யு.ஜி.சி.யின் அறிவிப்பு அரசமைப்புச் சட்டத்திற்குப் புறம்பானது – அதனை ஏற்க முடியாது!

Viduthalai
1 Min Read

சட்ட ரீதியாகவும் – அரசியல் ரீதியாகவும் போராட்டத்தைத் தமிழ்நாடு அரசு முன்னெடுக்கும்!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி

சென்னை, ஜன.8 பல்கலைக்கழக துணைவேந்தர் நியமன தேடுதல் குழுவை ஆளுநரே முடிவு செய்வார் என்ற யு.ஜி.சி.யின் அறிவிப்பு அரச மைப்புச் சட்டத்திற்குப் புறம்பானது – அதனை ஏற்க முடியாது! சட்ட ரீதியாகவும் – அரசியல் ரீதியாகவும் போராட்டத்தைத் தமிழ்நாடு அரசு முன்னெடுக்கும் என்றார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
பல்கலைக்கழக துணைவேந்தர் நியமன தேடுதல் குழுவை ஆளுநரே முடிவு செய்வார் என்று யு.ஜி.சி. வெளியிட்டது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளப் பதிவு வெளியிட்டுள்ள செய்தி வருமாறு:

மாநில அரசுகளைச் சிறுமைப்படுத்துவதாக உள்ளது
துணைவேந்தர்கள் நியமனத்தில் ஆளுநர்களுக்குப் பரந்த அதிகாரங்களை வழங்குவது மற்றும் கல்விப்புலம் சாராதோரும் துணைவேந்தேர் ஆகலாம் எனும் பல்கலைக்கழக மானியக் குழுவின் புதிய விதிமுறைகள் கூட்டாட்சியியல் மற்றும் மாநில உரிமைகளுக்கு எதிரான நேரடித் தாக்குதல் ஆகும். ஒன்றிய பா.ஜ.க. அரசின் இந்த எதேச்சதிகார முடிவு அதிகாரக் குவியலுக்கு வழிவகுத்து, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளைச் சிறுமைப்படுத்துவதாக உள்ளது.
மக்களால் தேர்தெடுக்கப்பட்டவர்க ளிடம்தான் கல்வி தொடர்பான அதிகாரங்கள் இருக்க வேண்டும், பா.ஜ.க. அரசின் கைப்பாவையாகச் செயல்படும் ஆளுநர்கள் கைக்கு அது செல்லக்கூடாது.

நாட்டிலேயே அதிக அளவில்…
தலைசிறந்த உயர்கல்வி நிறுவ னங்களை நாட்டிலேயே அதிக அளவில் கொண்டுள்ள தமிழ்நாடு நமது கல்வி நிறுவனங்களின் தன்னாட்சி பறிக்கப்படுவதை வேடிக்கை பார்த்துக்கொண்டு அமைதியாக இருக்காது.
அரசமைப்புச் சட்டப்படி கல்வி ஒத்திசைவுப் பட்டியலில் உள்ளது. எனவே, தன்னிச்சையாக இந்தப் புதிய விதிமுறைகள் தொடர்பான அறிவிக்கையை யு.ஜி.சி. வெளியிட்டது அரசமைப்புச் சட்டத்துக்குப் புறம்பா னதாகும். இந்த வரம்புமீறிய செயலை ஏற்கமுடியாது. இதற்கு எதிராக, சட்ட ரீதியாகவும் அரசியல்ரீதியாகவும் போராட்டத்தைத் தமிழ்நாடு முன்னெ டுக்கும்.
– மேற்கண்டவாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *