சத்துணவு பணியாளர் களின் கூடுதல் பொறுப்பு படியை ரூ.600இல் இருந்து ரூ.1000 ஆக உயர்த்தி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. ஒரு சத்துணவு பணியாளர் ஒன்றுக்கு மேற்பட்ட சத்துணவு மய்யங்களை கூடுதலாக கவனித்து வருவதாலும், உயர்ந்து வரும் விலைவாசி காரண மாகவும், அவர்களுக்கு நாளென்று ரூ.20 வீதம் மாதத்திற்கு 3600 ஆக வழங்கப்பட்டு வரும் கூடுதல் பொறுப்புப் படி, ஒரு நாளுக்கு 333 வீதம், மாதத்திற்குரூ.1000ஆக உயர்த்துவதாக கூறியுள்ளது.
அடிக்கடி வெளிநாட்டு எண்ணிலிருந்து தொலைப்பேசி அழைப்பா?
அடிக்கடி வெளிநாட்டு நம்பர்களில் வரும் மோசடி அழைப்புகளைத் தடுப்பதற்கு; மோசடி (ஸ்பாம்) எண்களை சிவப்பு நிறத்தில் காட்டி எச்சரிக்கும் TrueCallerஅய் உபயோகிக்கலாம் தொடர்ந்து அழைப்புகள் வந்தால், அந்த எண்ணை தடை (பிளாக்) செய்யுங்கள். அது குறித்து 1930 என்ற சைபர் கிரைம் உதவி எண்ணில் புகார் அளிக்கவும். வாட்ஸ்அப் வெளிநாட்டு நம்பரில் இருந்து வரும் அழைப்புகளை தடுக்க “Silent Unknown Calls” என்ற அம்சத்தை பயன் படுத்தலாம்.
தமிழ்நாட்டில் மருத்துவ கல்வி
தமிழ்நாட்டில் மருத்துவக் கல்லூரிகளில் கூடுதலாக 500 எம்.பி.பி.எஸ். இடங்கள் மற்றும் 88 முதுநிலை மருத்துவ இடங்களை அதிகரிக்க தேசிய மருத்துவ ஆணையத்திடம் மாநில மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககம் விண்ணப்பித்துள்ளது.