போளூர், ஜன. 5- திருவண்ணாமலை மாவட்டம், போளூர் நகரைச் சேர்ந்த பெரியார் பெருந்தொண்டரும் ஓய்வு பெற்ற வட்டாட்சியருமான சு.பன்னீர்செல்வத்தின் தந்தையாருமான வாயாடி சுப்பிரமணியன் அவர்களின் 39 ஆம் ஆண்டு நினைவு நாளான 3.1.2025 அன்று, போளூர் புதிய பேருந்து நிலையத்தில் அவருடைய உருவப் படம் வைத்து மரியாதை செலுத்தப்பட்டது.
முன்னதாக நினைவிடத்திற்குச் சென்று மலர் மாலை வைத்து வீரவணக்கம் செலுத் தப்பட்டது.
இந்த இரண்டு நிகழ்ச்சிகளும் போளூர் நகர கழக தலைவர் ப.பழனி தலைமையில் நடைபெற்றது.
போளூர் நகர கழகத்தைச் சார்ந்த வி.ப.பிரபாகரன், பழம்பெரும் திமுக பெருந்தொண்டர் ஏ.சி. பெருமாள், காங்கிரஸ் பேரியக்கத்தைச் சார்ந்த கிருட்டினமூர்த்தி, ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் கே.வாசு, செங்கம் பகுதி முன்னூறு மங்கலம் திராவிடர் கழகத் தோழர் பழனி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தோழர் கி.பழனி, தோழர் பி.ஆறுமுகம், புரட்சிகர இளைஞர் முன்னணி தோழர் இரா.வேதாசலம், போளூர் வெற்றிச்செல்வன், கா.பழனி, பேராசிரியர் செல்வம் ஆகியோர் பங்கேற்று தோழர் வாயாடி சுப்பிரமணியனின் செயற்பாடுகள் குறித்து உரையாற்றினர்.
ஓய்வு பெற்ற வட்டாட் சியர் சு பன்னீர்செல்வம் நன்றி கூறினார்.