ஆவடி புதிய ராணுவச்சாலை இருப்பு பாதை பாலம் அருகில் உள்ள தந்தை பெரியார் அவர்களின் சிலை பீடத்தின் அடியில் உள்ள தந்தை பெரியார் அவர்களின் கடவுள் மறுப்பு வாசகங்களை கறுப்பு மை கொண்டு அழித்தும் சிலையை புதுப்பித்தவரின் (ஜானகிராமன்) பெயர் பலகையை உடைத்திருப்பதையும் கண்டு திருமுல்லைவாயில் பகுதியும் திராவிடர் கழக தலைவர் இரணியன் (எ) அருள் தாஸ் அளித்த தகவலின் பேரில் கழக தோழர்கள் ஆவடி பெரியார் மாளிகையில் திரண்டனர்.
பின்னர் கழக துணை பொதுச் செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார் ஆலோசனைப்படி மாவட்ட தலைவர் வெ.கார்வேந்தன் தலைமையில் காப்பாளர் பா.தென்னரசு, செயலாளர் க.இளவரசன், துணை செயலாளர் பூவை தமிழ்ச்செல்வன், தொழிலாளர் அணி தலைவர் ஏழுமலை,ஆவடி நகர தலைவர் முருகன், செயலாளர் தமிழ் மணி, துணை தலைவர் சி.வச்சிரவேல், அம்பத்தூர் பகுதி தலைவர் பூ.இராமலிங்கம், மதுரவாயல் பகுதி தலைவர் சு.வேல்சாமி, ஆவடி மாவட்ட பகுத்தறிவாளர் கழக துணை தலைவர் ஜெயராமன்,அறிவு வழி காணொலி அரும்பாக்கம் சா.தாமோதரன், வழக்குரைஞர் ராஜா, சுந்தர்ராஜன் ஆகியோர் 10-01-2025 அன்று இரவு ஆவடி காவல் நிலைய ஆய்வாளர் அவர்களிடம் புகார் மனு அளித்தனர்.
மனுவை பெற்றுக் கொண்ட ஆய்வாளர் அவர்கள் உடனடியாக உதவி ஆய்வாளர் தலைமையில் சிலைக்கு தொடர்ந்து பாதுகாப்பும் சேதம் விளைவித்தவர்களை கண்டு பிடித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதி அளித்ததின் பேரில் கழக தோழர்கள் அமைதியாக கலைந்தனர்.காவல்துறையின் துரித நடவடிக்கையால் சிலையின் அடிபீடம் சரி செய்யப்பட்டு கடவுள் மறுப்பு வாசகங்கள் எழுதப்பட்டது.உடனடி நடவடிக்கை மேற்கொண்ட காவல் துறைக்கு ஆவடி மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் நன்றி