நெய்வேலி அஞ்சல்துறை அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்றவரும், இறுதி மூச்சு அடங்கும் வரை பெரியாரிஸ்டாகவும் வாழ்ந்து மறைந்த சுய மரியாதைச் சுடரொளி
திரு. நாராயணசாமி அவர்களின் வாழ்விணை யரும், கழகப் பொதுச் செய லாளர் முனைவர் துரை. சந்திரசேகரன் அவர்களின் மாமியாருமான லீலாவதி அம்மையார் (வயது 95) அவர்கள் வடலூரில் தமது மகள் கலைச்செல்வி சந்திரசேகரன் இல்லத்தில் இன்று (27.1.2025) காலை மறைவுற்றார் என்பதை அறிந்து பெரிதும் வருந்துகிறோம்.
ஆரம்பம் முதல் தம் வாழ்விணையருடன் கழக மாநாடுகளிலும், நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளத் தவறாதவர். தமது நான்கு பிள்ளைகளையும் தந்தை பெரியார் கொள்கை வழியில் வளர்த்து ஆளாக்கியவர்கள்.
அண்மையில் வடலூரில் அம்மையாரைச் சந்தித்து நலம் விசாரித்து வந்தோம்.
அம்மையாரின் மறைவால் பெருந் துயரத்திற்கு ஆளாகியிருக்கும் மகள்கள் கே.என். கலைச்செல்வி (வடலூர்), கே.என். தேன்மொழி (சேலம்), மகன்கள் கே.என். பன்னீர்செல்வம் (அமெரிக்கா), கே.என். முத்தையா (அமெரிக்கா) பேத்தி அறிவுப்பொன்னி (அமெரிக்கா) ஆகியோருக்கும் சுற்றத்தாருக்கும் கழகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
கண்கொடை, உடற்கொடை அளித்திருப்பது மறைந்தும் மக்களோடு வாழ்ந்து கொண்டுள்ளார்கள் என்பதற்கான அடையாளமாகும்.
அனைவருக்கும் இரங்கலும், ஆறுதலும் உரித்தாகுக.
கி.வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்
சென்னை
27.1.2025