டில்லி காசியா பாத் பகுதியில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் வெளிநாடு சுற்றுலாப் பயணிகளும் உள்ளூர் கிறிஸ்தவர்களும் இணைந்து கிறிஸ்துமஸ் விழா கொண்டாடிக் கொண்டு இருக்கும் போது அங்கே கூட்டமாக வந்த சங்கிகள் கூட்டம் ஹரே ராமா ஹரே கிருஷ்ணா, ஜெய் சிறீராம், ஜெய் சிறீராம் என்று கத்தி கூச்சலிட்டு இடையூறு செய்தனர். இதனைத் தட்டிக்கேட்ட நிர்வாகத்திடம் உங்கள் விடுதிக்குள்ளே வந்து நாங்கள் ஒன்றும் செய்யவில்லை. சாலையில் துளசி திவஸ் கொண்டாடுகிறோம் இதைக் கேட்க நீங்கள் யார் என்று கூறி மிரட்டல் விடுக்கவே விடுதி நிர்வாகம் வேறு வழியின்றி கிறிஸ்துமஸ் கொண்டாட வந்தவர்களிடம் மன்னிப்புப் கேட்டு அவர்களை பத்திரமாக அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.