தந்தை பெரியார் 51ஆவது நினைவு நாள்
வைக்கம் வெற்றி முழக்கம்-பரப்புரைக் கூட்டங்கள்
தந்தை பெரியார் 51ஆவது நினைவு நாள், “வெற்றி முழக்கம்” தமிழ்நாடு,கேரளா முதலமைச்சர்களுக்கு நன்றி! திராவிட மாடல் அரசு வரலாற்று சாதனைகள் விளக்க பொதுக்கூட்டம் தமிழ்நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது.அதன் விவரம் வருமாறு:
திருச்செங்கோடு
கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் அறிவுறுத்தலின் படி கடந்த 31.12.2024, அன்று மாலை 6 மணி அளவில் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளி எதிரில் தந்தை பெரியார் 51ஆவது நினைவு நாள் மற்றும் வைக்கம் வெற்றி முழக்கம், தமிழ்நாடு மற்றும் கேரளா முதலமைச்சர்களுக்கு நன்றி தெரிவித்து திராவிட மாடல் அரசின் வரலாற்று சாதனைகளை எடுத்துரைத்து கழக பொதுக்கூட்டம் திருச்செங்கோடு நகரத் தலைவர் வெ.மோகன் தலைமையில் எழுச்சியுடன் நடைபெற்றது.
நாமக்கல் மாவட்ட இளைஞரணித் தலைவர் ஆனந்தகுமார் கணேசன் வரவேற்புரை ஆற்றினார். மற்றும் தலைமை கழக அமைப்பாளர் ஆத்தூர் அ.சுரேஷ் துவக்க உரை ஆற்றினார்.
இக்கூட்டத்திற்கு சுயமரியாதை பிரச்சார நிறுவனத் தலைவர் பொத்தனூர் க.சண்முகம் மற்றும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் நாமக்கல் மேற்கு மாவட்டச் செயலாளர் எஸ்.எம்.மதுரா செந்தில் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பகுத்தறிவாளர்கள் கழகத்தின் மாநில துணைப் பொதுச் செயலாளர் அண்ணா சரவணன் சிறப்புரை ஆற்றினார். பறை இசையுடன் நிகழ்ச்சி துவங்கப்பட்டது.
விடுதலைச் சந்திரன் நடத்திய மந்திரமா? தந்திரமா? என்ற மூடநம்பிக்கைக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி பெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
நாமக்கல் மாவட்டத் தலைவர் ஆ.கு.குமார், நாமக்கல் மாவட்டச் செயலாளர் வை.பெரியசாமி, பகுத்தறிவாளர் கழகத்தின் மாநில அமைப்பாளர் ப.இளங்கோ, திராவிட முன்னேற்றக் கழகத்தின் திருச்செங்கோடு நகரச் செயலாளரும், திருச்செங்கோடு நகர் மன்றத் துணைத் தலைவருமான டி.கார்த்திகேயன், திருச்செங்கோடு நகர் மன்றத் தலைவர் நளினி சுரேஷ்பாபு, திராவிட முன்னேற்றக் கழகத்தின் திருச்செங்கோடு ஒன்றியச் செயலாளர் வட்டூர் ஜி.தங்கவேல், திருச்செங்கோடு ஒன்றியக் குழு பெருந்தலைவர் எம்.சுஜாதா தங்கவேல் மற்றும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாநில மகளிர் அணி சமூக வலைத்தள பொறுப்பாளரும் திருச்செங்கோடு ஒன்றியக் குழு உறுப்பி னருமான முனைவர் அ.ரியா ஆகியோர் வாழ்த்துரை ஆற்றினர்.
மேலும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் திருச்செங்கோடு நகரச் செயலாளர் டி.கே.செல்லமுத்து, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாநில மாணவரணித் துணைச் செயலாளர் த.பவுன்ராஜ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் திருச்செங்கோடு நகரச் செயலாளர் எஸ்.சுகுமார், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (மார்க்சிஸ்ட்) திருச்செங்கோடு நகரச் செயலாளர் எஸ்.சீனிவாசன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் திருச்செங்கோடு நகரச் செயலாளர் சக்தி பரமசிவம், ஆதித்தமிழர் பேரவையின் மாநில துணைப் பொதுச் செயலாளர் திரு இரா.செல்வவில்லாளன் ஆகிய இண்டியா கூட்டணித் தலைவர்கள் பங்கேற்றனர்.
