தஞ்சை, ஜன. 24- பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியில் சென்னை ராயல் என்பீல்ட் நிறுவனத்தின் வளாக நேர்காணல் நடைபெற்றது. வல்லம் பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியில் ஒவ்வொரு ஆண்டும் புகழ்பெற்ற கம்பெனிகளை வரவழைத்து வளாக நேர்காணல் மூலம் மாணவ, மாணவிகளுக்கு வேலை வாய்ப்பு உறுதி செய்யப்படுகிறது.
23.01.2025 அன்று சென்னையை சேர்ந்த ராயல் என்பீல்ட் நிறுவனத்தை சேர்ந்த துணை மேலாளர் ஹரி பாலாஜி இப்பாலிடெக்னிக்கில் நடைபெற்ற வளாக நேர்காணலில் கலந்து கொண்டு சுமார் 60 மாணவர்களுக்கு பணி ஆணைகளை வழங்கினார்கள். முன்னதாக 22.01.2025 அன்று நடைபெற்ற வளாக நேர்காணலில் புதுச்சேரி லூகாஸ் டிவிஎஸ் நிறுவனம் கலந்து கொண்டு சுமார் 70 மாணவர்களுக்கு பணி ஆணைகளை வழங்கியது குறிப்பிடத்தக்கது.
பணி ஆணைகள் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்ட இப்பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் முனைவர் அ.ஹேமலதா மாணவர்களுக்கு பணி ஆணைகளை வழங்கினார். இந்நிகழ்வில் இக்கல்லூரியின் துணைமுதல்வர் மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.