நாட்டுப் பண் பாடுவதை சாக்குப்போக்காகக் கூறுகிறார் உரையை வாசிக்க ஆளுநருக்கு விருப்பமில்லை சட்டப் பேரவைத் தலைவர் மு.அப்பாவு கருத்து

1 Min Read

சென்னை,ஜன.7- உரையை வாசிக்க விருப்பமின்றி ஆளுநர் சாக்குபோக்கு – கூறுவதாக பேரவைத் தலைவர் மு.அப்பாவு கருத்து தெரிவித்துள்ளார். ஜன. 11ஆம் தேதி வரை சட்டப்பேரவைக் கூட்டம் நடை பெறும் என்றும் அறிவித்துள்ளார்.

சட்டப்பேரவையின் ஆண்டு முதல் கூட்டம் நேற்று (6.1.2025) ஆளுநர் உரையுடன் தொடங்கியது. தொடர்ந்து அலுவல் ஆய்வுக் குழு கூட்டம் நடைபெற்றது. அதன்பின், செய்தியாளர்களிடம் மு.அப்பாவு கூறியதாவது:

அலுவல் ஆய்வுக்குழு முடி வின்படி, மறைந்த உறுப்பினர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், மறைந்த மேனாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோருக்கு (7.1.2025) இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அவை ஒத்திவைக்கப்படும்.

தொடர்ந்து 4 நாட்கள் (ஜன.11) கூட்டத் தொடர் நடைபெறும். நான்காம் நாள் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது முதலமைச்சர் பதிலுரை வழங்குவார். முதல் 3 நாட்கள் கேள்வி நேரம் இடம்பெறும்.

விருப்பம் இல்லை

பேரவையில் ஆளுநர் பேசத் தொடங்கியபோது, காங்கிரஸ் உறுப்பினர்கள் கருப்புச் பட்டை அணிந்து வந்தனர். அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு நீதி கேட்பதாக கூறி அதிமுகவினர் பதாகைகளை ஏந்தியபடி முழக்கமிட்டனர். ஆளுநர் உரைக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில், கலவர நோக்கத்துடன் செயல் பட்டதால் அதிமுகவினர் வெளி யேற்றப்பட்டனர். ஆளுநருக்கு உரையை வாசிக்க மட்டுமே உரிமை. சட்டப் பேரவை உறுப்பினர்கள் மட்டுமே கருத்து சொல்ல முடியும். மற்றவர்களுக்கு அந்த உரிமை இல்லை. உரையை வாசிக்க விருப்பமின்றி, தேசிய கீதத்தை சாக்குபோக்காக ஆளுநர் கூறு கிறார் என தெரிகிறது. இந்தியாவில் பாஜக ஆட்சி செய்யும் மாநி லங்களில் இந்த பிரச்சினை இல்லை. தமிழ்நாட்டில் வேண்டு மென்றே திட்டமிட்டு செயல்படுகிறார். இவ்வாறு பேரவைத் தலைவர் தெரிவித்தார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *