திண்டுக்கல் ஆர்.எம்.டி.சி. போக்கு வரத்துக் கழகத் தில் பணியாற்றியவரும், அதில் திராவிடர் தொழி லாளர் கழகத்தின் துணைத் தலைவராக சிறப்பாகப் பணி புரிந்தவருமான தோழர் எஸ். அங்கப்பன் (வயது 67) அவர்கள் நேற்றிரவு (10.1.2025) மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். தீவிரமான கொள்கைப் பற்றாளர் – இயக்கத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டுள்ளவர். அவர் பிரிவால் துயருறும் அவரது மகன் டாக்டர் அ. அன்பழகன் அவர்களுக்கும், குடும்பத்தினருக்கும், கழகத் தோழர்களுக்கும் திராவிடர் கழகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்.
சென்னை
11.1.2025