மேலும் திருச்செங்கோடு நகரச் செயலாளர் மா.முத்துக்குமார், குமார பாளையம் நகரத் தலைவர் சு.சரவணன், குமாரபாளையம் நகரச் செயலாளர் ஆ.காமராஜ், நாமக்கல் மாவட்டத் துணைச் செயலாளர் க.பொன்னுசாமி, நாமக்கல் மாவட்ட துணைத் தலைவர் கே.எஸ்.அசேன், திருச்செங்கோடு நகர இளைஞரணிச் செயலாளர் வே.பாரதிராஜா, பகுத்தறிவாளர் கழகத்தின் நாமக்கல் மாவட்டத் தலைவர் வீர.முருகன், பகுத்தறிவாளர் கழகத்தின் நாமக்கல் மாவட்டத் துணைத்தலைவர் மருத.அறிவாயுதம் மற்றும் கழக உறுப்பினர் மு.பூவரசன் ஆகிய கழக நிர்வாகிகள் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.
இந்நிகழ்ச்சிக்கு திருச்செங்கோடு நகர இளைஞரணித் தலைவர் கி.நந்தகுமார் நன்றியுரை ஆற்றினார்.
அரூர் – வேப்பநத்தம்
தந்தை பெரியார் அவர்களின் 51 ஆம் ஆண்டு நினைவு நாள், வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழாவை சிறப்பாக நடத்திய தமிழ்நாடு கேரள முதலமைச்சர்களுக்கு நன்றி அறிவிப்பு, திராவிட மாடல் ஆட்சியின் சாதனைகளை விளக்கி திராவிடர் கழகம் சார்பில் பொதுக்கூட்டம் அரூர் கழக மாவட்டம், வேப்பநத்தம் கிராமத்தில் 31-12-2024-ஆம் தேதி மாலை 6 மணி அளவில் அம்பேத்கர் சிலை அருகே நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு மாவட்ட திராவிடர் கழக தலைவர் அ.தமிழ்ச்செல்வன் தலைமை தாங்கினார்.மாவட்ட மகளிர் அணி பொறுப்பாளர் பெ. கல்பனா அனைவரையும் வரவேற்று பேசினார். மாவட்ட துணை செயலாளர் வழக்குரைஞர் ரே.வடிவேலன், தேசிய மக்கள் கட்சி நிறுவனர் இனமுரசு கோபால், ஒன்றிய பகுத்தறிவாளர் கழக செயலாளர் இராமச்சந்திரன், மேனாள் ஊராட்சி மன்ற தலைவர் கல்பனா ரவீந்திரன், ஒன்றிய திமுக துணைச் செயலாளர் சங்கீதா நடராஜன், திமுக நிர்வாகி கோவிந்தன், விசிக ஒன்றிய தொண்டர் அணி அமைப்பாளர் கே. கண்ணதாசன், ஒன்றிய பகுத்தறிவாளர் கழகத் தலைவர் என்.டி.குமரேசன் ஆகியோர் முன்னிலை ஏற்றனர், நிகழ்ச்சியின் முன்னதாக புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் சிலைக்கு மாநில மகளிர் அணி செயலாளர் தமிழ்ச்செல்வி தலைமையில் கழக சொற்பொழிவாளர் பா.மணியம்மை, மாவட்ட மகளிர் அணி பொறுப்பாளர்கள் கல்பனா, உமா ஆகியோர் இணைந்து மாலை அணிவித்தனர். தந்தை பெரியார் படத்திற்கு தலைமைக் கழக அமைப்பாளர் ஊமை.ஜெயராமன், மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் விசிக மாவட்ட செயலாளர் சாக்கன் சர்மா ஆகியோர் கொள்கை முழக்கமிட்டு மாலை அணிவித்தனர்.
தலைமை கழக அமைப்பாளர் ஊமை.ஜெயராமன், தொடக்க உரையாற்றினார். மாநில மகளிர் அணி செயலாளர் தகடூர் தமிழ்ச்செல்வி, விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் சி.கே.சாக்கன் சர்மா,திண்டிவனம் மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் ஏழுமலை, விசிக தொகுதி பொறுப்பாளர் கேசவன் ஆகியோர் கருத்துரையாற்றினர்.
