பெரம்பலூர், ஜன.6 தமிழ் நாட்டில் காலியாக உள்ள 2,553 மருத்துவா் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா. சுப்பிரமணியன் கூறினார்.
பெரம்பலூா் மாவட் டம், கொளக்காநத்தத்தில் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: தமிழ்நாட்டில் காலியாக உள்ள 2,553 மருத்துவா் காலிப்பணியிடங்களை விரைந்து நிரப்ப வேண்டும் என முதலமைச்சர் அறிவுறுத்தியதன் அடிப் படையில், எம்ஆா்பி அமைப்பின் மூலம் தமிழ்நாடு முழுவதும் 156 மய்யங்களில் தோ்வு நடைபெற்றுள்ளது. இதன் முடிவுகள் விரைவில் வெளி யிடப்பட்டு, மருத்துவா் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்.
பொது சுகாதார அலகு கட்டடங்கள்
முதலமைச்சர் அறிவு றுத்தலின்படி, தமிழ்நாடு முழுவதும் 300 இடங்களில் பொது சுகாதார அலகு கட்டடங்கள் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில், 150 இடங்களில் கட்டடங்கள் திறந்துவைக்கப்பட்டுள்ளன. பொது சுகாதார அலகு கட்டடங்களில் காசநோய், சா்க்கரை நோய், உயா் ரத்த அழுத்தம் போன்ற 67 வகையான மருத்துவப் பரிசோதனை செய்யும் வகையில் ஆய்வகமும் திறந்து வைக்கப்பட் டுள்ளது.
மருத்துவத் துறையில் இதயம் காப்போம், மக்களைத் தேடி மருத் துவம் என பல்வேறு சிறப்பு திட்டங்கள் அறிவிக்கப்பட்டு செயல் படுத்தப்பட்டு வருகின்றன. இதில், மக்களைத் தேடி மருத்துவம் திட்ட சிறந்த செயல்பாட்டுக்காக தமிழ் நாட்டு அய்.நா. விருது கிடைத்துள்ளது.
சீனாவில் பரவி வரும் ‘ஹெச்எம்பிவி’ தீநுண்மி குறித்து உலக சுகாதார நிறுவனம் எந்த ஒரு தகவலும் வெளி யிடவில்லை.
இதுகுறித்து ஒன்றிய அரசும் இதுவரை எந்த ஒரு செய்தியும் வெளியிடவில்லை. சீனாவில் பரவி வரும் தீநுண்மி குறித்து கண் காணிக்கப்பட்டு வருகிறது. அதற்காக தமிழ்நாடு அரசு தயாா் நிலையில் உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.