வெட்டிக்காடு,ஜன.16- வெட்டிக்காட்டில் அமைந்துள்ள பெரியார் மெட்ரிகுலேசன் பள்ளியில் கல்விச் சுற்றுலா இடம் பெற்றது.
21.12.2024 அன்று மழலையர் பிரிவில் பயிலும் 58 மாணவர்கள் 6 ஆசிரியர்கள் தஞ்சையில் உள்ள தொல்காப்பியர் சதுக்கம் மற்றும் சிவகங்கைப் பூங்காவிற்கு சுற்றுலா சென்று மகிழ்ந்தனர்.
24.12.2024 அன்று முதல் வகுப்பு முதல் மூன்றாம் வகுப்பு வரை பயிலும் 72 மாணவர்கள், ஆசிரியர்கள் ஆறுபேரும் ஒரத்தநாட்டிலுள்ள கால்நடை மருத்துவக் கல்லூரிக்கும், தஞ்சையில் உள்ள சரஸ்வதி மகால், சிவகங்கைப் பூங்கா சென்று தமிழர்களின் சிறப்புகளைக் கேட்டும், பார்த்தும் அறிந்து கொண்டனர்.
பத்தாம் வகுப்பில் பயிலும் 14 மாணவர்கள், பள்ளியில் பணிபுரியும் அனைத்துப் பணியாளர்களும் ஒரத்தநாட்டில் உள்ள கால்நடை மருத்துவக் கல்லூரிக்குச் சென்று பயனுள்ள நிகழ்வுகளைக் கண்டு களித்தனர்.
30.12.2024 அன்று 118 மாணவர்கள் 15 ஆசிரியர்கள் காலை 6 மணிக்கு வெட்டிக்காட்டில் இருந்து சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கீழடி அகழ்வாராய்ச்சி நிலையம் மற்றும் அருங்காட்சியகத்தையும் , மதுரையில் உள்ள நாயக்கர் மகால், காந்தி அருங்காட்சியகம், கலைஞர் நூற்றாண்டு நூலகம் ஆகியவற்றையும் கண்டு களித்தனர்.
பணியாளர்கள் மூவரும் உடன் உதவிக்கு வந்திருந்தனர். சுற்றுலா மூலம் தமிழர்களின் வாழ்வியல், பண்பாடு, நினைவுச் சின்னங்கள், வரலாற்றுச் சுவடுகள், அறிவியல் செயல்பாடுகள் என அனைத்தையும் அறிந்து கொண்டனர்.