வைக்கம் போராட்ட வரலாறு நூற்றாண்டு நிறைவு விழாவை சிறப்பாக நடத்திய தமிழ்நாடு, கேரள முதலமைச்சர்களுக்கு நன்றி தெரிவித்து கழக சொற்பொழிவாளர் வழக்குரைஞர் பா. மணியம்மை, திராவிட மாடல் ஆட்சியின் சாதனைகளை விளக்கி திராவிட முன்னேற்றக் கழக ஆதிதிராவிட நலக்குழு மாநிலத் துணைச் செயலாளர் சா.ராஜேந்திரனும் சிறப்புரையாற்றினர்.
இந்நிகழ்ச்சியில் மகளிர் அணி பொறுப்பாளர் உமா, கடத்தூர் விடுதலைவாசர் வட்ட தலைவர் வ. நடராசன், பகுத்தறிவாளர் ஆசிரியர் தீத்து, பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றிய தலைவர் அய்யனார், ஒன்றிய இளைஞரணி தலைவர் சஞ்சீவன், மாவட்ட எழுத்தாளர் மன்ற துணை செயலாளர் பாளையம் பசுபதி, மாவட்ட திமுக ஆதிதிராவிடர் நலக்குழு மாவட்ட துணை செயலாளர் தாளநத்தம் சொ. பாண்டியன், மாவட்ட மாணவர் கழகத் தலைவர் சா.சாய்குமார், மாணவர் கழகப் பொறுப்பாளர்கள் ப.பெரியார், ஆ.பிரதாப், ஊர் செயலாளர் ரவி, சிறப்பு அழைப்பாளர்களாக திண்டிவனம் நகர செயலாளர் பன்னீர்செல்வம், திண்டிவனம் நகர பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் கஜேந்திரன், மகளிர் அணி ஜமுனா, கற்பகம், மற்றும் வேப்பநத்தம் ஜாக்கின், பெரியசாமி, அக்சையா, சுபர்ணா மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
நெய்வேலி
நெய்வேலியில் தந்தை பெரியார் அவர்களின் 51ஆம் ஆண்டு நினைவு நாள் வைக்கம் வெற்றி முழக்கம் பொதுக்கூட்டம் 30.12.2024 திங்கட்கிழமை மாலை 6:30 மணி முதல் 8:30 மணி வரை, வட்டம் 18 காமராஜர் சிலை அருகில் நெய்வேலி நகரத்தில் நடைபெற்றது. நெய்வேலி நகர இளைஞரணி தலைவர் பா.மாணிக்கவேல் தலைமையில் நெய்வேலி நகர செயலாளர் கு.ரத்தினசபாபதி அனைவரையும் வரவேற்றார்.
கழக காப்பாளர் அரங்க பன்னீர்செல்வம், பொதுக்குழு உறுப்பினர் நா. தாமோதரன், மாவட்டத் தலைவர் சொ.தண்டபாணி, மாவட்ட அமைப்பாளர் சி.மணிவேல், மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர் வி.அருணாச்சலம், மாநில இளைஞரணி துணை செயலாளர் கோ.வேலு, மாவட்ட இளைஞரணித் தலைவர் நா.உதய சங்கர், நெய்வேலி நகரத் தலைவர் ச.சு.இசக்கிமுத்து ஆகியோர் முன்னிலை ஏற்றனர்.
கழக பேச்சாளர் இராம. அன்பழகன் சிறப்புரை ஆற்றினார். நிகழ்வில் வடக்குத்து கிளை தலைவர் தங்க பாஸ்கர், செயலாளர் இரா கண்ணன், செல்வராசு மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் கோ பாலகுரு நன்றி கூறினார்.
கடலூர்
கடலூரில் தந்தை பெரியார் அவர்களின் 51ஆவது நினைவு நாள் வைக்கம் வெற்றி முழக்கம் பொதுக்கூட்டம் 24.12.2024 அன்று காலை 11 மணிக்கு தந்தை பெரியார் சிலை வளாகத்தில் நடைபெற்றது.
மாவட்ட தலைவர் சொ. தண்டபாணி தலைமையில் கடலூர் மாநகர தலைவர் தென். சிவக்குமார் அனைவரையும் வர வேற்றார். மாவட்ட செயலாளர் க.எழிலேந்தி, மாவட்ட அமைப்பாளர் சி மணிவேல், மாவட்ட இணை செயலாளர் நா.பஞ்சு மூர்த்தி, மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர் வி அருணாச்சலம், மாவட்ட பெரியார் வீர விளையாட்டு கழக தலைவர் இரா.மாணிக்கவேல், கழக பேச்சாளர் புலவர் இராவணன், திமுக தேர்தல் பணிக்குழு உறுப்பினர் இள.புகழேந்தி, விசிக மாநில அமைப்பு செயலாளர் மார்பன் ஆகியோர் முன்னிலையேற்றனர்.
பொதுக்குழு உறுப்பினர் நா. தாமோதரன் தொடக்க உரையாற்றினார். கழக பேச்சாளர் யாழ். திலீபன் சிறப்புரை ஆற்றினார். கடலூர் இரா.சுந்தரமூர்த்தி, சு.அய்ங்கரன், சுதாகர், பெ.தமிழரசன், நூலகர் இரா. கண்ணன், ஜோன் மதி, சதீஷ் ராஜ்குமார், பீமாராவ், ராம்ஜி ரா. சிங்காரம், பொதுநல பேரியக்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் எஸ்.என்.கே.ரவி மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாநகர செயலாளர் இரா.சின்னதுரை நன்றி கூறினார்
குத்தாலம்
தந்தை பெரியார் 51 ஆம் ஆண்டு நினைவு நாள், வைக்கம் வெற்றி முழக்கம், தமிழ்நாடு கேரளா முதலமைச்சர்களுக்கு நன்றி, திராவிட மாடல் அரசின் வரலாற்று சாதனைகள் விளக்கப் பொதுக்கூட்டம் 4.1.2025 சனிக்கிழமை மாலை 6 மணி அளவில் மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் பேருந்து நிலையம் அருகில் நடைபெற்றது.
மாவட்ட செயலாளர் கி.தளபதிராஜ் தலைவரை முன்மொழிந்து நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்.
குத்தாலம் நகர கழக தலைவர் சா.ஜெகதீசன் தலைமையேற்க மாவட்டத் கழகத் தலைவர் கடவாசல் குணசேகரன், ஒன்றிய தலைவர் ச.முருகையன், மாவட்ட அமைப்பாளர் ஞான.வள்ளுவன், திமுக கலை இலக்கிய பகுத்தறிவுப் பேரவை அமைப்பாளர் கலைக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். குத்தாலம் ஒன்றிய கழக செயலாளர் கு.இளமாறன் அனைவரையும் வரவேற்றார்.
கழக சொற்பொழிவாளர் யாழ்.திலீபன் சிறப்புரையாற்ற மயிலாடுதுறை நகர செயலாளர் பூ.சி.காமராஜ் நன்றி கூறினார். நிகழ்வில் பங்கேற்று உரையாற்றியவர்களுக்கு தளபதிராஜ் எழுதிய ‘இந்திய அரசியல் சட்ட எரிப்புப் போராட்டம்! (ஒரு வரலாற்றுக் கையேடு) நூலை மாவட்ட தலைவர் கடவாசல் குணசேகரன் அளித்தார். நிகழ்ச்சி தொடக்கத்தில் மாவட்ட இளைஞரணி தலைவர் க.அருள்தாஸ் இயக்கப் பாடல்களை பாடினார்.
இந்நிகழ்வில் மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர் தங்க.செல்வராஜ், குத்தாலம் ஒன்றிய கழக துணைச் செயலாளர் தி.சபாபதி, அமைப்பாளர் எம்.பாலசுந்தரம், மாவட்ட விவசாய அணி செயலாளர் கு.இளஞ்செழியன், மயிலாடுதுறை நகர துணைத் தலைவர் இரெ.புத்தன், விடுதலை வாசகர் வட்ட அமைப்பாளர் ஜெகன் சாமிக்கண்ணு, மற்றும் கழகத் தோழர்கள் பல்வேறு அமைப்பைச் சேர்ந்த தோழர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
கீழ்வேளூர்
நாகை மாவட்டம் கீழ்வேளூரில் தந்தை பெரியார் 51 ஆம் ஆண்டு நினைவு நாள் – “வைக்கம் வெற்றி முழக்கம்” தமிழ்நாடு, கேரள முதலமைச்சர்களுக்கு நன்றி! – திராவிட மாடல் அரசின் வரலாற்றுச் சாதனைகள் விளக்க கழகப் பொதுக் கூட்டம் எழுச்சியோடு நடைபெற்றது.
நாகை மாவட்ட கழக தலைவர் வி.எஸ்.டி.ஏ.நெப்போலியன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் கீழ்வேளூர் ஒன்றிய தலைவர் பாவா.ஜெயக்குமார் அனைவரையும் தொடக்கத்தில் வரவேற்று உரையாற்றினார்.
நாகை மாவட்ட கழக செயலாளர் ஜெ.புபேஸ்குப்தா, திமுக கீழ்வேளூர் வடக்கு ஒன்றிய செயலாளர் ப.கோவிந்தராஜன், திமுக பேரூர் செயலாளர் அட்சயலிங்கம், மாவட்ட கழக துணை தலைவர் ரெ.துரைசாமி, பேரூர் கழக தலைவர் அ.பன்னீர்செல்வம் ஆகியோர் முன்னிலையேற்று உரையாற்றினர்.
மாநில இளைஞரணி கழக செயலாளர் நாத்திக பொன்முடி கூட்டத்தினை தொகுத்து வழங்கினார். மாநில சட்டக் கல்லூரி திராவிட மாணவர் கழக அமைப்பாளர் மு. இளமாறன் தொடக்க உரையாற்றினார்.
தலைமை கழக அமைப்பாளர் வீ.மோகன் சிறப்புரையாற்றினார். தலைமை கழகப் பேச்சாளர் இராம.அன்பழகன் வைக்கம் போராட்ட வரலாற்றையும், திராவிட மாடல் அரசின் வரலாற்று சாதனைகளையும் விளக்கி சிறப்புரையாற்றினார்.
இதற்கு முன்னதாக இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி நாகை மாவட்ட தலைவர் ஆர்.என்.அமிர்தராஜா, விசிக மாவட்ட செயலாளர் நாக.அருட்செல்வன், விசிக ஒன்றிய செயலாளர்கள் பாவேந்தன், ராஜேஷ், சி.பி.அய்.எம் மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் பாண்டியன் ஆகியோர் உரையாற்றி சிறப்பித்தனர். மாவட்ட கழக சார்பில் பங்கேற்றோருக்கு பயனாடையும், தந்தை பெரியாரின் பெண் ஏன் அடிமையானாள்? புத்தகமும் வழங்கி சிறப்பு செய்யப்பட்டது.
கீழ்வேளூர் ஒன்றிய செயலாளர் செருநல்லூர் பாக்கியராஜ் அனைவருக்கும் நன்றி கூறினார். கூட்டத்தில் மாவட்ட விவசாய தொழிலாளர் அணி செயலாளர் இரா.இராமலிங்கம், கீழ்வேளூர் ஒன்றிய துணைத்.தலைவார் ஆ.அரங்கராசு, மாவட்ட தொழிலாளர் அணி அமைப்பாளர் இராச.முருகையன், கீழ்வேளூர் வட்டார விவசாய அணி தலைவர் ஒக்கூர் இராஜேந்திரன், திருமருகல் ஒன்றிய தலைவர் மு.சின்னதுரை, கீழையூர் ஒன்றிய தலைவர் ரெ.ரெங்கநாதன், மாவட்ட மகளிரணி தலைவர் இரா.பேபி, திருமருகல் ஒன்றிய துணைத் தலைவர் காமராஜ், மாவட்ட திராவிட மாணவர் கழக தலைவர் மு.குட்டிமணி, மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளர் செ.பாக்கியராஜ், நாகை நகர அமைபாளர் சண்.ரவி, நாகை நகர மாணவர் கழக துணை அமைப்பாளர் செ. அறிவுச்செல்வன் உள்ளிட்ட தோழர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.