மலேசியாவில் 4.1.2025 அன்று நடைபெற்ற உலக அளவிலான தமிழ் பேச்சுப் போட்டியில் ஆசிகா, சந்தோஷ் ஆகியோர் கலந்து கொண்டு முதல் பரிசை வென்றுள்ளனர். கழக பொதுக்குழு உறுப்பினர் கா.மாணிக்கம், கிருஷ்ணகிரி நகரத்தலைவர் கோ.தங்கராசன் ஆகியோர் பாராட்டினர். இவர்கள் ஒகேனக்கல் பெரியாரியல் பயிற்சி பட்டறையில் பங்கேற்ற மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.