கழக சார்பில் பொதுச்செயலாளர் துரை சந்திரசேகரன் வீரவணக்கம்!
பண்ருட்டி, ஜன. 6- பண்ருட்டி நகர கழக தலைவர் ந.புலிக்கொடியின் மகன் பு. வீரமணி (வயது 38) உடல்நல குறைவு காரணமாக 5.1.2025 நண்பகல் ஒரு மணியளவில் மறைந்தார். அவரின் இறுதி நிகழ்ச்சி 6.1.2025 அன்று காலை 10 மணி அளவில் பண்ருட்டி கஸ்தூரிபாய் தெருவில் நடைபெற்றது.
கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை சந்திரசேகரன், மாவட்ட கழக தலைவர் தண்ட பாணி, விழுப்புரம் மாவட்ட செயலாளர் பரணிதரன், கடலூர் மாவட்ட அமைப்பாளர் மணிவேல், வடலூர் கழகத் தலைவர் புலவர் ராவணன், செயலாளர் குணசேகரன், அமைப்பாளர் முருகன், பண்ருட்டி ஜோதி, போட்டோ ஸ்டுடியோ உரிமையாளரும் பொதுக்குழு உறுப்பினருமான கோ.புத்தன், பண்ருட்டி நகர கழக செயலாளர், கோ. காமராஜ், ஒன்றிய திமுக தலைவர் இரா.தமிழன்பன், செயலாளர் திரிமங்கலம் ராஜேந்திரன், ஏரிபாளையம் ஆறுமுகம், இளைஞர் அணி பொறுப்பாளர் பகவான்தாஸ், வழக்குரைஞர் தயாநிதி மற்றும் தோழமைக் கட்சிகளை சேர்ந்தவர்கள் மறைந்தவரின் உடலுக்கு மாலை வைத்து இறுதி மரியாதை செலுத்தினர்.
பின்பு நடந்த இரங்கல் கூட்டத்தில், பண்ருட்டி நடேசன் தொண்டும், புலிக்கொடியின் இயக்கப் பணியும், எடுத்துரைக்கப்பட்டு அவரின் குடும்பத்தில் தொடர்ந்து இழப்புகள். அவற்றையெல்லாம் எதிர்கொண்டு கொள்கையிலே அசையாமல் இருக்கக்கூடிய புலிக் கொடியின் தீரமிக்க மனப்பான்மை பாராட்டப்பட்டது. இறுதி ஊர்வலத்தின் முடிவில் அவரின் உடல் எரியூட்டப்பட்டது.
சி. தர்மலிங்கம், தங்கபாஸ்கர், மாவட்ட தலைவர் தண்டபாணி, மாவட்ட அமைப்பாளர் மணிவேல், மாவட்ட பகுத்தறிவு கழக செயலாளர் அருணாச்சலம், மாநில ப.க அமைப்பாளர் பெரியார் செல்வம், மாவட்ட இளைஞரணி செயலாளர் டிஜிட்டல் ராமநாதன், கழக பேச்சாளர் புலவர் ராவணன், செல்வராசு, கோபால், திராவிட மணி, வடலூர் நகர அமைப்பாளர் முருகன், வடக்குத்து பாஸ்கர், சுப்பிரமணியன், குறிஞ்சிப்பாடி சுமலதா, அறிவுப் பொன்னி, ஆதவன், ரங்கசாமி, வடலூர் கலைச்செல்வி, சிங்காரவேலன், வரதராஜன், கருப்பன், அசோக்குமார், திராவிடன், நெய்வேலி நகர செயலாளர் ரத் தின சபாபதி, கமலக்கண்ணன், சுப் பிரமணியன், நூலகர் இரா.கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.