சோழிங்கநல்லூர், ஜன. 22- மாதாந்திர கலந்துரையாடல் கூட்டம் விடுதலை நகரில் உள்ள தந்தை பெரியார் நூலகத்தில், கடந்த 05.01.2025 அன்று நடைபெற்றது.
இக்கூட்டம் மாவட்ட காப்பாளர் நீலாங்கரை வீரபத்திரன் முன்னிலையிலும், தலைவர் வேலூர் பாண்டு தலைமையிலும் சிறப்பாக நடந்தேறியது.
தீர்மானங்கள்
1. தலைமை கழக அறிவிப்பின்படி மடிப்பாக்கம் பேருந்து நிலையம் அருகில் 26.12.2024 அன்று நடைபெற இருந்த தெருமுனை கூட்டம், மழையின் காரணமாக தள்ளிவைக்கப்பட்டது எல்லோரும் அறிந்ததே. அந்தக் கூட்டத்தை அதே இடத்தில் வேறொரு நாளில் நடத்துவது என்று தீர்மானிக்கப்பட்டது.
2. 22.02.2025 அன்று விடுதலை நகரில் நடைபெறவிருக்கின்ற சிலை திறப்பு விழாவிற்கான இறுதி முடிவுகளை தமிழர் தலைவர் ஆசிரியர் அய்யா அவர்களிடம் கலந்தாலோசித்து முடிவு செய்வோம் என்று கூட்டத்தில் ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது.
3. சிலை திறப்பு விழாவிற்கான களப்பணி ஆற்ற குழுக்கள் அமைத்து செயல்பட தீர்மானிக்கப்பட்டது.
4. 70 வயது நிரம்பிய மூத்த தோழர் களுக்கு மரியாதை செய்வது என்று கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.
5. சிலை திறப்பு விழாவில் வெளியிட இருக்கின்ற AV தயார் செய்ய தோழர் நித்தியானந்தம் அவர்களை நியமித்து, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
6. மகளிர் அணி தலைவி தோழர் தேவி சக்திவேல் நன்றி நவில கூட்டம் இனிதே நிறைவுற்றது.