தஞ்சை.ஜன, 7. தமிழ்நாடு முழுவதும் நடைபெற்று வரும் தொடர் கூட்டங்கள் வரிசையில் தஞ்சை பள்ளி அக்ரஹாரத்தில் ”தந்தை பெரியார் 51 ஆவது நினைவுநாள்”, ”வைக்கம் வெற்றி முழக்கம்” பொதுக்கூட்டம் மிகச்சிறப்பாக நடைபெற்றது. தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்.
நிகழ்ச்சிகள் நடைபெறாத இடங்களில் மக்களைச் சந்திக்க வேண்டும் என்கிற நோக்கத்துடன் தஞ்சாவூர் புறநகர் பகுதியில் உள்ள பள்ளி அக்ரஹாரம் பகுதியில், “தந்தை பெரியார் 51 ஆவது நினைவு நாள்”, “வைக்கம் வெற்றி முழக்கம்”, “தமிழ்நாடு, கேரள முதலமைச்சர்களுக்கு நன்றி”, திராவிட மாடல் அரசின் வரலாற்றுச் சாதனைகள்” என்று நான்கு முக்கிய தலைப்புகளில் மாபெரும் பொதுக்கூட்டம் 6.1.2025 அன்று மாலை 6 மணிக்கு தஞ்சாவூர் மாநகர திராவிடர் கழகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஏற்ெகனவே இயங்கி வந்த பெரியார் படிப்பகம் இருந்த இடத்தில் தற்போது தண்ணீர் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. அதன் அருகில் பள்ளி அக்ரஹாரம் கோ.ஆளவந்தார் அவர்களை நினைவு கூரும் விதமாக மேடை சிறப்பாக அமைக்கப்பட்டிருந்தது. வெண்ணாற்றுப் பாலத்தின் இருபுறங்களும், பள்ளி அக்ரஹாரம் கடைவீதியெங்கும் கழகக் கொடிகள் பட்டொளி வீசிப்பறந்தன. பதாகைகளும் கட்டப்பட்டு திருவிழாவைப்போன்று நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தகக்து.
தஞ்சை மாநகரச் செயலாளர் செ.தமிழ் செல்வன் இணைப்புரை வழங்க, மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் சி.அமர்சிங் தலைமையில், பள்ளி அக்ரஹாரம் பகுதியைச் சேர்ந்த கழகத் தோழர் க.ஜோதிபாசு அனைவரையும் வரவேற்று உரையாற்றினார். நிகழ்வில் கழக மாநில ஒருங்கிணைப்பாளர்கள் இரா.ஜெயக்குமார், இரா.குணசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்து உரையாற்றினர். தஞ்சை மாவட்ட செயலாளர் அ.அருணகிரி, மாநகர இணைச் செயலாளர் இரா.வீரக்குமார், கரந்தை பகுதித் தலைவர் வெ.விஜயன், கழகக் காப்பாளர் மு.அய்யனார், தஞ்சை மாநகரத் தலைவர் பா.நரேந்திரன், மாநகர துணைச் செயலாளர் இரா.இளவரசன், கரந்தை பகுதிச் செயலாளர் ம.தனபால் ஆகியோர் முன்னிலை வகித்துச் சிறப்பித்தனர். வெண்ணாற்று பாலத்தின் வழியாக வருகை தந்த ஆசிரியருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. வெண்ணாற்று பாலம், பள்ளி அக்ரஹாரம் கடைவீதி சந்திக்கும் இடத்தில் கழகக் கொடியை தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் ஏற்றி வைத்தார். அங்கிருந்து கூட்டம் நடக்கும் பகுதிக்கு பக்கவாட்டிலுள்ள தண்ணீர் தொட்டி சுற்றுச்சுவற்றுக்குள் ஆசிரியர் புங்க மரச்செடியை நட்டார். மேடையேறுவதற்கு முன்பு, எதிர்கொண்ட பத்திரிகையாளர்களுக்கு ஆளுநர் பற்றிய கேள்விகளுக்கு பதில் சொன்னார்.
தி.மு.க. செயற்குழு உறுப்பினர் செல்வம், தஞ்சை துணை மேயர் டாக்டர் அஞ்சுகம் பூபதி, காங்கிரஸ் கட்சி மாநகர் மாவட்டத் தலைவர் பி.ஜி.கிருஷ்ணமூர்த்தி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் முத்து உத்திராபதி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நகரச் செயலாளர் வடிவேலன், தி.மு.க. மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர், மாமன்ற உறுப்பினர் செந்தமிழ் செல்வன், மக்கள் நீதிமய்யம் அமைப்பின் மாவட்ட அமைப்பாளர் சரவணன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகரச் செயலாளர் அப்சாலிக், தமிழக வாழ்வுரிமைக் கட்சி மாவட்டச் செயலாளர் அண்ணாதுரை, தி.மு.க. 1ஆவது வார்டு பொறுப்பாளர் சடகோபராமானுஜம், தி.மு.க. 5 வார்டு செயலாளர் கார்த்திகேயன், 5 ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் ரேவதி மற்றும் தி.மு.க. தோழர் பார்த்தசாரதி ஆகியோர் முன்னிலை வகித்து உரையாற்றினர். தஞ்சாவூர மாநகராட்சி மேயர், மாநகர தி.மு.க. செயலாளர் சண் ராமநாதன் வருகை தந்து சிறப்பித்தார். இறுதியாக தமிழர் தலைவர் ஆசிரியர் உரையாற்றினார். தஞ்சை மாநகர துணைத் தலைவர் அ.டேவிட் நன்றி கூறி நிகழ்ச்சியை நிறைவு செய்தார்.
முன்னதாக தோழர்கள் ஆசிரியருக்கு ஆடையணிவித்து சிறப்பு செய்தனர். நீதிபதி வேணுகோபால் அவர்களது மைத்துனரும் தஞ்சாவூர் குடும்ப விளக்கு நல நிதி நிர்வாகி, வேணுகோபால் அவர்களின் தந்தையாருமான வே.பார்த்தசாரதி பெரியார் உலகத்திற்கு ரூபாய் 5,000/- நன்கொடை வழங்கியதோடு, உலகப்புகழ் பெற்ற தஞ்சாவூர் தட்டில் தந்தை பெரியாரின் உருவப்படத்தைப் பொறித்து ஆசிரியரிடம் வழங்கினார். அடுத்து திருவாரூர் வி.மோகன் 12 ஆண்டு விடுதலை சந்தாக்களை வழங்கினார்.
கழகத் தலைவர் உரை
இறுதியாக ஆசிரியர் உரையாற்றினார். முன்னதாக ஆசிரியர் இங்கே வந்து பேசி 50 ஆண்டுகள் ஆகிவிட்டன என்பதை அறிவிப்பு செய்திருந்தார்கள். அதை மெய்ப்பிப்பது போல ஆசிரியர், ‘‘மிக நீண்ட இடைவெளியில் உங்களை சந்திக்க வந்திருக்கிறேன்” என்று தொடங்கி, ‘‘ஆனாலும், நேரத்தின் நெருக்கடி இல்லாவிட்டால் உங்களுடன் நீண்ட நேரம் பேசிக்கொண்டே இருக்க வேண்டும் என்கிற உணர்வுதான் இருக்கிறது” என்று முடித்தார். தொடர்ந்து பள்ளி அக்ரஹாரம் பகுதி கோ.ஆளவந்தார், அய்யம்பேட்டை ரங்கசாமி போன்றோரை நினைவு கூர்ந்து பேசினார். எந்த வசதி, வாய்ப்பும் இல்லாத காலத்தில் தானும், கலைஞரும் மாணவர் பருவத்தில் ஒன்றாக இணைந்து பிரச்சாரம் செய்ததை சுட்டிக்காட்டிவிட்டு, ”திராவிடர் இயக்கத்தின் அடித்தளம் வலிமையாக இருக்கிறது. எந்தக்கொம்பனாலும் இதை ஒன்றும் செய்ய முடியாது” என்று எடுத்த எடுப்பிலேயே கூறியதும் மக்கள் ஆரவாரித்தனர். மேலும், “அந்தக்காலத்தில் தாய்மார்களே என்று சொல்வோம். ஆனால் தாய்மார்களே இருக்க மாட்டார்கள். ஆனால் இன்றைக்கு ஏராளமான தாய்மார்கள் வந்து அமர்ந்திருக்கின்றீர்கள்” என்று கூறி இந்த ஒரு தகவலில் ஆசிரியர் திராவிடர் இயக்கத்தின் 100 ஆண்டு கால பெண் விடுதலைப் போராட்டத்தின் வெற்றியை பதிவு செய்துவிட்டார். மேடையில் இருப்போர் உட்பட மக்கள் வியப்புடன் இந்தத் தகவலை கேட்டு வியந்து கைதட்டினர்.
‘திராவிட மாடல்’ அரசின் நலத் திட்டங்கள்
தொடர்ந்து தமிழ்நாடு அரசின் மக்கள் நலத்திட்டங்களை பட்டியலிட்டு, இதன் மூலம் இந்த் அரசுக்கு நல்ல பெயர் வந்துவிடக்கூடாதே என்றுதான் முட்டுக்கட்டை போடுகிறார்கள். மேலும் புயலால் ஏற்பட்ட இழப்பைச் சுட்டிக்காட்டி, இத்தனை நெருக்கடியிலும் தமிழ்நாடு அரசு ஏராளமான மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது” என்று பாராட்டினார். அதே போல் ஆளுநரின் சட்டவிரோத செயல்களை சுட்டிக்காட்டி, “ஆளுநரை வெளியேற்றும் வரை இந்த இயக்கமும், மக்களும் ஓயமாட்டார்கள்” என்று அழுத்தம் திருத்தமாகக் கூறினார். மக்கள் உணர்ச்சிவசப்பட்டு பலமாக கைதட்டினர். அந்தப்பகுதியில் இருக்கும் கரந்தை தமிழ்வேள் உமாமகேசுவரனார் அவர்களை நினைவுபடுத்தி, ”தமிழ்கூறும் நல்லுலகத்தை உருவாக்கும் கரந்தை தமிழ்க்கல்லூரி” என்று கூறி, அய்யா இராமநாதன், விருத்தாசலம் போன்றவர்கள் உட்பட பலரையும் உருவாக்கி இருப்பதை எடுத்துரைத்தார். மேலும் அவர், “அறிவுத் தாகத்தை தீர்த்த பெரியார் படிப்பகம் இருந்த இடத்தில் தண்ணீர் தாகத்தை தீர்க்கும் தண்ணீர் தொட்டி திறக்கப்பட்டிருக்கிறது! இரண்டும் தேவை. ஆகவே, மறுபடியும் பெரியார் படிப்பகத்தை உருவாக்குங்கள்” என்று பணித்துவிட்டு, இறுதியாக ஆளுநர் தனி அரசு நடத்த முயற்சிப்பதை முறியடிக்க வேண்டும். ஆகவே, நான் கூறுவதை திருப்பிக்கூறுங்கள் என்று மக்களிடம் வேண்டுகோள் வைத்து, “ஆட்சிக்கு விரோதமாக இருக்கும் ஆளுநரே வெளியேறு! ஆளுநரே வெளியேறு! ஆளுநரை வெளியேற்றும் நாள் விரைவில் வரும்! அப்படிப்பட்ட உணர்வுகளை உருவாக் குவோம்!” என்று கூறி உரையை நிறைவு செய்தார்.
தோழர்கள் பங்கேற்பு
நிகழ்ச்சியில், கழகத் துணைப்பொதுச் செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், அரியலூர் மாவட்டத் தலைவர் நீலமேகம், திருவாரூர் மாவட்டச் செயலாளர் சுரேஷ், மாநில இளைஞரணிச் செயலாளர் நாத்திகப் பொன்முடி, கிராமப்பிரச்சாரக்குழு மாநில அமைப்பாளர் முனைவர் அதிரடி அன்பழகன், கும்பகோணம் மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் கு.நிம்மதி, செயலாளர் சு.துரைராசு, மாவட்ட மகளிரணித் தலைவர் அ.கலைச்செல்வி, பகுத்தறிவாளர் கழக மாநில அமைப்பாளர் கோபு.பழனிவேல், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் இரா.வெற்றிக்குமார், பகுத்தறிவு எழுத்தாளர் மன்ற மாநில துணைச் செயலாளர் தே.பொய்யாமொழி, கழகப் பேச்சாளர் வழக்குரைஞர் பூவை.புலிகேசி, மாவட்ட துணைச் செயலாளர் அ.உத்திராபதி, குடும்பவிளக்கு நிர்வாகி பா.வேணுகோபால், மன்னார்குடி மாவட்டத் தலைவர் ஆர்.பி.எஸ்.சித்தார்த்தன், பகுத்தறிவாளர் கழகம் மாநில பொதுச்செயலாளர் வி.மோகன், திராவிட மாணவர் கழகம் மாநிலச் செயலாளர் இரா.செந்தூரபாண்டியன், கழகப் பேச்சாளர் இரா.பெரியார் செல்வம், பள்ளி அக்ஹாரம் தோழர் வி.பார்த்தசாரதி, பகுத்தறிவாளர் கழக மாவட்டச் செயலாளர் பாவலர் பொன்னரசு, மாநகர மகளிர் செயலாளர் பா.சாந்தி, தஞ்சை தெற்கு ஒன்றியத் தலைவர் அ.இராமலிங்கம், புதிய பேருந்து நிலையப் பகுதித் தலைவர் சாமி.கலைச்செல்வன், தஞ்சை மாநகர பகுத்தறிவாளர் கழகத் தலைவர் ப.மனோகர், மாவட்ட இளைஞரணித் தலைவர் ரெ.சுப்பிரமணியன், தஞ்சை வடக்கு ஒன்றியத் தலைவர் ப.சுதாகர், திருவையாறு ஒன்றியத் தலைவர் துரை.ஸ்டாலின், ஒரத்தநாடு தெற்கு ஒன்றியத் தலைவர் த,ஜெகநாதன், ஒரத்தநாடு தெற்கு ஒன்றியச் செயலாளர் மாநல்.பரமசிவம், ஒரத்தநாடு நகரத் தலைவர் பேபி.ரெ.ரவிச்சந்திரன், தஞ்சை தெற்கு ஒன்றிய துணைச் செயலாளர் அ.தனபால், கீழவாசல் பகுதித்தலைவர் ப.பரம்சிவம், கீழவாசல் பகுதிச் செயலாளர் பெ.கணேசன், மாநகர இளைஞரணித் தலைவர் ஆ.மதன்ராஜ், மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் ச.அழகிரி, பகுத்தறிவாளர் கழக மாவட்ட துணைத் தலைவர் ஜெ.பெரியார்கண்ணன், மாவட்ட இளைஞரணிச் செயலாளர் ஆ.பிரகாஷ், தஞ்சை வடக்கு ஒன்றியச் செயலாளர் கா.அரங்கராசன், மாவட்ட தொழிலாளரணித் தலைவர் ச.சந்துரு, ஈ.பி.காலனி பகுதிச் செயலாளர் வெ.ரவிக்குமார்,மேனாள் மாமன்ற உறுப்பினர் விஜயலட்சுமி முருகேசன், ஒன்றிய கவுன்சிலர் கல்பனா, தி.மு.க. கரந்தை பகுதிச் செயலாளர் டி.எஸ்.கார்த்திகேயன், நெய்வேலி ஞானசேகரன், 3 ஆவது வார்டு தி.மு.க. செயலாளர் சிந்தனைச் செல்வன் மற்றும் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த ஏராளமான பெண்கள், பொதுமக்கள் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தார்கள்.