பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக இமாச்சல பிரதேச பாஜக தலைவர் மோகன் லால் படோலி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. பாடகர் ராக்கி மிட்டலுடன் சேர்ந்து மோகன் லால் தன்னை வன்புணர்வு செய்ததாக டில்லியை சேர்ந்த பெண் புகார் அளித்துள்ளார். அரசு வேலை வாங்கித் தருவதாகவும், மியூசிக் வீடியோவில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி வன்கொடுமை செய்ததாகவும் புகாரில் அவர் கூறியுள்ளார்.
4 நாட்களில் 15,866 பேருந்துகள் இயக்கம் பொங்கல் சிறப்பு பேருந்துகளில் 8.72 லட்சம் பேர் பயணம்
போக்குவரத்து துறை தகவல்
சென்னை, ஜன.16 பொங்கலை முன்னிட்டு 4 நாட்கள் இயக்கப்பட்ட 15,866 சிறப்பு பேருந்துகளில் 8,72,630 பேர் பயணம் செய்துள்ள தாக போக்குவரத்து துறை தெரிவித் துள்ளது. சென்னையில் இருந்து தினமும் வழக்கமாக இயக்கக் கூடிய 2,092 பேருந்துகளுடன் கூடுதலாக 5,736 சிறப்புப் பேருந்துகள் என 4 நாட்களுக்கு மொத்தம் 14,104 பேருந்துகளும், திருச்சி, கோவை உள்ளிட்ட பிற ஊர்களில் இருந்து 7,800 சிறப்புப் பேருந்துகளும் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. தமிழ்நாடு அரசு சார்பில் ஜன.10ஆம் தேதி முதல் 13ஆம் தேதி வரை 4 நாட்களுக்கு சிறப்பு பேருந்துகளில் 4 நாட்களில் 15,866 பேருந்துகளில் 8,72,630 பயணிகள் பயணித்துள்ளனர். மேலும் இந்தாண்டு ஒட்டுமொத்தமாக 1,89,650 பயணிகள் முன்பதிவு செய்து பயணித்துள்ளதாகவும் போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.