மணிப்பூர் காங்போக்பி காவல் நிலையத்தின் மீது குக்கி இன போராளிகள் கல் வீச்சு நடத்தியுள்ளனர். காவல் அதிகாரிகள் தாக்கப்பட்டுள்ளனர். காவல் துணை ஆணையர் அலுவலகத்தை நோக்கி படையெடுத்தவர்கள், அங்கிருந்த காவல்துறை வாகனங்களை அடித்து நொறுக்கியுள்ளனர். மணிப்பூரில் இருந்து ஒன்றியப் பாதுகாப்பு படையை நீக்கக் கோரி போராடி வருகின்றனர். இந்த மோதலால் மணிப்பூரில் மீண்டும் பதற்ற நிலை உருவாகியுள்ளது.
செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்ப உதவியுடன் தமிழ்மொழி மேம்பாடு
ஒன்றிய அரசின் ‘பாஷினி’ திட்டத்துடன் இணைந்து, செயற்கை நுண்ணறிவு (ஏ.அய்.) தொழில் நுட்பத்தின் உதவியுடன் தமிழ்மொழியின் பயன்பாட்டை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தமிழ்நாடு அரசின் தொழில் நுட்பத் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
ஊரக திறனாய்வு தேர்வு
பிப்.7ஆம் தேதி நடைபெறும்
தமிழ்நாட்டின் கிராமப்புற மாணவர்களை ஊக்கு விப்பதற்காக ஊரக திறனாய்வுத் தேர்வு திட்டத்தின்கீழ் உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது. தொடர் கனமழையால் கடந்த டிசம்பர் 14ஆம் தேதி நடை பெறவிருந்த ஊரகத் திறனாய்வுத் தேர்வு தள்ளி வைக்கப்பட்டது. இத்தேர்வு வரும் பிப்.1இல் நடை பெறும். இது சார்ந்த கூடுதல் விவரங்களை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் அறியலாம்.
தகவல் தொழில் நுட்ப வசதிகள் மூலம் விவசாய உற்பத்தி
தகவல் தொழில் நுட்ப வசதிகள் மூலம் வேளாண் உற்பத்தி, வேளாண் விரிவாக்க முறைகளை மேம்படுத் தும் நோக்கில் ‘லிஸ்டார்’ என்ற புதிய திட்டத்தை ஒன்றிய அரசு சோதனை அடிப்படையில் செயல்படுத்துவது தொடர்பாக ஒன்றிய வேளாண் மற்றும் விவசாயிகள் நல அமைச்சகத்துடன் சென்னை அய்.அய்.டி. இணைந்து செயல்பட உள்ளது.
கைதிகள் விடுதலை – பாகிஸ்தானிடம் இந்தியா வலியுறுத்தல்…
இந்திய சிறைகளில் தற்போது பாகிஸ்தானைச் சேர்ந்த 381 சிவில் கைதிகளும், 81 மீனவர்களும் உள்ளனர். அதேபோல் பாகிஸ்தானில் இந்திய சிவில் கைதிகள் 49 பேரும், 217 மீனவர்களும் உள்ளனர். இந்நிலையில் பாகிஸ்தானில் தண்டனைக் காலம் நிறைவடைந்த இந்திய மீனவர்கள் மற்றும் சிவில் கைதிகள் 183 பேரை விரைவில் இந்தியாவுக்கு அனுப்பும்படி பாகிஸ்தானிடம் இந்திய ஒன்றிய அரசு வலியுறுத்தியுள்ளது.
சைபர் கிரைம் மோசடி
அமலாக்கத்துறை விசாரணை
தமிழ்நாட்டில் நடந்த ரூ.1000 கோடிக்கும் மேற்பட்ட சைபர் கிரைம் மோசடி தொடர்பக அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது. கிழக்கு இந்திய மாநிலங்களை சேர்ந்த பலருக்கும் இந்த மோசடியில் தொடர்பிரு்பபது விசாரணையில் தெரிய வந்தது.