இஸ்ரோ அமைப்பின் புதிய தலைவராக பொறுப் பேற்கும் விஞ்ஞானி முனைவர் வி.நாராயணன் அவர்களுக்கு நமது வாழ்த்து களைத் தெரிவித்துப் பாராட்டி, மகிழ்கிறோம்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மேலக்காட்டுவிளை கிராமத்தில், பிற்படுத்தப்பட்ட சமூகத்தினைச் சேர்ந்த ஓர் எளிய குடும்பத்தைச் சேர்ந்த தாய், தந்தையரின் பிள்ளையாகப் பிறந்த திரு.நாராயணன் அவர்கள், அரசுப் பள்ளியில் படித்து, தனது அறிவாற்றலாலும், கடும் உழைப்பினாலும் இந்தப் பெரு நிலைக்கு வந்துள்ளார்!
அவரது வாழ்வை இன்றைய இளைய மாணவர்கள் ஓர் எடுத்துக்காட்டாகக் கொண்டு உயரவேண்டும் என்பதும், ‘‘தகுதி, திறமை’’ என்பது எந்த ஜாதி வகுப்பினருக்கும் ஏகபோகமானதல்ல என்பதற்கு இஸ்ரோ தலைவராக உயர்ந்துள்ள திரு.ந.நாராயணன் அவர்களது வாழ்க்கை, மற்றவர்களுக்குப் போதிக்கும் ஒரு பாடம் ஆகும்!
கி.வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்
சென்னை
9.1.2025