கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் 12.1.2025

viduthalai
1 Min Read

டெக்கான் கிரானிக்கல், சென்னை:

*ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக சார்பில் சந்திரகுமார் வேட்பாளராக தேர்வு.
*பெண்களுக்கு எதிரான குற்றங்களை விசாரிக்க மேலும் ஏழு நீதிமன்றங்கள், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* யு.ஜி.சி. வரைவு விதிகள் (துணை வேந்தர்களை தேர்ந்தெடுப்பது போன்றவை) சர்வாதிகாரமானவை… கூட்டாட்சியை அழிக்கின்றன’: தமிழ்நாடு கல்வி அமைச்சர் கோவி.செழியன் காட்டம்.
* ‘யு.ஜி.சி. வரைவு விதி முறைகளுக்கு எதிராக கேரளா அரசு ஒரு தீர்மானத்தை நிறைவேற்ற வலியுறுத்தி, கேரளா எதிர்க்கட்சித் தலைவர் வி.டி. சதீசன், முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு கடிதம்.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு இதுவரை இல்லாத அளவு சரிந்தது குறித்து பிரதமர் மோடி பதிலளிக்க வேண்டும் என பிரியங்கா காந்தி கேள்வி.

தி டெலிகிராப்:

* ஒன்றிய அரசின் தேசிய கல்விக் கொள்கையை அனைத்துக் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும் – யுஜிசி அடுத்த அறிவிப்பு.

– குடந்தை கருணா

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *