவைக் குறிக்கும் வகையில், பள்ளிக் கல்வி அமைச்சர் அன்பில் மகேளஸ் பொய்யாமொழி திங்கட்கிழமை ஒக்கியம் துரைப்பாக்கத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிக்கான 22,931ஆவது ஸ்மார்ட் வகுப்பறையை திறந்து வைத்தார்.
டைம்ஸ் ஆப் இந்தியா:
* உயர்கல்வி நிறுவனங்களுக்கான யு.ஜி.சி.யின் சமீபத்தில் முன்மொழியப்பட்ட வரைவு வழிகாட்டுதல்களுக்கு எதிராக திமுக ஒரு இணையதள பிரச்சாரத்தை தொடங்கியது, மக்கள் மின்னஞ்சல்களை அனுப்பவும் சமூக ஊடகங்களில் செய்திகளை இடுகையிடவும் வலியுறுத்தியுள்ளது.

.- குடந்தை கருணா

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *