ஆருத்ரா தரிசனம் – கனகசபை மேடைமீது ஏறிப் பக்தர்கள் தரிசனம்

1 Min Read

திமிர் பிடிப்பார்களா தீட்சதர்கள்?

சிதம்பரம், ஜன.8 சிதம்பரம் நடராஜர் கோயிலில் தேரோட்டம் 12-ஆம் தேதியும், வழிபாடு 13-ஆம் தேதியும் நடைபெறுகிறது. இந்த நேரங்களில் கனகசபை மீது ஏறி பக்தர்கள் வழிபாடு செய்ய பாதுகாப்பு வழங்க வேண்டும் என இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் பரணிதரன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் சார் ஆட்சியருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
சிதம்பரம் நடராஜர் கோயிலில் கனகசபை மீது ஏறி பக்தர்கள் வழிபாடு செய்ய தமிழ்நாடு அரசு ஆணை பிறபித்ததன் அடிப்படையில் கடந்த சில ஆண்டுகளாக பக்தர்கள் தொடர்ந்து கனகசபை மீது ஏறி வழி பாடு செய்து வருகின்றனர். இந்தநிலையில் கடந்த ஆண்டு ஆருத்ரா விழாவின் முக்கிய 4 நாட்கள் கனகசபை மீது ஏறி வழிபாடு செய்ய கோயில் தீட்சிதர்கள் அனுமதிக்கவில்லை என்ற புகார் எழுந்ததன் அடிப்படையில் நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு விசா ரணை நடைபெற்றது.

விசாரணை முடிவில் ஆறுகால பூஜையை தவிர்த்து மற்ற நேரங்களில் கனசபை மீது ஏறி வழிபாடு செய்யலாம் என தீட்சிதர்கள் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அந்த வழக்கு முடிக்கப்பட்டது. இந்நிலையில், இந்த ஆண்டு கடந்த 4-ஆம் தேதி கொடியேற்றத்துடன் ஆருத்ரா விழா தொடங் கியுள்ளது. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் 12-ஆம் தேதியும், வழிபாடு 13-ஆம் தேதியும் நடை பெற்றவுள்ளது.
இந்த விழாவின் போது பக்தர்கள் பாதுகாப்பாக கனசபை மீது ஏறி வழிபாடு செய்ய பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க வேண்டி இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் காவல்துறை கண்காணிப்பாளர் மற்றும் சார் ஆட்சியருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *