மதுரை,ஜன 27 மதுரை புதூரில் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார் பில் நடைபெற்ற குடியரசு நாள் விழா பொதுக்கூட்டத்தில் மேனாள் ஒன்றிய அமைச்சர் ப.சிதம்பரம் கூறியதாவது:
பேராபத்து
”நாடாளுமன்ற தேர்தலில் பெரும்பான்மை பலம் பெற்று மத்தியில் பா.ஜனதா அரசு ஆட்சியில் உள்ளது. ஆனால் நாட்டின் குடிமக்களுக்கான ஆட்சியாக அமைந்துள்ளதா? என்றால் இல்லை. பா.ஜனதா அரசு பொறுப் பேற்ற பின்பு இந்தியா வளர்ச்சி பாதையில் செல்கிறது என மோடி கூறி வருகிறார். இது ஏற்புடையதல்ல. காரணம், அவருக்கு முன்னால் ஆட்சி செய்த ஜவகர்லால் நேரு, இந்திராகாந்தி, ராஜீவ்காந்தி, மன்மோகன் சிங் உள்ளிட்ட பிரதமர்கள் உருவாக்கிய அஸ்திவாரத்தில் தான் பா.ஜனதா பயணித்து வருகிறது. நமது நாட்டில் 144 கோடி மக்கள் வாழ்கின்றனர். அவர்களில் 20 கோடி பேர் ஏழைகளாக உள்ளனர். ஏழைகளின் விவசாயக் கடன், கல்விக் கடன் உள்ளிட்ட பல் வேறு கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை பா.ஜனதா நிறைவேற்றுவதில்லை. ஆனால் பெரு முதலாளிகள் வங்கியில் வாங்கிய கடன்களை தள்ளுபடி செய் கிறது. தற்போது, அம்பேத்கர் வகுத்த அரசமைப்புக்கு பா.ஜனதாவால் பேராபத்து வந்துள்ளது. அவற்றை பாது காக்க வேண்டும் என்றால் பா.ஜனதா ஆட்சியிலிருந்து அகற்றப்பட வேண்டும்”
இவ்வாறு அவர் பேசினார்.