அட்டக்கத்தி பார்ப்பனர்களும்! ஆரிய சித்திரை-1 புத்தாண்டும்!!

2 Min Read

நீண்ட நெடிய மரபு கொண்ட தமிழர்களுக்கென்று புத்தாண்டு ஏன் இல்லை என்ற கேள்வியோடு பின்னிப் பிணைந்திருக்கிறது ஆரியச் சதி. சங்க இலக்கியங்களில் பல்வேறு செய்திகளை பேசிய தமிழ் முன்னோர்கள், தமிழ் வளர்த்த மன்னர்களின் தமிழ்ப்புத்தாண்டு குறிப்பு விடுபட்டது ஆச்சரியம் அளிக்கிறது – அல்லது அழிக்கப் பட்டிருக்கிறது

தமிழர்களுக்கென்று ஒரு புத்தாண்டு வடிவம் வந்து விடக்கூடாது என்பதில் பார்ப்பனர்கள் அதிக கவனம் எடுத்துக் கொள்கிறார்கள் – குறிப்பாக இரண்டு செய்திகளை அவர்கள் முன்னிறுத்துகிறார்கள் ஒன்று சங்க இலக்கியம் – மற்றொன்று சூரியன் சந்திரன் கோள்களின்

நகர்வு

இலக்கியத்தில் மேழம் தொடங்கி மீனம் வரை கதிர்வழி மாதங்கள் என்றும் தை தொடங்கி மார்கழி வரை மதி வழி மாதங்கள் என்றும் குறிப்பிடப்படுகிறது. ஆனால் இலக்கியத்தின் எந்த இடத்திலும் புத்தாண்டு குறித்து எந்த செய்தியும் இல்லை.
ஆனால் அவாளுக்கு ஜனவரி ஒன்றுதான் புத்தாண்டு என்று மூத்த சங்கராச்சாரியார் தெய்வத்தின் குரல் பாகம் இரண்டில் இவ்வாறு எழுதுகிறார்

“இதிலிருந்து மார்கழியை முதல் மாஸமாகக் கொண்டே ஆதியில் நம் வருஷம் இருந்திருப்பதாக ஏற்படுகிறது. ஜனவரி என்ற முதல் மாதம் இப்போதும் மார்கழி நடுவில் தானே வருகிறது? நம்மிடமிருந்துதான் மேல் நாட்டினர் இதைப் பூர்வத்தில் எடுத்துக் கொண் டார்கள். பிறகு நாம் அந்தப் பழக்கத்தை விட்டுவிட்டாலும் அவர்கள் விடவில்லை என்று தெரிகிறது.”

சத்தமில்லாமல் கிறிஸ்தவர்களை வம்புக்கு இழுக்கிறார்.

புத்தாண்டு கொண்டாட்டங்கள் வட இந்தியாவில் வேறாகவும் ஆந்திரா, கருநாடகா. கேரளாவில் வேறாக வும் அவரவர் இடம் பொருள் சமூக அமைப்பை பொறுத்து கொண்டாடப்பட்டு வருகிறது

ஆற்காடு சீதாராமய்யர் தொடங்கி வாசன் பஞ்சாங்கம் வரையிலான திருடல்கள் – காலத்தைக் கணித்த தமிழ் முன்னோர்கள் கணியன்களிடமிருந்து திருடப்பட்ட ஓலைச்சுவடிகள் என்பதை எளிதாக அறிந்து கொள்ள முடிகிறது. இதில் பஞ்சாங்க குழப்பங்கள்

தனிவகை!!

60 ஆண்டுகளும் சமஸ்கிருத சொற்களால் அமைக்கப் பட்டது எப்படி என்ற கேள்விக்கு பதில் புராணத்தில் கொண்டு போய் கதையை முடிக்கிறார்கள்.

தமிழர்களுடைய விழா எதுவும் பார்ப்பன கட்டுப்பாட்டை மீறி நடந்து விடக்கூடாது என்பதில் அவர்கள் மிகவும் அழுத்தம் திருத்தமாக இருக்கிறார்கள் என்பதற்கு அவர்களுடைய இட்டுக் கட்டும் கதைகள் சாட்சியாக நிற்கின்றன.
மாண்புமிகு மேனாள் முதலமைச்சர் முத்தமிழ் அறிஞர் கலைஞர் சட்டமன்றத்தில் தை தமிழ்ப்புத்தாண்டு எனத் தனி தீர்மானம் இயற்றினாலும் பண்பாட்டு ரீதியான சட்டத்திருத்தங்களை அவர்கள் மதிப்பதில்லை.

பொங்கல் விழா
தை தமிழ்ப்புத்தாண்டு

இவை இரண்டும் அவர்களுக்கு தீண்டத்தகாத தொழில், தீண்டத்தகாத நாள்
இது ஸநாதன தர்மத்தின் பிரதிபலிப்பே!!

– பெரியார் குயில், தாராபுரம்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *