தந்தை பெரியார் 51ஆவது நினைவு நாள்
வைக்கம் வெற்றி முழக்கம்-பரப்புரைக் கூட்டங்கள்
தந்தை பெரியார் 51ஆவது நினைவு நாள், “வெற்றி முழக்கம்” தமிழ்நாடு,கேரளா முதலமைச்சர்களுக்கு நன்றி! திராவிட மாடல் அரசு வரலாற்று சாதனைகள் விளக்க பொதுக்கூட்டம் தமிழ்நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது.அதன் விவரம் வருமாறு:
திருப்பத்தூர்
தந்தை பெரியார் 51 ஆம் நினைவு நாள் வைக்கம் வெற்றி முழக்கம், தமிழ்நாடு, கேரள முதலமைச்சர்களுக்கு நன்றி! திராவிட மாடல் அரசின் வரலாற்றுச் சாதனைகள் ! பெருந்திரள் கூட்டம் 30.12.2024 அன்று ஏ.டி.ஜி.தேநீர் கடை அருகில் மாலை 5.00 மணிக்கு நடைபெற்றது.
இக்கூட்டம் மாவட்ட தலைவர் கே.சி.எழிலரசன் தலைமையிலும் மாவட்டச் செயலாளர் பெ.கலைவாணன் அவர்கள் வரவேற்பிலும் நடைபெற்றது.மாநில பொருளாளர் மகளிரணி அகிலா எழிலரசன், மாவட்ட விடுதலை வாசகர் வட்ட தலைவர் எம் ஞான பிரகாசம், மாவட்ட விடுதலை வாசகர் வட்ட செயலாளர் வ.புரட்சி, மாவட்ட துணைத் தலைவர் சி.தமிழ்ச்செல்வன், நகர தலைவர் காளிதாஸ், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் சி.எ.சிற்றரசன், மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் வெ.அன்பு, நகர தலைவர் காளிதாஸ், மாவட்ட இளைஞரணி தலைவர் சி.சுரேஷ் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கழகப் பேச்சாளர் தஞ்சை இரா.பெரியார் செல்வன், தலைமை கழக அமைப் பாளர் ஊமை ஜெயராமன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக வருகை தந்து சிறப்புரையாற்றினார்கள்.
இக் கூட்டத்தில் மாவட்ட தலைவர் தொழிலாளரணி கே.மோகன், மாவட்ட செயலாளர் தொழிலாளரணி இரா.பன்னீர், மாவட்ட பகுத்தறிவாளர் கழகச் செயலாளர் கோ.திருப்பதி, குமர வேல் மாவட்ட துணைச் செயலாளர் ப.க., வாணியம்பாடி நகர தலைவர் அன்புச் சேரன், ஆம்பூர் நகர தலைவர் இரவி, ஆம்பூர் நகரச் செயலாளர் இளங்கோ, மா.பன்னீர்செல்வம் ஆம்பூர், சூர்யா ஆம்பூர், மாதனூர் ஒன்றிய தலைவர் எம்.வெற்றிக் கொண்டான், ஆம்பூர் ஒன்றியச் செயலாளர் சி.வெங்கடேசன், மாவட்ட மகளிரணி தலைவர் கற்பகவல்லி, மாவட்ட மகளிர் பாசறை தலைவர் நா.சுப்புலட்சுமி, சோலையார்பேட்டை காப்பாளர் அ.நரசிம்மன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கா.நிரஞ்சன், மாவட்ட மகளிர் பாசறை செயலாளர் சி.சபரிதா, கந்திலி ஒன்றிய தலைவர் பெ.ரா.கனகராஜ், கந்திலி ஒன்றிய செயலாளர் இரா.நாகராசன், சோலையார்பேட்டை ஒன்றிய தலைவர் கொ.ராஜேந்திரன், மாவட்ட எழுத்தாளர் மன்ற தலைவர் கவிஞர் சோலைப்பிரியன், மாவட்ட தொழிலாளரணி ஆலோ சகர் அக்ரி அரவிந்த், மாவட்ட தொழிலாள ரணி அமைப்பாளர் க.முருகன், சோலை யார்பேட்டை நகர தலைவர் சிவக்குமார், சோலையார் பேட்டை நகர அமைப்பாளர் இராஜேந்திரன், சோலையார் நகர செயலாளர் மதியழகன், சோலையார் பேட்டை ஒன்றியத் தலைவர் தா.பாண்டியன், சோலையார் பேட்டை துணைச் செயலாளர் ஜெ.எம்.பி.வள்ளுவன், ஆர்.தனஞ்செயன், மாவட்ட துணைச் செயலாளர் தங்க அசோகன், இலக்கிநாயக்கன்பட்டி கிளை தலைவர் சரவணன், இலக்கிநாயக்கன்பட்டி கிளைச் செயலாளர் சி.லட்சுமணன், விடுதலை வாசகர் வட்டம் பெருமாள் சாமி, சுந்தரம்பள்ளி கிளை தலைவர் கோ.சங்கர், காக்கங்கரை ஒன்றிய தலைவர் சி.சந்தோஷ், ம.சங்கர் இளைஞரணி பொம்மிகுப்பம்,மோ.நித்தியானந்தம் நகர இளைஞரணி தலைவர், மோ.வசீகரன் நகர இளைஞரணி செயலாளர், டி.தென்னவன், சத்தியவன், தமிழ்வாணன், சசிகலா, ப.சாருமதி, வ.அன்பழகி, மு.சூர்யா, மு.ஜெயரட்சகன், சூர்ய பிரகாஷ், ஊமை காந்தி, ஜீ.அரவிந்த் காக்கணாம்பாளையம், ஆனந்தன் காக்கங்கரை, மற்றும் அனைத்து அமைப்புகள் சார்ந்த பொறுப்பாளர்கள், தோழர்கள் பங்கேற்று சிறப்பித்தனர்.
நிகழ்ச்சிக்கு முன் பெ.ரா.கனகராஜ் கந்திலி ஒன்றிய தலைவரின் மந்திரமா – தந்திரமா நிகழ்ச்சி நடைபெற்றது. நகர செயலாளர் சித்தார்த்தன் நன்றி தெரிவித்தார்.
மதுரை
92 வயதில் 29 வயது இளைஞராய் போராட்டக் களத்தில்,பிரச்சாரக்களத்தில் வரலாறு படைத்துக்கொண்டிருக்கும் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் அறிவுறுத்தலின்படி, மதுரையில் ‘வைக்கம் வெற்றி முழக்கம்’ பொதுக்கூட்டம் நடைபெற்றது.
தந்தை பெரியாரின் 51ஆவது நினைவு நாள் –வைக்கம் வெற்றி முழக்கம்,தமிழ்நாடு,கேரளா முதலமைச்சர்களுக்கு நன்றி,திராவிட மாடல் அரசின் சாதனைகளை விளக்கி தமிழ்நாடு முழுவதும் 100 கூட்டங்கள் நடத்தப்படும் என்ற தமிழர் தலைவரின் அறிவுரையை ஏற்று,மதுரையில் டிசம்பர் 30 மாலை 6 மணிக்கு பெத்தானியாபுரம் அண்ணா முக்கிய வீதி பகுதித் தோழர்களால் மிகச் சிறப்பாக கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது.
கூட்டத்திற்கு 64ஆவது வட்டக் கழகத் தலைவர் க.பாண்டியன் தலைமை வகித்தார்.மாவட்ட இளைஞர் அணி செயலாளர் பா.காசி வரவேற்புரை ஆற்றினார்.போக்குவரத்துக் கழகப் பேரவைத் தலைவர் கா.சிவகுருநாதன் கூட்டத்தின் நோக்கம் குறித்து தொடக்க உரையாற்றினார்.நிகழ் விற்கு மாவட்ட தலைவர் அ.முரு கானந்தம், திமுக வட்டச்செயலாளர் நாகஜோதி சிவா, ஆரப்பாளையம் பெரியார் பெருந்தொண்டர் நாகராஜன், மஹபூப்பாளையம் இரகுவரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து தலைமைக் கழக அமைப்பாளர் வே.செல்வம், வைக்கம் போராட்டம் குறித்தும் சமூக நீதிக்கான சரித்திர நாயகர் மு.க.ஸ்டாலின் நடைமுறைப்படுத்தி வரும் திராவிட மாடல் சாதனைகளையும் எடுத்துக்கூறினார்.தொடக்கத்தில் பேராசிரியர் சுப.பெரியார் பித்தன், மந்திரமல்ல தந்திரமே எனும் அறிவியல் விழிப்புணர்வு நிகழ்ச்சியைப் பல்வேறு செய்திகளுடன் நகைச்சுவையோடு வழங்கினார்.அடுத்துப் பேசிய வேங்கைமாறன், பார்ப்பனர்களை நமது இல்ல நிகழ்வுகளில் கலந்து கொள்ளச் செய்வதால் ஏற்படும் இழிவு குறித்து எடுத்துக் கூறினார்.
மாநில வழக்குரைஞரணி துணைச் செயலாளர் வழக்குரைஞர் நா.கணேசன் கலந்து கொண்டு நிகழ்ச்சிக்கு நன்கொடை வழங்கினார்.திராவிட இயக்கத் தமிழர் பேரவை துணைப் பொதுச்செயலாளர் வழக்குரைஞர் இராம.வைரமுத்து வைக் கம் போராட்டம் ஏற்படுத்திய சமூகப் புரட்சியை, முதலமைச்சரின் நிகழ்கால பணிகளை எடுத்துரைத்தார்.
பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தின் மாநிலத்தலைவர் முனைவர் வா.நேரு பேசும்போது தமிழ்நாடு சமூக நீதிக்காக வித்திட்ட மாநிலம்,தொடர்ந்து தந்தை பெரியாரின் கருத்துகளை முழுமையாக ஏற்று செயல்படுத்திய முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் கல்வித் திட்டம், அதன் விளைவாக மக்கள் பெற்ற பலன் கள் தற்போது திராவிட மாடல் முதல்வரின் சமூகநீதி செயல்பாடுகள் பற்றியும்,தமிழ்நாட்டின் முதலமைச்சர் அவர்களுக்கும் திராவிடர் கழகத்தலைவர் ஆசிரியர் அவர்களுக்கும் இருக்கும் அன்புப் பிணைப்பை, கொள்கைப்பாசத்தை எடுத்துக் கூறினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் மா.கணேசன் திராவிடர் கழகம் மதுரையில்நடத்திய நாடாளுமன்ற தேர்தல் நன்றி அறிவிப்பு கூட்டத்தையும், தமிழ் நாடு கேரளா முதலமைச்சர்களுக்கு நடத்தப்படும் நன்றி அறிவிப்பு கூட்டத்தையும் வெகுவாகப் பாராட்டியதோடு திராவிடர் கழகத்தின் பணிகளுக்கு என்றும் துணை நிற்போம் எனக்கூறினார்.
இறுதியில் கழக சொற்பொழிவாளர் .பூவை புலிகேசி தன் உரையில் வைக்கம் வெற்றி முழக்கம் தமிழர் தலைவர் அவர்கள் அறிவித்தது குறித்து விளக்க மாக எடுத்துரைத்தார். இரு மாநில முதலமைச்சர்களுக்கும் நன்றி தெரிவித்தார்.மேலும் அண்ணா கொண்டு வந்த சுயமரியாதைத் திருமணச்சட்டம், கலைஞர் செயல்படுத்திய கல்வி மேம்பாட்டுப் பணிகள், அதன்காரணமாக தமிழ்நாடு அடைந்த முன்னேற்றம்,பெண்கல்வி ஊக்குவிப்பு அதன் காரணமாக தமிழ்ப் பெண்கள் முன்னேற்றம்,திருமண உதவித்திட்டம்,கலைஞர் மறைவுக்குப் பிறகு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களின் அரிய பணிகளை பட்டிய லிட்டார்.இப்பணிகள்தொடர ஒவ்வொரு திக,திமுக தொண்டர்களும் விழிப்போடு பணியாற்ற வேண்டும் எனக் கூறிய தோடு, மேலும் பல செய்திகளை எடுத்துக்கூறி தனது சிறப்புரையை நிறைவு செய்தார்.
இக்கூட்டத்திற்காக உழைத்த வட்டச் செயலாளர் பாண்டியன், நாகராஜன்,பா.காசி, திமுக வட்டச்செயலாளர் நாகஜோதி சிவா, மஹபூப்பாளையம் இரகுவரன், ஆகியோருக்கு பயனாடை அணிவித்து பாராட்டப்பட்டது.காங்கிரஸ் துணைத் தலைவர் அய்.சிலுவை,அவைத்தலைவர் லெட்சுமணன் கலந்து கொண்டு சிறப்பித் தனர் .வசூல்பணி செய்த மாவட்ட துணைத் தலைவர் இரா.திருப்பதி, இளைஞர் அணி அமைப்பாளர் அ.வேல்துரை, தனசேகரன், க.சிவா, கதிரேசன், மு.மாரிமுத்து, ஆகி யோருக்கு தலைமை கழக அமைப்பாளர் வே.செல்வம்,மாவட்டத் தலைவர் அ.முருகானந்தம் மாவட்டச் செயலாளர் இரா.லீ.சுரேஷ் ஆகியோர் பாராட்டுத் தெரிவித்தனர். நிகழ்வில் திராவிடர் கழகப்பொறுப்பாளர்கள் நா.முருகேசன், தனுஷ்கோடி பேக்கரி கண்ணன்,அழகுப் பாண்டி, கமல்நாத்,சோ.சுப்பையா,முரளி மற்றும் ஏராளமான தோழர்கள் பகுதி வாழ் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.ஆரப்பாளையம் நாகராஜன் நன்றி கூறினார்.
கிருட்டினகிரி
கிருட்டினகிரி மாவட்டம் கிருட்டினகிரி ஒன்றிய திராவிடர் கழகம் சார்பில் தேவ சமுத்திரம் கிராமத்தில் மிகுந்த எழுச்சியோடு தந்தை பெரியார் 51-ஆம் ஆண்டு நினைவு நாள் – “வைக்கம் வெற்றி முழக்கம்” பொதுக் கூட்டம் 27/12/2024 அன்று மாலை 6.00 மணியளவில் தேவசமுத்திரத்தில் மேனாள் ஒன்றிய திராவிடர் கழக அமைப்பாளர் சுயமரியாதைச் சுடரொளி செ.பத்மநாபன் நினைவரங்கத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்திற்கு ஒன்றிய திராவிடர் கழகத் தலைவர் த.மாது தலைமை வகித்தார், ஒன்றியச் செயலாளர் கி.வேலன் வரவேற்றார்.
நிகழ்ச்சிக்கு மாவட்டச் செயலாளர் செ.பொன்முடி, மாவட்ட துணைச் செயலாளர் சி.சீனிவாசன், மாவட்ட விவசாயணி தலைவர் இல.ஆறுமுகம், மாவட்ட இளைஞரணி துணைத் தலைவர் வெ.புகழேந்தி, இளைஞரணி துணைச்செயலாளர் பூ.இராசேந்திரபாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர.
கிருட்டினகிரி மாவட்ட கழகத் தலைவர் கோ.திராவிடமணி தொடக்கவுரை யாற்றினார்.தலைமைக் கழக அமைப்பாளர் ஊமை.செயராமன், கிருட்டினகிரி (மேற்கு) திமுக ஒன்றிய துணைச் செயலாளர் ந.குப்பன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநில நிர்வாகி மா.திராவிடராசா ஆகியோர் பேசினர்.
