திருநெல்வேலி, ஜன.18 – நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே செண்பகராமநல்லூரில் 500 ஆண்டுகளுக்கு முந்தைய கல்வெட்டுகள் கண்டறியப்பட்டன.
நெல்லை வரலாற்று பண்பாட்டு கள ஆய்வு மய்ய இயக்குநர் மாரியப்பன்இசக்கி மற்றும் நிர்வாகிகளுக்கு, நாங்குநேரி அருகேயுள்ள செண்பக ராமநல்லூரில் பழங்கால கல்வெட்டு கள் இருப்பதாக தகவல் கிடைத்தது. இதுகுறித்து செண்பகராமன் நல்லூர் ராமலிங்கசுவாமி கோயிலில் கல்வெட்டு ஆய்வு நடத்தினர். இந்த கோயிலில் இருந்த 500 ஆண்டு களுக்கு முற்பட்ட திருவிதாங்கூர் கல்வெட்டுகள் உட்பட மொத்தம் 4 கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன.
இதுகுறித்து நெல்லை வரலாற்று பண்பாட்டு கள ஆய்வு மய்ய இயக்குநர் மாரியப்பன் இசக்கி கூறுகையில், “கோயிலில் வேண்டாட்டு (திரு விதாங்கூர்) அரசரை வென்று மண்கொண்ட பூதல வீர உதய மார்த்தாண்டன் (1516-1535) 11 ஆவது ஆண்டு கல்வெட்டு காணப்படுகிறது. இக்கல்வெட்டு கொல்லம் ஆண்டு 703 புரட்டாசி மாதம் 11 ஆம் தேதி வெட்டு விக்கப்பட்டது. இதன்படி, இது கி.பி.1527 ஆம் ஆண்டு கல்வெட்டாகும். இந்த கல்வெட்டில் செண்பக ராமநல்லூரில் ஏற்ெகனவே கட்டப்பட்ட ராமலிங்கசுவாமி, ஜெகநாதபெருமாள் கோயில்களை மறுகட்டமைப்பு செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர் காலத்தில்தான் இவ்வூருக்கு ‘செண்பகராமநல்லூர்’ என பெயர் சூட்டப்பட்டுள்ளது.
பூதள வீர உதய மார்த்தாண்டன், தனது மகன் செண்பக ராமன் என்ற மூத்த சிறைவாய் பெயரில் இவ்வூரை நிர்மானித் துள்ளார். ஆய்வின் போது உள்ளூர் பிர முகர்கள் கடற்கரை, கோயில் அறங்காவலர் குமார் பண்ணையார், கோபி ஆகியோர் உடனிருந்தனர்.