டெக்கான் கிரானிக்கல், சென்னை:
* ஜாமீன் மனுக்கள் தொடர்பான வழக்கில் அமலாக்கத்துறை செய்தது தவறு தான்: எங்களிடம் கலந்தாலோசிக்காமல், நாங்கள் நீதிமன்றத்தில் ஆஜராவதற்கு முன்பே பிரமாணப்பத்திரத்தை தாக்கல் செய்துள்ளனர். இந்த விவகாரத்தில் துறை ரீதியான விசாரணை நடத்த அமலாக்கத்துறை இயக்குநரிடம் கேட்டுக் கொண்டுள்ளோம் உச்ச நீதிமன்றத்தில் ஒன்றிய அரசு ஒப்புதல், நீதிபதிகள் கடும் அதிருப்தி
இந்தியன் எக்ஸ்பிரஸ்
*தேர்தல் பிரச்சாரத்தின் போது, பாஜகவின் புது டில்லி வேட்பாளர் பர்வேஷ் வர்மா துப்புரவுத் தொழிலாளர்களுக்கு காலணிகளையும், தொகுதியில் உள்ள பெண்களுக்கு புடவைகள் மற்றும் ரூ.1,100 ஆகியவற்றை விநியோகித்ததாக ஆம் ஆத்மியின் மணிஷ் சிசோடியா குற்றச்சாட்டு. தேர்தல் ஆணையம் கண்ணை மூடிக் கொண்டுள்ளதாகவும் கண்டனம்.
* நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் கூட்டத்தொடர் ஜனவரி 31 முதல் பிப்ரவரி 13 வரையிலும், இரண்டாவது கூட்டத் தொடர் மார்ச் 10 முதல் ஏப்ரல் 4 வரையிலும் நடைபெறும். பிப்ரவரி 1 பட்ஜெட் தாக்கல்.
* ‘அடுத்த வாரத்திற்குள் தீர்வு காணப்படாவிட்டால் நாங்கள் தலையிடுவோம்’: துணைவேந்தர் நியமனங்கள் தொடர்பாக தமிழ்நாடு அரசு மற்றும் ஆளுநருக்கு உச்ச நீதிமன்றம் கண்டிப்பு.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்
* விஎச்பி நிகழ்வில் வெறுப்புப் பேச்சுக்காக அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி மீது சிபிஅய் நடவடிக்கை எடுக்க உத்தரவிடுமாறு தலைமை நீதிபதியை மூத்த வழக்கறிஞர்கள் வலியுறுத்தல்.
* ராஜஸ்தான் கோட்டாவில் தொடரும் தற்கொலைகள்: நீட் தேர்வு பயிற்சி மேற்கொண்ட மற்றொரு மாணவர் தற்கொலை.இரண்டு வாரங்களில் மூன்றாவது சம்பவம் இதுவாகும்,
தி இந்து
* தமிழ்நாடு அருந்ததியர் உள் இடஒதுக்கீடு சட்டத்தை அமல்படுத்தியதன் விளைவாக, மாநிலம் முழுவதும் உயர்கல்வி பயிலும் அச்சமூகத்தைச் சேர்ந்த மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்று தகவல் அறியும் சட்டத்தின் மூலம் பதில்கள் காட்டுகின்றன
தி டெலிகிராப்
* “கனடா, அமெரிக்கா மற்றும் பாகிஸ்தானில் பயங்கரவாத சந்தேக நபர்கள் மற்றும் பிரிவினைவாத தலைவர்களை படுகொலை செய்வதற்கு இந்திய புலனாய்வு அமைப்புகள் குறிவைத்ததாக பல வெளிநாட்டு அரசாங்கங்கள் குற்றம் சாட்டின,” என்று அமெரிக்காவின் மனித உரிமை அமைப்பு அறிக்கை.
* கல்வித் துறையை முழுவதுமாக ஒன்றிய அரசு கட்டுப்படுத்த நினைக்கிறது; யு.ஜி.சி. விதிகளை திரும்ப பெற வேண்டும், ஆசிரியர் அமைப்புகள் வேண்டுகோள்.
குடந்தை கருணா