டில்லி சட்டப்பேரவை தேர்தலில் பாஜக வெற்றி பெற்றால் மகளிருக்கு மாதந்தோறும் 2,500 வழங்கப்படும் என்ற பாஜகவின் தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளது.
இதுகுறித்து திமுக நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் கனிமொழியிடம் கேள்வி எழுப்பப் பட்டது. அதற்கு அவர், திராவிட ஆட்சியின் மாடல்களை மற்ற மாநிலங்களும் பின்பற்றி வருவதாக பெருமிதம் தெரிவித்தார். அத்துடன், தற்போது பாஜகவும் தங்களை பின்பற்ற தொடங்கியுள்ளதாகக் கூறி, அக்கட்சிக்கு வாழ்த்து கூறினார்.