5.1.2025 ஞாயிறு மாலை 6 மணியளவில்நடைபெற்ற கொடியேற்ற நிகழ்ச்சிக்கு ஆண்டிமடம் ஒன்றிய செயலா ளர் தியாக முருகன் தலைமையேற்க, ஒன்றிய தலைவர் இரா. தமிழரசன் வரவேற்றார். தந்தை பெரியார் வாழ்க! அன்னை மணியம்மையார் வாழ்க! தமிழர் தலைவர் வாழ்க! என்ற ஒலி முழக்கங்களுடன் தலைமைக்கழக அமைப்பாளர் க.சிந்தனைச் செல்வன் கழகக் கொடியை ஏற்றி வைத்தார். பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது நிகழ்ச்சியில் கழகப் பொறுப்பாளர்கள் மாவட்ட இளைஞரணி தலைவர் கார்த்திக், ஒன்றிய அமைப்பாளர் கோ பாண்டியன், ஒன்றிய இளைஞரணி செயலாளர் பாலா, நகர இளைஞரணி சுந்தரமூர்த்தி நகர அமைப்பாளர் டைல்ஸ் பட்டுசாமி. கலாமுருகன், சே சேதுபதி ஆகியோர் பங்கேற்றனர்.