கண்ணந்தங்குடி கீழையூர் அரசு பள்ளி மாணவர்களை அதிக மதிப்பெண் பெறச் செய்த ஆசிரியர்களுக்கு ரொக்கப் பரிசு!

Viduthalai
2 Min Read

கண்ணந்தங்குடி, ஜன.23 தஞ்சை மாவட்டம் கண்ணந்தங்குடி கீழையூர் அரசு உயர்நிலைப்பள்ளி மற்றும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி கல்வி வளர்ச்சிக்குழு உறுப்பினர்கள் மற்றும் பெற்றோர்கள் ஆசிரியர்கள் மாணவர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் 21.01.2025 காலை 11 மணி அளவில் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது
அரசு உயர்நிலைப் பள்ளி தலைமை யாசிரியர் கண்ணன் தலைமையேற்று உரையாற்றினார்

திராவிடர் கழகம்

ஊராட்சி மன்ற தலைவர் கல்வி குழு ஒருங்கிணைப்பாளர் சி.மாரிமுத்து முன்னிலை ஏற்று உரையாற்றினார்
ஓய்வு பெற்ற காவல்துறை துணை கண்காணிப்பாளர் ராஜேந்திரன், இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் ஓய்வு பெற்ற அதிகாரி கே.ஆர். பன்னீர்செல்வம்,ஓய்வு பெற்ற மருத்துவக் கல்லூரி முதல்வர் கலைச்செல்வி, கழக மாநில ஒருங்கிணைப்பாளர் இரா. ஜெயக்குமார் ஆகியோர் கல்வி வளர்ச்சி குழு தொடங்கப்பட்டதின் நோக்கம், ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் ஆகியோர் இணைந்து செயல்பட வேண்டிய அவசியம் குறித்தும், மாணவர்களின் வளர்ச்சி மற்றும் அனைத்துத் துறைகளிலும் மாணவர்கள் சாதனை புரிவதற்கான எதிர்காலத்தில் செயல்பட வேண்டிய செயல் திட்டங்கள் பற்றியும் எடுத்து ரைத்தனர்.

உயர்நிலைப் பள்ளியில் மாணவர்கள் சராசரி 70% மதிப்பெண் எடுக்கச் செய்த ஆசிரியர்களுக்கு கே.ஆர்.சி. அறக்கட்டளை சார்பில் பாராட்டுச் சான்றிதழும், ரொக்க பரிசும் வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் கோபாலன், பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் பிச்சைக்கண்னு, ஆர்.ஏ‌.ஜி.மகேந்திரன், செந்தில்குமார், கூட்டுறவு துறை ஓய்வு பெற்ற துணைப் பதிவாளர் சீனிவாசன், ஊராட்சி மன்ற உறுப்பினர் வேணுகோபால்,தமயந்தி உள்ளிட்ட பெற்றோர்கள் ஆசிரியர்கள் மாணவர்கள் பெருந்திரளாக பங்கேற்று சிறப்பித்தனர்
கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டன

திராவிடர் கழகம்

1. அரசு உயர்நிலைப் பள்ளிக்கு அய்ந்து செட் பெஞ்ச் டேபிள் வழங்கிய தஞ்சாவூர் ஹெரிடேஜ் ரோட்டரி சங்க நிர்வாகிகளுக்கும், ரூ.8 லட்சம் செலவில் பள்ளி மராமரத்து பணிகளை மேற்கொண்டுள்ள உதவிய தமிழ்நாடு அரசுக்கும் நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது

2. அரசு உயர்நிலைப்பள்ளி 2023-2024 ஆம் கல்வி ஆண்டில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 100% மதிப்பெண்கள் தேர்ச்சி பெறுவதற்கும், 400க்கு மேல் மதிப்பெண் பெறுவதற்கும் உழைத்த ஆசிரியர்களுக்கும் ஒத்து ழைத்த பெற்றோர்களுக்கும் இதை சாத்தியப்படுத்திய மாணவர்களுக்கும் கல்வி வளர்ச்சிக் குழு சார்பில் நன்றியும் பாராட்டும் தெரிவிக்கப்பட்டது.

3. வரும் கல்வி ஆண்டில் அரசு உயர்நிலைப்பள்ளி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மாணவர்கள் கல்வியிலும், விளையாட்டிலும் அனைத்துத் துறைகளிலும் பல்வேறு சாதனைகளை புரிய ஆசிரியர் பெரு மக்கள், பெற்றோர்கள், மாணவர்கள் அனைவரும் அர்ப்பணிப்பு உணர்வோடு உழைத்திட வேண்டு மாறு கல்வி குழு சார்பில் கேட்டுக் கொள்ளப்படுகிறது. இரண்டு பள்ளிக்கும் தேவையான அனைத்து உதவிகளையும் கல்வி வளர்ச்சிக் குழு தொடர்ந்து வழங்கும் என்றும் உறுதி அளிக்கப்பட்டது

4. கடந்த 21 ஆண்டுகளாக பள்ளி மாணவர்களை ஊக்கப்படுத்தும் வகையில், பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறும் மாணவர்களுக்குப் பாராட்டுச் சான்றிதழும், ரொக்க பரிசும், பள்ளி வளர்ச்சிக்காக நன்கொடையும் வழங்கி வரும் கண்ணந்தங்குடி கீழையூர் மோகனா வீரமணி கல்வி அறக்கட்டளை நிர்வாகிகளுக்கு கல்வி வளர்ச்சிக் குழு சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *