பார்ப்பான் என்பது -_ ‘மேல்ஜாதிக்காரன்’ என்கிற தத்துவத்தின் மீது கட்டப்பட்டிருக்கின்றது. மேல்ஜாதிக்காரன் என்பது பாடுபடாமல் சோம்பேறியாய் இருந்து ஊரார் உழைப்பில் வயிறு வளர்ப்பது என்கின்ற தத்துவத்தின்மீது கட்டப்பட்டிருக்கின்றது. இதை நன்றாய் உணர்ந்து, இந்தத் தத்துவ அடிப்படையை இடித்தெறிய முயன்றோமானால், பார்ப்பனர்கள் என்கிற வார்த்தையே நாட்டில் இல்லாமல் போய்விடும். பார்ப்பனர் மாத்திரமல்ல – ஒரு ஜாதிக்கு மற்றொரு ஜாதி மேல் என்கின்ற தத்துவமே அழிந்து விடும். அது மாத்திரமல்லாமல், ஜாதிமுறையே அடியோடு அழிந்து விடும்.
(‘குடிஅரசு’ 5.3.1933)