கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

Viduthalai
1 Min Read

4.1.2025
டெக்கான் கிரானிக்கல், சென்னை:
* மருத்துவப் படிப்பு இடங்கள் ஒன்று கூட நிரப்பப்படாமல் இருக்கக் கூடாது, ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் கண்டிப்பு. உயர்தர மருத்துவ சிகிச்சை படிப்புக்கான இடங்கள் 1000க்கு மேல் 2023இல் ஒன்றிய அரசு நிரப்பாமல் இருந்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், நீதிமன்றம் தீர்ப்பு.
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* கல்வி நிலையங்களில் ஜாதிப் பாகுபாடு காட்டப்படு வதாக தொடரப்பட்ட வழக்கில், யு.ஜி.சி. உரிய வழிகாட்டு நெறிமுறைகளை உடனே கல்வி நிலையங்களுக்கு அனுப்ப உச்சநீதிமன்றம் உத்தரவு.
தி இந்து:
*மோடி அரசின் புதிய வரைவு கொள்கையானது ரத்து செய்யப்பட்ட மூன்று விவசாய சட்டங்களை விட மோசமானது என்று விவசாய சங்கங்கள் கண்டனம்.
*தமிழ்நாட்டில் 2019, 2021ஆம் ஆண்டு தேர்தலில் மதச்சார்பற்ற அணி வெற்றி பெற்றோம். தமிழ்நாட்டில் கால் ஊன்ற ஆர்எஸ்எஸ், பாஜக செயல்பட்டு கொண்டிருக்கிறது. ஹிந்துத்துவாவை மக்களிடம் திணிக்க பார்த்தார்கள், அது முடியவில்லை. நம் கூட்டணி பலமாக இருந்தது, மா. கம்யூனிஸ்ட் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ் காரத் பேச்சு.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* ஒன்றிய நிதிக்காக கல்விக் கொள்கையில் தமிழ்நாடு சமரசம் செய்யாது: அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திட்டவட்டம்.
டைம்ஸ் ஆப் இந்தியா:
* வழிபாட்டுத் தலங்கள் சட்டம், 1991 ஐ பாஜக அரசு மீறுவதாகவும், அச்சட்டத்தை பாதுகாக்க வேண்டும் என தொடரப்பட்ட வழக்கில், காங்கிரஸ் கட்சியும் தன்னை இணைத்துக் கொண்டு வாதாடும் என அக்கட்சி அறிவிப்பு.

.- குடந்தை கருணா

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *