வலங்கை, சன. 22- குடந்தை கழக மாவட்ட கழக மேனாள் துணைத் தலைவர் மற்றும் மாவட்ட காப்பாளர் வலங்கை வே. கோவிந்தன் உடல்நலக்குறைவால் 17.01.2025 இரவு 07.30 மணியளவில் இயற்கை எய்தினார்.
உடனடியாக அவரது இரு கண்கள் மதுரை அரவிந்த் மருத்துவ மனை கண் வங்கிக்கு கபிஸ்தலம் பெரியார் சேவை மய்யம் மூலம் கொடையாக வழங்கப்பட்டது.
அவரது உடல் 19.01. 2025 பிற்பகல் 2 மணி அளவில் அரிய லூர் அரசு மருத்துவமனைக்கு கொடையாக வழங்கப்பட்டது . முன்னதாக வலங்கைமான் விருப்பாட்சிபுரம் அக்ரகாரத்தில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்ற வீர வணக்க நிகழ்வில் மாவட்ட தலைவர் மு.நிம்மதி தலைமையில் பாபநாசம் ஒன்றிய கழக செயலாளர் சு.கலியமூர்த்தி, மாவட்ட பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் க. திருஞானசம்பந்தம், மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர் பேராசிரியர் சேதுராமன், மேனாள் தலைமைக் கழக அமைப்பாளர் க.குருசாமி, விஜய பூபாலன், குடந்தை மாநகரத் தலைவர் வழக்குரைஞர் பி ரமேஷ், மாவட்ட செயலாளர் சு.துரைராசு, பகுத்தறிவாளர் கழக பொதுச் செயலாளர் வி.மோகன், திராவிட முன்னேற்றக் கழக வலங்கைமான் நகர செயலாளர் பா. சிவனேசன், வலங்கைமான் ஒன்றிய திராவிட முன்னேற்ற கழக செயலாளர் வி.அன்பரசன் ஆகியோர் இரங்கல் உரையாற்றினார்கள். தொடர்ந்து மகளிராக சேர்ந்து அவரது உடலை சுமந்து ஆம்புலன்சில் ஏற்றினர்.
அவரது உடல் அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரிக்கு மதியம் 2:30 மணி அளவில் கொடையாக வழங்கப்பட்டது . எவ்வித சடங்கு களும் இன்றி அவரது இறுதி நிகழ்வு நடைபெற்றது.