நிறைவாக திராவிடர் கழகத் துணைப் பொதுச்செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் சிறப்புரைவையாற்றினார்.அவர் பேசியதாவது; வைக்கத்தில் தந்தை பெரியாரின் போராட்டங்களை நினைவுக் கூர்ந்து. வைக்கம் நூற்றாண்டு விழாவை தமிழ்நாடு, கேரள இரு மாநில அரசும் இணைந்து நடத்திய நூற்றாண்டுவிழா சிறப்புகளை விளக்கியும், திராவிட இயக்கத் தலைவர் அறிஞர் அண்ணா, கலைஞர் மற்றும் திராவிட மாடல் அரசின் வரலாற்றுச் சிறப்புமிக்க சாதனைகள் அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை, காலை உணவு திட்டம், தமிழ் புதல்வன், திட்டம், மகளிர் உரிமைத் திட்டம், விடியல் பயணம், நான் முதல்வன் திட்டம் போன்ற எண்ணற்ற தமிழ் நாடு அரசின் மக்கள் நலன் சார்ந்த சாதனைகளை விளக்கியும், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் அளப்பரிய பணிகளை விளக்கியும் அவரது தொண்டுகளை எடுத்துக் கூறியும் சிறப்புரையாற்றினார்.
கூட்டத்தில் காவேரிப்பட்டணம் ஒன்றியத் தலைவர் பெ.செல்வம், மத்தூர் ஒன்றியத் தலைவர் கி.முருகேசன், மக்கள் அதிகாராம் மாவட்ட நிர்வாகிகள் ச.அருண், செ.இரஞ்சித், பெரியார் பிஞ்சுகள் சஞ்சனா, சஞ்சய் இருவரும் தந்தை பெரியார் மண் கருப்பு சிவப்பு நீலம் எங்கள் கொள்கை நிறம் இங்கு காவிகளுக்கு ஒருபோதும் இடமில்லை என்பதை எடுத்து கூறி பேசினர்.இருவருக்கும் திராவிடர் கழக துணைப் பொதுச்செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார் சால்வை அணிவித்து பாராட்டினார்.
விழிக்கொடை வழங்கிய ஒன்றிய கழகத் தலைவர் த.மாது தாயார் இரஞ்சிதம் அம்மா அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு நாளையொட்டி அவரது படத்திற்கு கழக துணைப் பொதுச்செயலாளர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.கூட்டத்தின் தொடக்கத்தில் காங்கிரஸ் பேரிக்கத்தின் மூத்ததலைவர் தலைசிறந்த பொருளாதார வல்லுநர் மேனாள் இந்திய பிரதமர் மன்மோகன்சிங் அவர்கள் மறைவிற்கு அனைவரும் எழுத்து நின்று வீரவணக்கம் செலுத்தி இரண்டுநிமிடம் அமைதி காத்து மரியாதை செலுத்தப்பட்டது.நிறைவாக கிருட்டினகிரி நகரச் செயலாளர் அ.கோ.இராசா நன்றி கூறினார்.
காவேரிப்பட்டணம்
30/12/2024 திங்கட்கிழமை மாலை 6.00 மணிக்கு மிகுந்த எழுச்சியுடன் மலையாண்ட அள்ளி புதூரில் ஒன்றிய திராவிடர் கழகத் தலைவர் பெ.செல்வம் தலைமையில் நடைபெற்றது.
மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளர் பூ.இராசேந்திரபாபு அனைவரையும் வரவேற்றார்.நிகழ்ச்சிக்கு மாவட்டச் செயலாளர் செ.பொன்முடி, மாவட்ட விவசாயணி தலைவர் இல.ஆறு முகம், மாவட்ட துணைத் தலைவர் வ.ஆறு முகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கிருட்டினகிரி மாவட்ட கழகத் தலைவர் கோ.திராவிடமணி தொடக்கவுரை யாற்றினார்.
