வங்கிகளுக்கு தற்போது வாரம் 6 நாள் வேலைநாளாக உள்ளது. 2ஆவது, 4ஆவது சனிக்கிழமை விடுமுறை நாளாக உள்ளது.
இந்நிலையில், வாரம் 5 நாள் மட்டுமே வேலைநாளாக இருக்க வேண்டுமென்று வங்கி ஊழியர்கள், தொழிற்சங்கங்கள் நீண்டகாலமாக கோரி வருகின்றனர். இதற்கு வங்கிகள் கூட்டமைப்பும் ஒப்புதல் தந்துவிட்டது. தற்போது 8ஆவது ஊதிய கமிஷனை அறிவித்த நிலையில், இந்த அறிவிப்பையும் அரசு விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.