கண்காணிப்பு
சீனாவில் தற்போது எச்.எம்.பி.வி. வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், ஒன்றிய சுகாதார அமைச்சகம், ‘நாட்டில் உள்ள நிலைமையை நாங்கள் தொடர்ந்து கண்காணித்து வருகி றோம்’ எனத் தெரிவித்துள்ளது.
தீர்வு
உணவு பொருள் வழங்கல் துறையில் 1,83,610 குடும்ப அட் டைகள் தொடர்பான மனுக்கள் பெற்று தீர்வு காணப்பட்டுள்ளது என தமிழ்நாடு அரசு தகவல் தெரிவித்துள்ளது.
அரசு பொருள்காட்சி
தமிழ்நாடு அரசின் சுற்றுலாத் துறை சார்பில் ஒவ்வொரு ஆண்டும் சென்னை தீவுத் திடலில் நடைபெறும் அரசு தொழில் பொருள்காட்சி இவ்வாண்டு ஜனவரி 6ஆம் தேதி மாலை 6 மணிக்கு திறக்கப்படுகிறது. இக்கண்காட்சி மார்ச் மாதம் வரை நடைபெறும்.
புதுச்சேரி
புதுச்சேரியில் பொங்கல் விழாவையொட்டி குடும்ப அட்டை அட்டைதாரர்களுக்கு ெபாங்கல் சிறப்பு பொருள்கள் தொகுப்புக்கு பதிலாக தலா ரூ.750 ரொக்கம் கொடுக்க புதுச்சேரி அரசு முடிவு எடுத்துள்ளது.
அனுமதி
அரசு பள்ளிகளில் மாண வர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் தேவைக்கேற்ப 24 முதுநிலை ஆசிரியர் பணியிடங்களை கூடுதலாக அனுமதித்து பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
சிறப்பு ரயில்
தமிழர் திருநாளாம் பொங்கல் விழாவையொட்டி, தாம்பரம் திருச்சி இடையே ஜனசதாப்தி அதி விரைவு சிறப்பு ரயில்கள் (வண்டி எண் 06190/91) இயக்கப்படுகின்றன. இதன்படி, இந்த சிறப்பு ரயில் திருச்சி – தாம்பரம் இடையே வரும் 10,11,12,13,17,18,19 ஆகிய தேதிகளில் இயக்கப்படும்.
உத்தரவு
நோய் வாய்ப்படும் வன விலங்குகளுக்கு சிகிச்சை அளிக்க கால்நடை மருத்து வர்களுக்கு முறையான பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதா என கேள்வி எழுப்பியுள்ள உயர் நீதிமன்றம், இது தொடர்பாக தமிழ்நாடு அரசு பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.
இடது கைப்பழக்கமுள்ளோர்
ஒரு வகுப்பில் 50 பேர் இருந்தால், அதில் 1, 2 பேர் இடது கை பழக்கமுள்ளவர்களாக இருப்பதை பார்த்திருப்போம். அந்த வகையில், இந்திய மக்கள் தொகையில் 5.20% பேர் அத்தகைய பழக்க முடையவர்களாக இருக் கின்றனர். அதிகபட்சமாக அமெ ரிக்காவில் 13.10%, கனடாவில் 12.80%, இங்கிலாந்தில் 12.24%, ஃபிரான்ஸில் 11.15% பேர் உள்ளனர்.
காற்றுக்கு
இத்தனை பெயர்களா!
* மணிக்கு 6 கி.மீ வேகத்தில் வீசுவது – மென்காற்று
*மணிக்கு 6-11 கி.மீ வரை வீசுவது – இளந்தென்றல்
*மணிக்கு 15-19 கி.மீ வரை வீசுவது –தென்றல் காற்று
*மணிக்கு 20-29 கி.மீ வரை வீசுவது – புழுதிக் காற்று
* மணிக்கு 30-39 கி. மீ வரை வீசுவது – ஆடிக் காற்று
*மணிக்கு 40-100 கி.மீ வரை வீசுவது – கடும் காற்று
*மணிக்கு 101-120 கி. மீ வரை வீசுவது – புயல் காற்று
* மணிக்கு 120 கி.மீ. மேல் வீசுவது – சூறைக்காற்று
செய்திச்சுருக்கம்
Leave a Comment