தருமபுரி, ஜன.24 தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களால் மாநில ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்ட ஊமை. ஜெயராமன் சேலம், மேட்டூர், ஆத்தூர், நாமக்கல் மாவட்ட புதிய பொறுப்பாளர்கள் மற்றும் கழகத் தோழர்களை 12 .01 .2025 அன்று சந்தித்தார்.
மேட்டூர் மாவட்டம்
முதல் நிகழ்வாக, காலை 11 மணிக்கு மேட்டூர் மாவட்ட கழகக் காப்பாளர் பழனி புள்ளையண்ணனின் இல்லத்தில் புதிய பொறுப்பாளர்கள் மற்றும் கழகத் தோழர்கள் சந்திப்பு நடைபெற்றது.
மேனாள் மாவட்டத் தலைவர் கிருட்டினமூர்த்தி மாவட்டக் கழகத்தின் ‘‘மினிட் புத்தகத்தை’’ புதிய மாவட்டத் தலைவர் கா.நா. பாலுவிடம், மாநில ஒருங்கிணைப்பாளர் ஊமை.ஜெயராமன் முன்னிலையில் ஒப்படைத்தார்.
மேட்டூர் மாவட்ட கழகக் காப்பாளர் பழனி புள்ளையண்ணன்-ரத்தினம் வாழ்விணையர்கள், மேனாள் மாவட்டத் தலைவர் கிருட்டினமூர்த்தி, புதிய மாவட்டத் தலைவர் கா.நா.பாலு, பு.வீரமணி, ராஜேந்திரன் ஆகிய தோழர்களுக்கு மாநில ஒருங்கிணைப்பாளர் ஊமை.ஜெயராமன் பயனாடை அணிவித்து சிறப்பு செய்தார்.
இந்நிகழ்வில் சேலம் மாவட்டத் தலைவர் வீரமணி ராஜு, மாவட்டச் செயலாளர் சி.பூபதி, முதுகலை தமிழாசிரியர் நடராஜன் உள்ளிட்ட தோழர்களும் கலந்து கொண்டனர்.
தோழர்கள் அனைவரும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் ஓய்வறியா உழைப்புக்கு நன்றி கூறி சிறப்பாக செயல்படுவது என உறுதியேற்றனர்.
அனைவருக்கும் மேட்டூர் மாவட்ட கழகக் காப்பாளர் பழனி புள்ளையண்ணன் தேநீர் விருந்து அளித்து உபசரித்தார்.
சேலம் மாவட்டம்
பிற்பகல் 12.30 மணிக்கு சேலம் மாவட்ட கழகக் காப்பாளர் கி.ஜவகர் இல்லத்தில் சேலம் மாவட்ட பொறுப்பாளர்கள் கழகத் தோழர்களின் சந்திப்பு நடைபெற்றது.
மாவட்டக் கழகம் சார்பில் மாவட்டத் தலைவர் வீரமணி ராஜு மாநில ஒருங்கிணைப்பாளருக்கு பயனாடை அணிவித்து சிறப்பு செய்தார்.
கழகக் காப்பாளர் கி ஜவகர், மாவட்டத் தலைவர் வீரமணி ராஜு, மாவட்டச் செயலாளர் சி.பூபதி, மாவட்ட துணைத் தலைவர் இரா.வீரமணி, மேட்டூர் மாவட்ட தலைவர் கா.நா.பாலு, மாநகரத் தலைவர் அரங்க இளவரசன், மாநகரச் செயலாளர் இராவண பூபதி, தாதகாப்பட்டி பகுதி செயலாளர் ர.சீனிவாசன், மாவட்ட இளைஞரணி துணைத் தலைவர் மூணாங்காடு சரவணன், பெரியார் பற்றாளர் ராமகிருட்டிணன், முதுகலை தமிழாசிரியர் நடராஜன், இ.அக்க்ஷயா ஆகிய தோழர்களுக்கு மாநில ஒருங்கிணைப்பாளர் பயனாடை அணிவித்து சிறப்பு செய்தார். கழகக் காப்பாளர் கி.ஜவகர், மாநில ஒருங்கிணைப்பாளரின் உதவியாளர் கனகராஜிவிற்கு பயனாடை அணிவித்து சிறப்புச் செய்தார்
தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் மகிழ்ச்சி அடையும் வகையில் வெகுசிறப்பாக இயக்கப் பணியில் ஈடுபட வேண்டும் என்று கழகத் தோழர்கள் உறுதியேற்றனர். காப்பாளர் அனைவருக்கும் தேநீர் விருந்து அளித்தார்.
ஆத்தூர் மாவட்டம்
பிற்பகல் 3.30 மணிக்கு ஆத்தூர் மாவட்ட கழகக் காப்பாளர் வானவில் அலுவலகத்தில் புதிய பொறுப்பாளர்கள் மற்றும் தோழர்கள் சந்திப்பு நிகழ்ச்சி சிறப்புடன் நடைபெற்றது.
ஆத்தூர் மாவட்டக் கழகம் சார்பில் மாவட்டத் தலைவர் ஆத்தூர் அ.சுரேஷ் மாநில ஒருங்கிணைப்பாளருக்குப் பயனாடை அணிவித்து சிறப்பு செய்தார்.
முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் தங்கவேல் அய்யா, ஆத்தூர் மாவட்ட கழக காப்பாளர் வானவில், ஆத்தூர் மாவட்ட தலைவர் ஆத்தூர் அ.சுரேஷ், ஆத்தூர் மாவட்டச் செயலாளர் நீ சேகர், நகரத் தலைவர் அண்ணாதுரை, மேனாள் மாவட்ட தலைவர் விடுதலை சந்திரன், காட்டுக்கோட்டை தங்கராசு உள்ளிட்ட தோழர்களுக்கு மாநில ஒருங்கிணைப்பாளர் பயனாடை அணிவித்து சிறப்புச் செய்தார்.
தோழர்கள் அனைவரும் தமிழர் தலைவர் அவர்களின் தலைமையில் பெரியார் பணி முடிக்க உறுதியேற்றனர். கழகக் காப்பாளர் அனைவருக்கும் தேநீர் விருந்தளித்தார்.
நாமக்கல் மாவட்டம்
நாமக்கல் மாவட்டச் செயலாளர் வழக்குரைஞர் பெரியசாமியை, நாமக்கல் மாவட்ட புதிய பேருந்து நிலையம் அருகில் சந்தித்து, மாநில ஒருங்கிணைப்பாளர் சிறப்பு செய்தார்.
தொடர்ந்து, நாமக்கல் மாவட்ட கழக காப்பாளர் க.ச. இல்லத்தில், நாமக்கல் மாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும் தோழர்களின் சந்திப்பு நடைபெற்றது.
கழக காப்பாளர் க.ச., மாநில ஒருங்கிணைப்பாளருக்கு பயனாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.
மாநில ஒருங்கிணைப்பாளர் ஊமை.ஜெயராமன், க.ச., செங்குட்டுவன்-காந்தி வாழ்விணையர்கள், பகுத்தறிவாளர் கழக மாநில அமைப்பாளர் வழக்குரைஞர் இளங்கோ, நகரச் செயலாளர் சுந்தரம் ஆகிய தோழர்களுக்குப் பயனாடை அணிவித்து சிறப்பித்தார்.
அனைத்து மாவட்டங்களிலும் விரைவில் மாவட்ட கலந்துரையாடல் கூட்டங்களை நடத்தி, கழகப் பணிகளை இன்னும் வேகமாக செயல்படுத்துவது என தோழர்கள் உறுதியற்றனர்.
தோழர்களுக்கு கழகக் காப்பாளர் தேநீர் விருந்து அளித்தார்.
அனைத்து மாவட்டக் கழகப் பொறுப்பாளர்கள் சந்திப்பு கூட்டங்களிலும் சேலம் மாவட்டத் தலைவர் வீரமணி ராஜு, மாவட்டச் செயலாளர் சி. பூபதி மற்றும் தோழர்களும், ஆத்தூர் நிகழ்ச்சியிலிருந்து ஆத்தூர் மாவட்டத் தலைவர் ஆத்தூர் அ.சுரேஷ் மற்றும் தோழர்கள் மாநில ஒருங்கிணைப்பாளருடன் கலந்து கொண்டனர்.