அறந்தாங்கி, ஜூலை 19- 8.7.2023 அன்று மாலை 5 மணியளவில் கீரமங்கலத்தில் அறந்தாங்கி கழக மாவட்டப் பகுத்தறிவாளர் கழகக் கலந்துரையாடல் கூட்டம் நடை பெற்றது.
கூட்டத்திற்கு வருகை தந்த அனைவரையும் க.வீரையா வர வேற்றுப் பேசினார். கலந்துரை யாடல் கூட்டத்தின் நோக்கமான, புதிய உறுப்பினர்கள் சேர்க்கை, பகுத்தறிவாளர் கழகத்தை வலி மைப்படுத்துதல், தனித்தன்மை யோடு செயல்படுவது குறித்து ப.க. மாநிலத் துணைத் தலைவர் பொன்னமராவதி அ.சரவணன் எடுத்துரைத்தார். பகுத்தறிவாளர் கழகம் செயல்பட வேண்டிய முறை கள் குறித்து அறந்தாங்கி மாவட் டத் திராவிடர் கழகத் தலைவர் க.மாரிமுத்து, மாவட்டச் செயலா ளர் க.முத்து, ஆசிரியர் த.கண்ணன், மாவட்ட இளைஞரணித் தலைவர் ப.மகாராசா, இளைஞரணி ரெ.மணிமாறன், ந.அம்பிகாபதி ஆகியோர் உரையாற்றினர்.
பகுத்தறிவாளர் கழகத் தோழர் களின் அணுகுமுறைகள் ஆற்ற வேண்டிய பணிகள் குறித்து பொதுச் செயலாளர் வி.மோகன் கருத்துரை வழங்கினார்.
நிறைவாக பகுத்தறிவாளர் கழ கத்தின் தேவை, அதிக உறுப்பினர் களைச் சேர்த்து அமைப்பை வலுப் படுத்துதல், தொடர் கருத்தரங்குகளை நடத்துதல் குறித்து மாநிலப் பகுத்தறிவாளர் கழகத் தலைவர் இரா.தமிழ்ச்செல்வன் கருத்துரை வழங்கி புதிய பொறுப்பாளர்களை நியமித்தார்.
புதிய ப.க. மாவட்டப் பொறுப்பாளர்கள்
மாவட்டத் தலைவர்: த.கண்ணன்
மாவட்டச் செயலாளர்: க.வீரையா
மாவட்ட அமைப்பாளர்: பெரியார் கருணா
மாவட்டத் துணைத் தலைவர்: மருத்துவர் சொக்கலிங்கம்
மாவட்டத் துணைச் செயலாளர்: ந.அம்பிகாபதி
புதுக்கோட்டைக் கழக மாவட்டம்
9.7.2023 அன்று காலை 10 மணியளவில் புதுக்கோட்டை மாவட்ட தி.க. அலுவலகத்தில் மாவட்ட ப.க. கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. கூட்டத் திற்கு மாவட்ட பகுத்தறிவாளர் கழகச் செயலாளர் இரா.மலர் மன்னன் தலைமையேற்று உரை யாற்றினார். பங்கேற்ற தோழர் களின் அறிமுகத்திற்கு பின்னர் கலந்துரையாடல் கூட்டத்தின் நோக்கம் குறித்து மாநில ப.க. துணைத் தலைவர் பொன்னமரா வதி அ.சரவணன் உரையாற்றினார்.
பகுத்தறிவாளர் கழகம் ஆற்ற வேண்டிய பணிகள், செயல்பாடுகள் குறித்து முன்னிலை வகித்த மாவட்ட கழக தலைவர் முனைவர் மு.அறிவொளி, மாவட்டச் செய லாளர் ப.வீரப்பன், மாநில மாண வர் கழகச் செயலாளர் இரா.செந் தூரபாண்டியன், மாநில ப.க. துணைத் தலைவர் கோபு.பழனி வேலு ஆகியோர் எடுத்துரைத்தனர். தொடர்ந்து ப.க. தோழர்கள், ஆ.கோ.ஏழுமலை, இரா.வெள் ளைச்சாமி, பி.தாமோதரன், குண சேகரன், இரா.கலா, வே.முருகே சன், மாவட்டத் துணைத் தலைவர் சே.இராசேந்திரன், இளைஞரணி தாமரைச் செல்வன், மாணவர் கழக செ.ராகேஷ் ஆகியோர் கருத்துகளைக் கூறினர்.
பகுத்தறிவாளர் கழகப் பொதுச் செயலாளர் வி.மோகன் பகுத்தறி வாளர் கழகத் தோழர்களின் அணுகுமுறைகள், அமைப்பின் தேவை குறித்துக் கருத்துரையாற் றினார். நிறைவாக ப.க. மாநிலத் தலைவர் இரா.தமிழ்ச்செல்வன், பகுத்தறிவாளர் கழகத்தின் செயல் பாடுகள், பகுத்தறிவாளர் கழகப் புரவலர் தமிழர் தலைவரின் பணி கள், மாவட்டத்திற்கு 100 உறுப்பி னர்களைச் சேர்ப்பது, ஒன்றியங்கள் தோறும் அமைப்பை உருவாக்கி பொறுப்பாளர்களை நியமிப்பது பெரியார் 1000 வினா-விடைப் போட்டி நடத்துவது, கருத்தரங் குகள் நடத்துவது குறித்து விரிவாக உரையாற்றினார். இறுதியாக ஆ.கா.ஏழுலை நன்றி கூறினார்.
புதிய ப.க. மாவட்டப் பொறுப்பாளர்கள்
மாவட்ட தலைவர்: அ.தர்ம சேகர்
மாவட்ட செயலாளர்: இரா.மலர்மன்னன்
மாவட்ட அமைப்பாளர்: குணசேகரன்
மாவட்ட துணைத் துணைத் தலைவர்: ஆ.கா.ஏழுமலை
மாவட்ட துணைச் செயலாளர்: பி.தாமோதரன்
பகுத்தறிவு ஆசிரியரணி
மாவட்ட தலைவர்: இரா.கலையரசன்
மாவட்ட செயலாளர்: இரா.வெள்ளைச்சாமி
நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்
மாவட்டந்தோறும் புதிய 100 உறுப்பினர்களைச் சேர்த்து அமைப்பை வலுப்படுத்துவது எனவும், ஒன்றியங்கள் தோறும் அமைப்பை உருவாக்குவது என வும் தீர்மானிக்கப்படுகிறது. வைக் கம் போராட்ட நூற்றாண்டு விழா, கலைஞர் நூற்றாண்டு விழாக் கருத்தரங்குகள், நூல் வெளியீட்டு விழாக்களை நடத்துவது எனத் தீர்மானிக்கப்படுகிறது. ஜூலை 30இல் கந்தர்வக் கோட்டையில் மாணவர் கழகம் சார்பில் நடை பெறும் பெரியாரியல் பயிற்சிப் பட் டறைக்கு ப.க. சார்பில் அதிகமான மாணவர்களைப் பங்கேற்கச் செய் வது எனத் தீர்மானிக்கப்படுகிறது.