ஜெயங்கொண்டம் பெரியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 18ஆம் ஆண்டு ஆண்டு விழா

3 Min Read

ஜெயங்கொண்டம், ஜன. 26- ஜெயங் கொண்டம் பெரியார் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியில் (24.1.2025) அன்று 18ஆம் ஆண்டு – ஆண்டு விழா மிக கோலாகலமாக மாலை சரியாக 6.00 மணி அளவில் மொழி வாழ்த்துடன் இனிதே தொடங்கியது இவ்விழாவில் பள்ளியின் தாளாளர் வீ.அன்புராஜ் தலைமையில் சிறப்பு விருந்தினராக எம்.மகேந்திரவர்மன், பெரியார் கல்வி நிறுவனங்களின் ஒருங்கிணைப்பாளர் டி.கிருஷ்ணகுமார், பொதுக்குழு உறுப்பினர் சி. காமராஜ் மற்றும் பள்ளியின் முதல்வர் இரா.கீதா ஆகியோர் கலந்து கொண்டனர்.பள்ளியின் தாளாளர் சிறப்பு விருந்தினர்களை வரவேற்று பொன்னாடை அணிவித்து நினைவுப் பரிசினை வழங்கி சிறப்பு செய்தார்.

தமிழ்நாடு, திராவிடர் கழகம்

பெரியாரின் தேன் சிட்டுகள்
தமிழ்நாட்டின் கலை உணர்வையும், மொழி உணர்வையும்,எழுச்சி உணர்வையும் எளிமையாக தமது சொந்த நடையில் பெரியாரின் தேன் சிட்டுகள் வில்லினை இசைத்து தாளம் முழங்க கடம் கதகதக்க மக்களை 18-ஆம் நூற்றாண்டிற்கு அழைத்துச் சென்று வில்லுப்பாட்டின் இசை மூலம் அரங்கத்தை நிறைக்கும் வண்ணம் அழகாக கலை நிகழ்ச்சிகள் அரங்கேறின.
விழாவிற்கு வருகை புரிந்த அனைவரை யும் தம் பரத நாட்டியத்தின் வாயிலாக வரவேற்றனர். அடுத்ததாக AUDIO VISHUAL மூலமாக நமது பெரியார் பள்ளியின் சிறப்புகளை மிக அழகாக எடுத்துரைத்தனர். அதனைத் தொடர்ந்து பெரியாரின் எழுச்சி மிக்க கருத்துகளை இசையோடு பாடி அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தனர்.
அதனைத் தொடர்ந்து பள்ளியின் முதல்வர் இரா. கீதா இக்கல்வியாண்டின் சாதனைகளை ஆண்டறிக்கை மூலம் அழகாக எடுத்துரைத்தார்.
அடுத்ததாக 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவிகள் நாட்டுப்புற நடனமான கர காட்டம் ,தப்பாட்டம் ,ஒயிலாட்டம் போன்ற கலைகளை கண்முன் கொண்டு வந்தனர்.

தேன்மொழி நாடகம்
மவுன மொழி நாடகத்தின் வாயிலாக எதிர்கால வாழ்வு சிறக்க கல்வியே முக்கியம் என்பதை அழகாக எடுத்துரைத்தனர்.அடுத்ததாக மனித உருவம் கொண்ட தானியங்கி ரோபோ, ஆறு கால்களைக் கொண்ட ரோபோ எம்பாட் ரோபோ, ஆளில்லாத வானூர்தி ஆகியவற்றை மாணவர்கள் மிக அழகாக இயக்கி பார்வை யாளர்களை பரவசப்படுத்தினர்
அதனை தொடர்ந்து 6 முதல் 14 வயதிற்கு உள்பட்ட அனைத்து குழந்தை களுக்கும் கட்டாயகல்வி வழங்கப்பட வேண்டும், மாணவர்கள் அறிவியல் மனப்பான்மையோடும், பகுத்தறிவு சிந்தனையோடும் சிந்தித்து செயல்பட வேண்டும் என்பதை தமிழ் நாடகத்தின் வாயிலாக மிக அழகாக நடித்துக் காண் பித்தனர் 6 முதல் 9ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவிகள் பல்வேறு இசைகளுக்கு ஏற்ப ஆனந்தமாக நடனமாடி பார்வையாளர்களை பரவசப்படுத்தினர் ஆறு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் நடனம் பார்வையாளர்களை இஸ்ரோவிற்கே அழைத்துச் சென்றது

தமிழ்நாடு, திராவிடர் கழகம்

சான்றிதழ் – நினைவுப் பரிசுகள்
எல்கேஜி முதல் 11ஆம் வகுப்பு வரை, வகுப்பு வாரியாக முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கும், வருகை பதிவில் 100 விழுக்காடு பெற்ற மாணவர்களுக்கும் சிறப்பு விருந்தினர்கள் சான்றிதழ் மற்றும் நினைவுப் பரிசு வழங்கி சிறப்பித்தனர். அத்துடன் அரசு பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த 12 ஆம் வகுப்பில் பயின்ற மாணவர்களுக்கு சான்றிதழ்களும் ஊக்கத் தொகையையும் வழங்கினர். மேலும் அரசு பொதுத்தேர்வில் 100 விழுக்காடு தேர்ச்சி அளித்த ஆசிரியர்களை பாராட்டி ஊக்கத்தொகை வழங்கியும், பள்ளியில் 10 ஆண்டுகள் சிறப்புடன் பணியாற்றி வருகின்ற உடற்கல்வி ஆசிரியர் ரவிசங்கர், தூய்மைப் பணியாளர் புஷ்பா மேரி ஆகியோருக்கும் ஊக்கத்தொகை வழங்கி சிறப்பித்தனர். இவ்விழாவில் பெற்றோர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டு விழாவின் நிகழ்வுகளை பெருமகிழ்ச்சியோடு கண்டு களித்தனர். மாணவிகளின் நன்றியுரையுடனும், நாட்டுப்பண்ணுடன் விழா இனிதே நிறைவுற்றது

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *