தந்தை பெரியார் 51ஆவது நினைவு நாள், “வெற்றி முழக்கம்” தமிழ்நாடு,கேரளா முதலமைச்சர்களுக்கு நன்றி! திராவிட மாடல் அரசு வரலாற்று சாதனைகள் விளக்க பொதுக்கூட்டம் தமிழ்நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது.அதன் விவரம் வருமாறு:
சேலம்
சேலம் – தென் அழகாபுரம் காலனியில், 31.12.2024 அன்று மாலை 6:30 மணிக்கு, தந்தை பெரியார் 51ஆவது நினைவு நாள், வைக்கம் வெற்றி முழக்கம், தமிழ்நாடு, கேரள முதலமைச்சர் அவர்களுக்கு நன்றி தெரிவித்தல், திராவிட மாடல் அரசின் வரலாற்றுச் சாதனைகளை விளக்கி, கழக பொதுக்கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு மாவட்டத் தலைவர் வீரமணி ராஜு தலைமை வகித்து உரையாற்றினார். மாவட்டச் செயலாளர் சி.பூபதி வரவேற்புரை கூறி, நிகழ்ச்சியை தொகுத்தார். ராணிப்பேட்டை மாவட்ட தலைவர் லோகநாதன், பகுத்தறிவாளர் கழக மாவட்ட செயலாளர் வழக்குரைஞர் சுரேஷ்குமார், அழகாபுரம் முரளி ஆகியோர் முன்னிலையில் வகித்தனர்.
முன்னதாக, தந்தை பெரியார் அவர்களின் படத்தை திமுக மாவட்ட மகளிர் தொண்டரணி துணைத் தலைவர், அப்பாவு புவனேஸ்வரியும், அண்ணல் அம்பேத்கர் அவர்களின் படத்தை தலைமை கழக அமைப்பாளர் கா. நா. பாலு, முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் படத்தை மாவட்ட திராவிடர் கழக தலைவர் வீரமணி ராஜுவும் திறந்து வைத்தனர்.
தொடர்ந்து, உலகப் பொது மறையாம் திருக்குறளை உலகினுக்கு தந்த திருவள்ளுவர் படத்தினை கழகச் சொற்பொழிவாளர் யாழ் திலீபன் திறந்து வைத்தார்.
படத்திறப்பை தொடர்ந்து ராணிப் பேட்டை மாவட்ட தலைவர் லோகநாதன், திமுக மாவட்ட மகளிர் தொண்டரணி துணைத் தலைவர் அப்பாவு புவனேஸ்வரி, தலைமைக் கழக அமைப்பாளர் கா. நா. பாலு ஆகியோரின் உரைக்கு பின்பு, கழகச் சொற்பொழிவாளர் யாழ் திலீபன் சிறப்புரையாற்றினார். தென் அழகாபுரம் காலனி பொதுமக்கள் பெருந்திரளாக வந்திருந்து தோழர்களின் உரையை ஆர்வ முடன் கேட்டனர்.
மாவட்டத் தலைவர் வீரமணி ராஜு கழக சொற்பொழிவாளருக்கு பயனாடை அணிவித்து சிறப்பு செய்தார். அழகாபுரம் முரளி, வழக்குரைஞர் சுரேஷ்குமார், ராணிப்பேட்டை மாவட்ட தலைவர் லோகநாதன், பகுத்தறிவாளர் கழக மாவட்ட செயலாளர் வழக்குரைஞர் ச.சுரேஷ் குமார், இராவண பூபதி, மூணாங்கரடு சரவணன், இமயவரம்பன், சுஜாதா தமிழ்செல்வம், பொறியாளர் சிவகுமார், வழக்குரைஞர் செல்வகுமார் ஆகியோருக்கு கழகச் சொற் பொழிவாளர் யாழ் திலீபன் பயனாடை அணிவித்து சிறப்பு செய்தார்.
பட்டுக்கோட்டை – மதுக்கூர்
மதுக்கூர் பேருந்து நிலையத்தில் 30. 12. 2024அன்று மாலை 5.30 மணி அளவில் ஒன்றிய கழக தலைவர் புலவஞ்சி பெ.அண்ணாதுரை தலைமையில் நடைபெற்றது.
ஒன்றிய கழக செயலாளர் அத்தி வை.ஆடலரசு வரவேற்புரையுடனும் திராவிடர் கழக மாவட்ட தலைவர் அத்திவெட்டி பெ.வீரையன், மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் அ.இரத்தின சபாபதி, மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர் வழக்குரைஞர் புலவஞ்சி இரா.காமராஜ், பகுத்தறிவாளர் கழக மாவட்ட பொறுப்பாளர் மதுக்கூர் வடக்கு ஊராட்சி மன்ற தலைவர் என்.கே.ஆர்.நாராயணன் , மாவட்ட பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் மாணிக்க சந்திரன், பொதுக்குழு உறுப்பினர் பேராவூரணி இரா.நீலகண்டன், மாவட்ட கழக தொழிலாளர் அணி தலைவர் முத்து துரைராஜ், பட்டுக்கோட்டை நகர கழக தலைவர் பொறியாளர் சிற்பி வை.சேகர் ஆகியோர் முன்னிலையிலும் திராவிடர் கழக சொற்பொழிவாளர் சில்லத்தூர் வீர.சிற்றரசு வைக்கம் போராட்ட வரலாறு குறித்தும், மற்றொரு சொற்பொழிவாளர் மாங்காடு சுப.மணியரசன் தமிழர் தலைவர் அவர்களின் 92 வயதிலும் அயரா உழைப்பு பற்றியும், திராவிட மாடல் அரசின் சாதனைகள் குறித்தும் விளக்கமாக உரையாற்றினார்.
கூட்டத்தில் நகர திராவிட முன்னேற்றக் கழக செயலாளர் இராஜகோபால், மதுக்கூர் பேரூராட்சி பெருந்தலைவர் என்.எஸ்.எம் .ஹாஜா முகைதீன்,காங்கிரஸ் ஒன்றிய தலைவர் ஆர்.ரெங்கநாதன், மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் வை.சிதம்பரம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த பாரதி மோகன், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட துணைச் செயலாளர் முகமது இலியாஸ் ஆகியோர் உரையாற்றினர்.
கூட்டத்தில் மதுக்கூர் மேற்கு ஒன்றிய திராவிட முன்னேற்றக் கழக செயலாளர் இலண்டன் வீ.கோவிந்தராஜ், ஒன்றிய பகுத்தறிவாளர் கழக தலைவர் மன்னங்காடு ம.சிவஞானம், ஒன்றிய பகுத்தறிவாளர் கழக செயலாளர் கருப்பூர் முருகேசன்,ஒன்றிய கழகத் துணைச் செயலாளர் மண்டலக்கோட்டை சரவணன், மாவட்ட மகளிர் பாசறை துணைத் தலைவர் உ.சுபத்ரா ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
திராவிடர் கழக மாவட்ட இளைஞரணி செயலாளர் படப்பை காடு சு.அரவிந்த் குமார் நன்றி கூறினார்.
கூட்டத் தொடக்கத்தில் மந்திரமா? தந்திரமா? என்கின்ற அறிவியல் விளக்க நிகழ்ச்சி மாவட்ட கழக பொறுப்பாளர் சோம .நீலகண்டனால் சிறப்பாக செய்து காட்டப்பட்டது.
துறையூர்
துறையூர் பேருந்து நிலையம் முன் திராவிடர் கழகத்தின் சார்பில் தந்தை பெரியார் 51 ஆவது நினைவு நாள் – வைக்கம் வெற்றி முழக்கம் – திராவிட மாடல் அரசின் வரலாற்று சாதனை விளக்க தெருமுனை கூட்டம் 27.12.2024 அன்று மாலை நடைபெற்றது.
மாவட்ட கழகத் தலைவர் ச. மணி வண்ணன் தலைமை தாங்க. மாநில ப.க. அமைப்பாளர் அ.சண்முகம் வரவேற்புரை ஆற்றினார். மாவட்ட துணைத் தலைவர் முசிறி ரத்தினம். மாவட்ட இளைஞரணி தலைவர் ச. மகாமுனி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கழக சொற்பொழிவாளர் தே. நர்மதா சிறப்பாகவும், அருமையான விளக்கத்துடனும் பேசி மகிழ்வித்தார். மாவட்ட செயலாளர் ஜெ. தினேஷ் பாபு நன்றி கூறினார்.
திருச்சி மாவட்ட ஊராட்சி குழு தலைவர் தர்மன். ராஜேந்திரன். துறையூர் ஒன்றிய பெருந்தலைவர் சரண்யா மோகன் தாஸ், துறையூர் மத்திய ஒன்றிய செயலாளர் இள.அண்ணாதுரை, கிழக்கு ஒன்றிய செயலாளர் சரவணன், மேற்கு ஒன்றிய செயலாளர் வீரா, மாவட்ட பகுத்தறிவு கலை இலக்கிய அணி தலைவர் கஸ்டம்ஸ் மகாலிங்கம், தமிழ் புலிகள் கட்சி வடக்கு மாவட்ட செயலாளர் இராஜா, முசிறி ஒன்றிய செயலாளர் பாண்டியன், இ.கம்யூனிஸ்ட் பொறுப்பாளர் செல்வம், விசிக. குமார், மாற்றுத் திறனாளிகள் சங்க மாவட்ட தலைவர் ரவி. ஆகியோர் கலந்து கொண்டனர்.
மாவட்ட கழக இளைஞரணி துணைத் தலைவர் த.ரஞ்சித் குமார், மாவட்ட ப.க. துணைத் செயலாளர் எஸ். என். புதூர். கருணாகரன், உப்பிலியபுரம் ஒன்றிய ப. க. தலைவர் மாராடி எம். ஏ. ரமேஷ், மாராடி சி.செல்வராஜ், கோர்ட். பெ. பாலகிருஷ்ணன், துறையூர் மாவட்ட ப. க. தலைவர் பெ. பாஸ்கர், மாவட்ட ப. க. அமைப்பாளர் மு. தினேஷ், மாவட்ட இளைஞரணி செயலாளர் செ. செந்தில் குமார், துறையூர் ஒன்றிய தலைவர் இர.வரதராஜ்,மாவட்ட ப. க. செயலாளர் பி. பிரபு, மாவட்ட ப.க. துணை தலைவர் த.கலைப்பிரியன், மாவட்ட துணை செயலாளர் சு. சரண் ராஜ், மாவட்ட மாணவர் கழக தலைவர் ரெ. தன்ராஜ், மாவட்ட இளைஞரணி லோகநாதன், நகர கழகத் தலைவர் க.ராஜா, மாணவர் கழக ம.இனியன்சம்பத், இளைஞரணி சபரி மற்றும் ஏராளமான பொதுமக்கள், பழ வியாபாரிகள் ஆட்டோ ஓட்டுநர்கள், இளைஞர்கள், மாணவர்கள் கலந்து கொண்டு ரசித்து கேட்டு மகிழ்ந்தனர்.
கள்ளக்குறிச்சி
கள்ளகுறிச்சியில் 31.12.2024 அன்று அம்பேத்கர் சிலை அருகில் மாலை 6 மணிக்கு தந்தை பெரியார் 51 ஆம் ஆண்டு நினைவு வைக்கம் போராட்டம் நூறாவது ஆண்டு நிறைவு வெற்றி விழா கொண்டாடிய தமிழ்நாடு கேரள முதலமைச்சருக்கு நன்றி அறிவிப்பு ஆகியவை மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் தெருமுனைப் பிரச்சாரக் கூட்டமாக நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு கள்ளக்குறிச்சி நகர கழகத் தலைவர் இராம. முத்துசாமி தலைமை வகித்தார்.மாவட்டச் செயலாளர் ச. சுந்தரராசன் வரவேற்புரையாற்றினார். மாவட்டக் காப்பாளர் ம. சுப்பராயன், மாவட்ட கழக இலக்கிய அணித் தலைவர் பெ.சயராமன், மாவட்ட பகுத்தறிவாளர் கழகச் செயலாளர் வீர. முருகேசன், சங்கரா புரம் நகர பகுத்தறிவாளர் கழகத் தலைவர் ஆ.லட்சுமிபதி, மாவட்ட கழக துணைச் செயலாளர் பா.முத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கள்ளக்குறிச்சி மாவட்ட கழகத் தலைவர் வழக்குரைஞர் கோ.சா. பாஸ்கர் தொடக்க உரையாற்றினார். தலைமை கழக பேச்சாளர்கள் இராம.அன்பழகன்,பூ.சி. இளங்கோவன், வா.தமிழ் பிரபாகரன் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள்.
பெரியாரின் மனித உரிமை வைக்கம் போராட்டம் வெற்றி பெற்றதன் நூற்றாண்டு விழாவை கேரளம்,தமிழ்நாடு மாநிலங்களின் முதலமைச்சர்கள் வெற்றி விழாவாகக் கொண்டாடி தந்தை பெரியாருக்கும், திராவிட கழகத்திற்கும் பெருமை சேர்த்து உள்ளார்கள். அவர்களுக்கு நன்றி கூறும் கூட்டம் தான் இக்கூட்டமாகும்.
தாழ்த்தப்பட்ட மக்கள் தெருவில் நடக்கவும்,கோவிலுள் நுழையவும் பெரியார் போராடி மனித உரிமை பெற்றுத் தந்தார்.ஆனால் இன்று ஒன்றிய பா.ஜ.க.,ஆர்.எஸ்.எஸ் அரசு நூறாண்டுகள் கழித்தும்,இந்த மனித உரிமையை மிகப்பெரிய ஆளுமைகளுக்கே கூட மறுத்து, அவமானப்படுத்திவருகிறது. ஒன்றிய பாஜக அரசு ஸநாதன தர்மத்தை கொண்டு தான் ஆட்சி செய்து வருகிறது.ஆகையால்இத்தகைய ஸநாதன தர்மத்தை எதிர்த்து போராட வேண்டிய கட்டாயம் திராவிட கழகத்திற்குஉள்ளதால்தான் தமிழர் தலைவர் ஆசிரியர் ஓய்வறியாமல் இந்த அநீதிகளை மக்களுக்கு எடுத்துக் காட்டி விழிப்புணர்ச்சி ஏற்படுத்தி வருகிறார்.நாமெல்லாம் இந்த இயக்கத்தில் இளைஞர்களை சேர்த்து விழிப்புணர்வு பெற வைத்து அவர்களை முன்னேற்றுவோம் எனக் கூறி சொற்பொழிவாற்றினார்கள்.
இக்கூட்டத்தில் மாவட்ட கழக இளைஞரணி செயலாளர் கே. முத்துவேல் ரிஷிவந்தியம் ஒன்றிய கழக தலைவர், அர சண்முகம் திருக்கோவிலூர் ஒன்றிய கழகச் செயலாளர் மு.இளங்கோவன்,சங்கராபுரம் ஒன்றிய பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் மா.ஏழுமலை, மணலூர்பேட்டை நகர கழகத் தலைவர் சி அய்யனார், சங்கராபுரம் நகர கழகத் தலைவர் கலை அன்பரசு, நகர பொறுப்பாளர் சை. ஆ.ரியாஸ் உசேன், சிறுவங்கூர் தேவராஜ்,க.அலம்பலம் ல.தயாளன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இறுதியில் கள்ளக்குறிச்சி நகர கழக செயலாளர் நா.பெரியார் நன்றி கூறினார்.
முசிறி
25.12.2024 அன்று மாலை முசிறி புதிய பேருந்து நிலையம் முன் தந்தை பெரியார் 51 ஆவது நினைவு நாள் மற்றும் வைக்கம் நூற்றாணடு விழா. திராவிட மாடல் அரசின் சாதனை விளக்க தெருமுனை கூட்டம் நடைபெற்றது.
சுடர் வேந்தன் அவர்களின் மந்திரமா? தந்திரமா? என்ற அறிவியல் நிகழ்ச்சி நடத்தினார். கழக சொற்பொழிவாளர் மாங்காடு மணியரசன் சிறப்புரையாற்றினார்.
கூட்டத்திற்கு மாவட்ட துணை தலைவர் முசிறி ரத்தினம் தலைமையேற்க. மாவட்ட காப்பாளர் பா. ஆல்பர்ட் முன்னிலை வகித்தார். மாவட்ட தலைவர் ச.மணிவண்ணன் வரவேற்புரையாற்றினார். தமிழ் புலிகள் கட்சியின் வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா. முசிறி ஒன்றிய செயலாளர் பாண்டியன். சீனிவாசன் மற்றும் சிக்கத்தம்பூர் லெ. முத்துக்குமார். மற்றும் ஏராளமான பொது மக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இறுதியாக முசிறி ஒன்றிய செயலாளர் தொட்டியம் அய்யா துரை நன்றி கூறினார்.
அரூர் – வேப்பநத்தம்
அரூர் கழக மாவட்டம்,வேப்பநத்தம் கிராமத்தில் 31-12-2024-ஆம் தேதி மாலை 6 மணி அளவில் அம்பேத்கர் சிலை அருகே நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு மாவட்ட தலைவர் அ.தமிழ்ச்செல்வன் தலைமை தாங்கினார்.மாவட்ட மகளிர் அணி பொறுப்பாளர் பெ. கல்பனா அனைவரையும் வரவேற்று பேசினார். மாவட்ட துணை செயலாளர் வழக்குரைஞர் ரே.வடிவேலன், தேசிய மக்கள் கட்சி நிறுவநர் கோபால், ஒன்றிய பகுத்தறிவாளர் கழக செயலாளர் இராமச்சந்திரன், மேனாள் ஊராட்சி மன்ற தலைவர் கல்பனா ரவீந்திரன், ஒன்றிய திமுக துணைச் செயலாளர் சங்கீதா நடராஜன், திமுக நிர்வாகி கோவிந்தன், விசிக ஒன்றிய தொண்டர் அணி அமைப்பாளர் கே. கண்ணதாசன், ஒன்றிய பகுத்தறிவாளர் கழகத் தலைவர் என்.டி.குமரேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியின் முன்னதாக புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் சிலைக்கு மாநில மகளிர் அணி செயலாளர் தகடூர் தமிழ்ச்செல்வி தலைமையில்கழக சொற்பொழிவாளர் பா.மணியம்மை, மாவட்ட மகளிர் அணி பொறுப்பாளர்கள் கல்பனா, உமா ஆகியோர் இணைந்து மாலை அணிவித்தனர். தந்தை பெரியார் படத்திற்கு தலைமைக் கழக அமைப்பாளர் ஊமை ஜெயராமன், மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர், விசிக மாவட்ட செயலாளர் சாக்கன் சர்மா ஆகியோர் கொள்கை முழக்கமிட்டு மாலை அணிவித்தனர்.
தலைமைக் கழக அமைப்பாளர் ஊமை.ஜெயராமன், தொடக்க உரையாற்றினார்.மாநில மகளிர் அணி செயலாளர் தகடூர் தமிழ்ச்செல்வி, விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் சி.கே.சாக்கன் சர்மா,திண்டிவனம் மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் ஏழுமலை, விசிக தொகுதி பொறுப்பாளர் கேசவன் ஆகியோர் கருத்துரையாற்றினர்.
வைக்கம் போராட்ட வரலாறு நூற்றாண்டு நிறைவு விழாவை சிறப் பாக நடத்திய தமிழ்நாடு, கேரள முதல மைச்சர்களுக்கு நன்றி தெரிவித்து கழக
சொற்பொழிவாளர் வழக்குரைஞர்
பா. மணியம்மை, திராவிட மாடல் ஆட்சியின் சாதனைகளை விளக்கி திராவிட முன்னேற்றக் கழக ஆதிதிராவிட நலக்குழு மாநிலத் துணைச் செயலாளர் சா. ராஜேந்திரன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
இந்நிகழ்ச்சியில் மாநில மகளிர் அணி பொறுப்பாளர் உமா, கடத்தூர் விடுதலைவாசர் வட்ட தலைவர் வ. நடராசன், பகுத்தறிவாளர் தீத்து, பாப்பி ரெட்டிப்பட்டி ஒன்றிய தலைவர் அய்யனார், ஒன்றிய இளைஞரணி தலைவர் சஞ்சீவன், மாவட்ட எழுத்தாளர் மன்ற துணை செயலாளர் பாளையம் பசுபதி, மாவட்ட திமுக ஆதிதிராவிடர் நலக்குழு மாவட்ட துணை செயலாளர் தாளநத்தம் சொ. பாண்டியன், மாவட்ட மாணவர் கழகத் தலைவர் சா.சாய்குமார், மாணவர் கழகப் பொறுப்பாளர்கள் ப.பெரியார், ஆ.பிரதாப், செயலாளர் ரவி, சிறப்பு அழைப்பாளர்களாக திண்டிவனம் நகர செயலாளர் பன்னீர்செல்வம், திண்டிவனம் நகர பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் கஜேந்திரன், மகளிர் அணி ஜமுனா, கற்பகம், மற்றும் வேப்பநத்தம் ஜாக்கின், பெரியசாமி, அக்சையா, சுபர்ணா மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.