ஆறறிவுக்குள்ள தன்மை என்ன வென்றால் ஆறறிவு உள்ளவன் சிந்திக் கிறவன், சூழ்நிலைக்கேற்ப மாறுபவன், வளர்ச்சிக்குரியவன் ஆவான். மற்ற ஜீவன்கள் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் எப்படி வாழ்ந் தனவோ அப்படித்தான் இன்றும் வாழ் கின்றன. ஆனால், மனிதன் ஒருவன்தான் நாளுக்கு நாள் மாறிக் கொண்டே வருகின்றான்.
(‘விடுதலை’ 26.11.1970)