கழக மாநில மகளிரணி செயலாளர் தகடூர் தமிழ்ச்செல்வி, மாநில பகுத்தறிவாளர் கழக துணைப் பொதுச்செயலாளர் அண்ணா சரவணன் ஆகியோர் தந்தை பெரியாரின் வைக்கம் போராட்டத்தை விளக்கியும், தமிழ்நாடு, கேரள இரு மாநில முதலமைச்சர்கள் இணைந்து வைக்கத்தில் தந்தை பெரியாரின் மனித உரிமை போராட்டத்தின் நூற்றாண்டு விழாவினை வைக்கத்தில் பெரியார் நினைவகம், நூலகம், அருங்காட்சியகம் புதுப்பித்து நூற்றாண்டு விழாவை சிறப்பாக கொண்டாடி சிறப்பித்த தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும் கேரள முதலமைச்சர் பினராய் அவர்களுக்கும் நன்றியை தெரிவித்தும், திராவிட மாடல் அரசின் பல்வேறு வரலாற்றுச் சாதனைகளை எடுத்துக் கூறியும், தந்தை பெரியாரும் புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கரும் மனித உரிமைகளுக்காக போராடிய மாபெரும் புரட்சியாளர்கள் என்பதை எடுத்துக் கூறியும், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் மாணவ பருவம் தொட்டு திராவிடர் கழகத்தில் தன்னை ஒப்படைத்துக்கொண்டு தந்தை பெரியாரின் வாழ்நாள் மாணவராக உலகம் முழுவதும் அவரது கொள்கையை பரப்பிவரும் ஒப்பாரும் மிக்காரும்மில்லா தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் பெரும்பணிகளை விளக்கியும் சிறப்புரையாற்றினர்.
கூட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒன்றிய பொருளாளர் இரகு தேவராஜ், பெரியார் பிஞ்சுகள் அ.சஞ்சய், அ.சஞ்சனா ஆகியோர் பேசினர்.
கூட்டத்தில் மக்கள் அதிகாரம் மாவட்ட நிர்வாகி ச.அருண், விசிக ஒன்றியச் செய லாளர் பெ.சசிகுமார், மாவட்ட ப.க.துணைத் தலைவர் மு.வேடியப்பன், கிருட்டினகிரி கழக ஒன்றியத் தலைவர் த.மாது, மத்தூர் ஒன்றியத் தலைவர் கி.முருகேசன், இராமாபுரம் தோழர்கள் மு.இரஞ்சித், மு.புகழேந்தி, செ.இளவரசி உள்பட அனைத்து கட்சி பிரமுகர்களும் தோழர்களும் பெரும் அளவில் கலந்துக்கொண்டனர்.மாணவ செல்வங்கள் பெரும் அளவில் கலந்து கொண்டு கூட்டம் தொடக்கம் முதல் முடியும்வரை இருந்த மாணவ செல்வங்கள் ஒவ்வொருவரும் ஒரு திருக்குறள் கூறினர்.அவர்களுக்கு பாராட்டுகளை தெரிவித்து மாநில மகளிரணி செயலாளர் தகடூர் தமிழ்ச்செல்வி நோட்டுகளை வழங்கி சிற்பித்தார்.நிறைவாக மாணவர் கழகத் தோழர் செ.கலையரசி நன்றி கூறினார்.
அரியலூர்
தமிழ்நாடு, கேரள முதலமைச்சர்களுக்கு நன்றி பாராட்டு விழா, திராவிட மாடல் அரசின் வரலாற்று சாதனைகள் விளக்கப் பொதுக்கூட்டம் அரியலூர் அண்ணா சிலை அருகில் 26.12.2024 அன்று மாலை 6.30 மணிக்குத் தொடங்கி எழுச்சியோடு நடைபெற்றது.மாவட்டத் தலைவர் விடுதலை நீலமேகன் தலைமையேற்க ஒன்றிய தலைவர் சிவக்கொழுந்து வரவேற்புரை யாற்றினார் .அரியலூர் திமுக நகர செயலாளர் இரா.முருகேசன், தெற்கு ஒன்றிய செயலாளர் மா.அன்பழகன், மாவட்ட இளைஞரணி துணைத் தலைவர் ப.மதியழகன் மாவட்ட இளைஞரணி துணை செயலாளர் க.மணிகண்டன் நகர செயலாளர் ஆட்டோ தர்மா உள்ளிட்டவர்கள் முன்னிலை வகிக்க, மாவட்ட செயலாளர் மு.கோபாலகிருஷ்ணன் தொடக்க உரையாற்றினார். மாநில ப.க அமைப்பாளர் தங்கசிவமூர்த்தி, வி.சி.க.மாவட்ட செயலாளர் அங்கனூர் சிவா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர்எம்.இளங்கோவன், தலைமைக் கழக அமைப் பாளர் க.சிந்தனைச் செல்வன் தலைமைக் கழகப்பேச்சாளர் நாத்திக நம்பி, அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் கு.சின்னப்பா ஆகியோர் உரையாற்றியதற்கு பின்னர் கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் சிறப்புரையாற்றினார் .
வைக்கத்தில் நூறு ஆண்டுகளுக்கு முன்னால் மனித உரிமைக்காக பாடுபட்ட தந்தை பெரியாரின் சிறப்புகளை எடுத்துச் சொல்லி அண்மையில் கேரளத்தில் நடை பெற்ற வைக்கம் நூற்றாண்டு நிறைவு விழா நிகழ்ச்சியின் சிறப்புகளை விளக்கி திராவிட மாடல் அரசு ஆற்றி வரும் அரும் பணிகளையும், வைக்கம் விழா எழுச்சியோடு நடைபெற திராவிட மாடல் அரசு செய்த பணிகளையும் போக்குவரத்து துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் அவர்களின் ஆற்றலையும் விளக்கி சிறப்புரையாற்றினார் .
இந்நிகழ்ச்சியில் பொதுக்குழு உறுப்பினர் சி.காமராஜ் காப்பாளர் சு.மணிவண்ணன், மாவட்ட இணைச் செயலாளர் இரத்தின. இராமச்சந்திரன் மாநில இளைஞரணி துணை செயலாளர் சு.அறிவன், மாவட்ட துணை தலைவர் இரா.திலீபன், மாவட்ட துணைச்செயலாளர் பொன்.செந்தில்குமார், மாவட்ட இ.அ.தலைவர் க.கார்த்திக், செயலாளர் லெ.தமிழரசன், அமைப்பாளர் க..செந்தில்,மாவட்ட விவசாய அணி தலைவர் மா.சங்கர் மாவட்ட விவசாய அணி செயலாளர் ஆ இளவழகன், மாவட்ட தொழிலாளர் அணி தலைவர் வெ.இளவரசன், மாவட்ட தொழிலாளர் அணி செயலாளர் மா கருணாநிதி மாவட்ட தொழிலாளர் அணி அமைப்பாளர் சி.கருப்புசாமி மாவட்ட வழக்குரைஞர் அணி அமைப்பாளர் மு .ராசா, செந்துறை ஒன்றிய அமைப்பாளர் சோ.க.சேகர் ஒன்றிய துணைச் செயலாளர் சுப்பராயன்,திருமானூர் நகர செயலாளர் சு.சேகர் செந்துறை ஒன்றிய தலைவர் மு.முத்தமிழ் செல்வன், ஒன்றிய செயலாளர் ராசா.செல்வகுமார்,தா.பழூர் ஒன்றிய தலைவர் ராமச்சந்திரன், ஒன்றிய செயலாளர் பி.வெங்கடாசலம், அரங்கநாடன், விஜய்,பிரகாஷ், விக்னேஷ் உள்ளிட்ட ஏராளமான பொறுப்பாளர்களும் தோழர்களும் பொதுமக்களும் பங்கேற்றனர்.