சிங்கப்பூர் திராவிடர் கழக மேனாள் தலைவர் நடராசன் அவர்களின்
துணைவியார் திருமதி அன்னபூரணி அம்மாள் மறைவு
1967-களில் சிங்கப்பூர் திராவிடர் கழகத்தின் (சிங்கப்பூர் நாட்டு அரசால் பதிவு செய்யப்பட்ட அமைப்பு அப்போது) தலைவராக பல ஆண்டுகள் தொண்டாற்றிய பெரியார் பெருந்தொண்டர் மானமிகு நடராசன் அவர்களது துணை வியார் திருமதி அன்னபூரணி நடராசன் (வயது 89) அவர்கள் நேற்றிரவு (19.7.2023) சிங்கப் பூரில் உடல் நலக் குறைவு காரணமாக காலமானார் என்ற துயரச் செய்தி கேட்டு மிகவும் வருந்துகிறோம்.
1967இல் நான் முதன் முதலில் சிங்கப்பூர் சென்றபோது வரவேற்று, நிகழ்ச்சிகளை ஒருங்கமைத்து – அன்றைய திராவிடர் கழக முக்கிய தோழர்களான சு.தெ. மூர்த்தி, நாகரத்தினம், முருகு சீனுவாசன், இராமச்சந்திரன் மற்றும் தோழர்களுடன் சிறப்பாக செயல்பட்ட பண்பாளர் திரு. நடராசனார். அவரது துணைவியாரும் இயக்கத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர் ஆவார்.
மீண்டும் சில ஆண்டுகள் கழித்து நான் சிங்கப்பூருக்குச் சென்ற போது நடந்த பெரியார் விழாவில் திருமதி அன்னபூரணி அம்மாளை அழைத்து வெகுவாகப் பாராட்டிச் சிறப்பிக்கப்பட்டது.
மறைவுச் செய்தியை கேட்டவுடன், அவரது மருமகன் நண்பர் ராஜகண்ணு அவர்களுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு இரங்கலையும், ஆறுதலையும் கூறினோம்.
அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும் நமது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் உரித்தாக்குகிறோம்.
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
20-7-2023